கால்சியம் சத்து நிறைந்த ஆரோக்கிய சாலட் வகைகள்... வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்!

கால்சியம் சத்து நிறைந்த ஆரோக்கிய சாலட் வகைகள்... வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்!

கால்சியம் நிறைந்த உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூட்டுவலி, முதுகுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகுவதற்கு கால்சிய சத்து குறைபாடு முக்கிய காரணமாக அமைகிறது. 

அதிலும் பெண்கள் கால்சிய சத்து குறைபாடு பிரச்சினையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது. அந்த வகையில் கால்சியம் சத்து நிறைத்த ஆரோக்கியமான சாலட்டை (salad) வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம். 

தக்காளி சாலட்

தேவையான பொருட்கள் :

தக்காளி - 2, 
வெங்காயம் - 1, 
வெள்ளரிக்காய் - 1, 
மிளகு தூள் - ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு. 

youtube

செய்முறை :

தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக்காய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக கலக்கவும். கடைசியாக உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். தக்காளியில் வைட்டமின் கே, கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. 

மேலும் படிக்க - இறுதி மாதவிடாய் நாட்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன?

அத்திப்பழ சாலட்

தேவையான பொருட்கள் :

உலர்ந்த அத்திப்பழம் - 100 கிராம்,
தேன் - 50 மி.லி.,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
கிராம்புத்தூள் - 1 சிட்டிகை,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.

youtube

செய்முறை :

உலர்ந்த அத்திப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒர பாத்திரத்தில் நறுக்கிய அத்திப்பழத்தை போட்டு அத்துடன் தேன், மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். உலர்ந்த அத்திப்பழ சாலட் (salad) ரெடி.

மேலும் படிக்க - குளிர்காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான சூப் வகைகள்

பீன்ஸ் சாலட்

தேவையான பொருட்கள் : 

பீன்ஸ் - 10,
கேரட் - ஒன்று,
உருளைக்கிழங்கு - ஒன்று,
ஆப்பிள் - ஒன்று,
தயிர் - ஒரு கப்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.     

youtube

செய்முறை:

தயிரை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும். பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு  ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, வேகவைத்து நன்றாக ஆறவிடவும். பிறகு பொடியாக நறுக்கிய ஆப்பிள், வடிகட்டிய தயிர், உப்பு, மிளகுத்தூள், கடுகு பொடி ஆகியவற்றை ஆறவைத்த காய்கறிகளுடன் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து (salad) பரிமாறவும்.

கோஸ் சாலட்

தேவையான பொருட்கள் : 

நறுக்கிய பச்சை கோஸ் - 1 கப்,
நறுக்கிய சிவப்பு கோஸ் -  1 கப்,
வெங்காயம் - 1 தயிர் - 1 கப்,
சர்க்கரை - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

youtube

செய்முறை:

பச்சை கோஸ், சிவப்பு கோஸ், வெங்காயம் ஆகிய காய்கறிகளை நன்றாகக் கழுவி துடைத்துநீள நீளமாக நறுக்கவும். தயிரை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும். வடிகட்டிய தயிருடன் சர்க்கரை, உப்பு, கடுகு பொடி, மிளகுத்தூள், வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு ஆகிவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் நறுக்கிய காய்கறிகளை ஒரு பெரிய பவுலில் போட்டு நன்கு கலந்து பரிமாறவும்.

மேலும் படிக்க - குங்குமப்பூவின் அழகு மற்றும் ஆரோக்கிய பயன்கள்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!