அரசியல் என்று வந்து விட்டாலே, சவால்களும் கூடவே வந்து விடும். அதிகளும் குறிப்பாக அலுவலகத்தில் நடக்கும் அரசியல், ஒருவரது எதிர் காலத்தையே கேள்வி குறியாக்கிவிடும் என்று கூறினால், அது மிகையாகாது.
ஆனால், இந்த அரசியலை எப்படி சமாளிப்பது?
நீங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலுக்கு (office politics) பலியாகி விட்டால், பின்னர் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வது என்பது கடினமாகி விடும். அதனால், நீங்கள் உங்களுக்கு எதிராக அரசியல் நடகின்றது என்பதை புரிந்து கொண்ட அடுத்த நிமிடமே, அதனை முறியடித்து, முன்னேறுவதற்கான வேலைகளை செய்யத் தொடங்க வேண்டும். அது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்:
1. நல்ல தொடர்புகளை உண்டாக்கிக் கொள்ளுங்கள்
Pexels
நீங்கள் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த உடனே அங்கு வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுடனும் ஒரு நல்ல நட்பை உண்டாக்கிக் கொள்ளுங்கள். முடிந்த வரை யாரிடமும் எதிர்மறை எண்ணங்களையோ அல்லது வெறுப்பையோ காட்டி விடாதீர்கள். அப்படியே உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், அவருடன் நெருக்கமான நட்பை வளர்க்கவில்லை என்றாலும், பகை உண்டாகும் வகையில் நடந்து விடாதீர்கள்.
2. எப்போதும் விழிப்புணர்வோடு இருங்கள்
எப்போதும் உங்களை சுற்றி என்ன நடகின்றது என்பதை பற்றி விழிப்புணர்வோடு இருங்கள். இப்படி இருந்தால் மட்டுமே, உங்களால் யார் உங்களுக்கு உதவுகின்றார்கள், யார் உங்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள், உங்கள் முதுகில் குத்தும் வேலையை யார் செய்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரிய வரும். அதற்கு ஏற்றார் போல், நீங்கள் புத்திசாலித் தனமாக செயல்பட வேண்டும்.
3. சாமர்த்தியமாக நடந்து கொள்ளுங்கள்
Pexels
உங்களுக்கு எதிராக அரசியல் நடகின்றது என்று தெரிந்த உடன், நீங்கள் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் உங்களுக்கு எதிரானவரை கண்டறிந்து விட்டால், அவரிடம் முதலில் வெறுப்பையோ, பகைமையையோ காட்டாமல், மேலும் ஏன் எனக்கு எதிராக செயல்படுகின்றீர்கள் என்று நேருக்கு நேராகவும் கேட்டு விடாமல், அவருடன் நட்போடு இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவரிடம் நல்ல அன்பை பகிர்ந்து, அவருக்கு அலுவலக வேலைகளில் உதவியும் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, ஏதாவது ஒரு தருணத்தில் அவருக்குள் குற்ற உணர்வு தோன்றக் கூடும். இது அவர் உங்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தும் என்னத்தை அவருக்குள் உண்டாக்கும்.
4. சண்டை போடாதீர்கள்
உங்களுக்கு ஒரு அலுவலகத்தில் பிரச்சனைகளை உண்டாக்குகின்றார் என்று தெரிந்து விட்டால், அவரிடம் சென்று சண்டை போடாதீர்கள். மாறாக அவர் உங்களுக்கு உண்டாக்கிய பிரச்சனைகளை எப்படி அமைதியாகவும், சாதூர்யமாகவும் சரி செய்வது என்று சிந்தித்து செயல்ப் படுங்கள். இப்படி அவரது முயற்சிகளை நீங்கள் அமைதியாக, சேதம் இன்றி, சண்டை இன்றி முறியடிக்கும் போது, ஒரு தருணத்தில் அவர் சோர்ந்து விடுவார்.
5. அமைதியாக இருங்கள்
Pexels
எந்த காரணம் கொண்டும் உணர்ச்சிவசப் பட்டு உங்கள் கோபத்தை வெளிபடுத்தி விடாதீர்கள். மிக அமைதியாக இருந்து, நடப்பதை கவனியுங்கள். உங்களுக்கு உண்டாகும் தாக்கத்தை எப்படி கையாளுவது என்று சிந்தியுங்கள். நீங்கள் அமைதியாக இருந்து செயல்படும் போது, உங்கள் மனம் மற்றும் மூளை சரியாக சிந்தித்து, இந்த அரசியலில் இருந்து நீங்கள் வெளி வர ஒரு நல்ல வழியை காட்டும்.
6. மன்னித்து மறந்து விடுங்கள்
நீங்கள் உங்களுக்கு எதிராக அரசியல் செய்பவரை கண்டறிந்து விட்டால், அவரை பழிவாங்கும் விதமாக நீங்கள் செயல்படக் கூடாது. மாறாக வரை மன்னித்து, நடந்ததையும் மறந்து, அவருடன் நல்ல நட்போடு இருக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் நற்பெயர் உயருமே தவிர, உங்களுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாது.
7. புரிய வையுங்கள்
Pexels
உங்களுக்கு எதிராக செயல்படுவரிடம், அவர் நினைப்பது போல நீங்கள் அவருக்கு எதிரானவரோ அல்லது அவர் முன்னேற்றத்திற்கு எதிரானவரோ இல்லை என்பதை புரிய வையுங்கள். இப்படி செய்யும் போது அவருக்கு உங்கள் மீது இருக்கும் கோபம் மறைந்து, உங்களுக்கு எதிராக செயல்படும் என்னத்தை அவர் விட்டு விடக் கூடும்.
8. ஒற்றுமையை வெளிபடுத்துங்கள்
மேலும், ஒருவருக்கு ஒருவரை பிடிக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நீங்கள் எதார்த்தங்களை புரிந்து கொண்டவராய், அவர் உங்களுக்கு எதிராக செயல்பட்டாலும், உங்களை ஒதுக்கி வைத்தாலும், நீங்கள் அவருடன் சேர்ந்து ஒரு குழுவாய் ஒன்று கூடி அலுவலக பணிகளை செய்ய முயற்சி செய்யுங்கள். இப்படி ஒற்றுமையாக வேலை பார்க்கும் போது, பொறுப்புகளும் பகிரப்படும். இதனால், தனது குழு நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டாகும். இது ஒருவர் மற்றொருவருக்கு எதிராக செயல்படாமல், மாறாக நம் குழு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் நட்போடு நேர்மறை எண்ணங்களோடு வேலை பார்ப்பார்கள். அரசியலும் குறையும்.
மேலும் படிக்க – உங்கள் மேலாளர் மிகவும் மோசமானவரா? அவரை கையாள இங்கே உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்!
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!