அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி தாக்கு பிடித்து, வெற்றி பெறுவது?

அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி தாக்கு பிடித்து, வெற்றி பெறுவது?

இன்று பெரும்பாலான மக்கள் அலுவலகம் செல்கின்றனர். பள்ளி அல்லது கல்லூரி படிப்பை முடித்து விட்டாலே, அடுத்தது செல்ல வேண்டியது அலுவலகம் தான் என்று ஒரு விதி ஏற்பட்டு விட்டது. ஆனால், அலுவலகம் செல்வது அவ்வளவு எளிதானதா?

நிச்சயம் இல்லை!

அலுவலகத்தில் பல வயதினரும், ஆண், பெண் அன்று அனைவரும், வெவ்வேறு பதவியும், இருப்பார்கள். அனைவரையும் எளிதாக சமாளிப்பது என்பது சவாலானது. சில சமயம் உங்கள் மீது தவற இருக்கலாம், அல்லது பிறர் மீது தவறு இருக்கலாம். அனால் விடயம் என்னவோ நீங்கள் நிச்சயம் ஏதாவது ஒரு அரசியல் அல்லது பிரச்சனையில் சிக்காமல் அலுவலகத்தில்(office) தொடர்ந்து உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது. அத்தகைய பிரச்சனைகள் குறிப்பாக பலவீனமானவர்களை பெரிதும் பாதித்து விடக் கூடும். இதனால் அவர்கள் எதிர் காலமே பாதித்து விடக் கூடும்.

சரி, இதில் இருந்து எப்படி தப்பித்து, வெற்றி பெறுவது? இங்கே உங்களுக்கான குறிப்புகள்:

1. உங்கள் பலத்தின் மீது கவனம் செலுத்துங்கள்

அனைவருக்கும் ஒரு பலம் இருக்கும். அதனை கண்டறிவது மிகவும் முக்கியம். அப்படி உங்களுக்கு இருக்கும் பலத்தை நீங்கள கண்டறிந்து அதன் மீது கவனம் செலுத்தி உங்கள் குறிக்கோளை நோக்கி செல்ல வேண்டும். எத்தகைய அரசியல் உங்களுக்கு எதிராக அலுவலகத்தில் நடந்தாலும், அவற்றை பெரிதாக கண்டு கொள்ளாமல், உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும்.

2. உங்களுக்கு எதிராக பிரச்சனைகளை உண்டாக்குபவரை கண்டறியுங்கள்

Pexels

உங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் அலுவலகத்தில் வந்து கொண்டே இருகின்றது என்றால், அதற்கு முக்கிய காரணம் யார் என்று கண்டறியுங்கள். முடிந்த வரை அவரிடம் இருந்து விலகி இருங்கள், அல்லது அவரை உங்களுக்கு நண்பராக்கிக் கொள்ளுங்கள். எனினும், எப்போதும் அவர் மீது ஒரு கண் இருக்க வேண்டும். ஏனென்றால், எந்த நேரத்தில் அவர் உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்க கூடும் என்று கூற முடியாது. மேலும் உங்கள் மீது அவர் குறை கண்டு பிடிக்க முடியாத வகையில், உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தி சரியாக செய்து முடித்து விடுங்கள்.

3. அனைவருக்கும் உதவி செய்யுங்கள் / உதவி பெறுங்கள்

உங்கள் அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நான் ஏன் இதை செய்ய வேண்டும், என்று உதாசினப்படுத்தாமல், உதவி செய்யுங்கள். மேலும் உங்களுக்கு தேவைப் படும் போது, சிறு உதவிகளையும் அவர்கள் தானாக முன் வந்து செய்யும் போது, புன்னகையோடு பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் அனைவருக்குள்ளும் நல்ல நட்பை உண்டாக்கக் உதவியாக இருக்கும். பிரச்சனைகளும் குறையும்.

4. புகார் கூறாதீர்கள்

Pexels

எப்போதும், எந்த சூழலிலும், உங்கள் மீது தவறே இல்லை என்றாலும், முடிந்த வரை மற்றவர்களை பற்றி மேல் அதிகாரிகளிடம் தானாக சென்று புகார் கூறுவதை தவிர்த்து விடுங்கள். மேலும் உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் மற்றவர்களை பற்றி புரணி பேசுவது, என்று எதுவும் செய்யாதீர்கள். நல்லதோ, கேட்டதோ, யாரை பற்றியும் அலுவலகத்தில் பேசாதீர்கள்.  அது உங்களுக்கு எதிராக மாறிவிடக் கூடும். பிரச்சனைகளும் அதிகரித்து விடக் கூடும்.

5. பிறர் சொந்த பிரச்சனைகளில் தலையிடாதீர்கள்

இது மிகவும் தவறான ஒரு செயலாகும். பிறர் சொந்த வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கு நீங்கள் ஆலோசனை தருகிறேன், உதவி செய்கிறேன் என்று, தானாக சென்று எதுவும் செய்யாதீர்கள். அவர்களாகவே வந்து உங்களிடம் அவரது சொந்த பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளாத வரையிலும், நீங்கள் அதனை பற்றி நேரடியாகவோ, அல்லது, பிறர் மூலமாகவோ தெரிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள். இது உங்களுக்கு அவப்பெயரை உண்டாகி விடக் கூடும்.

6. உங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்

Pexels

குறிப்பாக நீங்கள் முன் கோபக்காரராக இருந்தாலோ, அல்லது பிறர் விடயத்தில் அதிகம் ஆர்வம் காட்டக் கூடியவராகவோ இருந்தால், குறிப்பாக உங்களது ஏதாவது ஒரு குணம் உங்கள் உத்தியோக முன்னேற்றத்தையே பாதித்து விடக் கூடும் என்று இருந்தால், அதனை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

7. வழியை மாற்றிக் கொள்ளுங்கள்

நீங்கள் வெற்றி (success) பாதையை நோக்கி செல்ல ஒரு வழியை தேர்வு செய்து அது உங்களுக்கு செயல்படவில்லை என்றால், வேறு வழியை நன்கு சிந்தித்து தேர்வு செய்யுங்கள். ஒரு அலுவலகத்தில் நீங்கள் பலருடன் சேர்ந்து வேலை பார்க்கும் போது, பல அரசியல்களும், போட்டிகளும் இருக்கும். எனினும், அவற்றை அகற்றி விட்டே நீங்கள் முன்னோக்கி செல்ல வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்காக தேர்வு செய்த வழி, தவறாகி விட்டால், நன்கு சிந்தித்து ஒரு சரியான பாதையை தேர்ந்தெடுத்து, அதை நோக்கி உங்கள் முயற்சிகள் இருக்க வேண்டும்.  

மேலும் படிக்க - வேலைக்கு செல்லும் பெண்கள் எவ்வாறு உடை அணியலாம்? 

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!