உடல் ஆரோக்கியம் காக்கும் கற்பூரம்... தினமும் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

உடல் ஆரோக்கியம் காக்கும் கற்பூரம்... தினமும் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

அனைத்து வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் ஓர் பொருள் தான் கற்பூரம். இந்த கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது இறை வழிபாட்டில் கற்பூரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பூஜையின் நிறைவாக கற்பூர ஆரத்தி காண்பிப்பது வழக்கம். 

கற்பூரத்தின் (camphor) மகிமையை அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் அறிந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  கற்பூரம் வழிபாடுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. அவைகள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம். 

மனதை அமைதியாக்க : கற்பூரத்தை வாசனை மனதை ஒருநிலைப்படுத்துவதோடு, சுவாசப்பையை சுத்தப்படுத்தும் ஆற்றல் நிறைந்தது. இதன் வாசனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியது. 

pixabay

கிறுமி நாசினி : கற்பூரம் எரிந்து அதன் வாசனை காற்றோடு கலக்கும்போது சுற்றி இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படுகிறது.  அதாவது கற்பூரத்தை நறுமணம் கிறுமி நாசினியாகவும் பயன்படுகிறது. இதில் உடலுக்கு நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது. 

சளியை குறைக்க : கற்பூரம் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். இது நெஞ்சு சளியை இளக செய்து வெளியேற்ற உதவியாக இருக்கும்.  4-5 துளிகள் கற்பூர எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து நெஞ்சுப் பகுதியில் நன்கு சில நிமிடங்கள் சூடு பறக்க தேய்க்க வேண்டும். விரைவில் நிவாரணம் பெறலாம். 

மேலும் படிக்க - அனைத்து வித சரும பிரச்சனைகளையும் நீக்க கடலை மாவு ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

இருமலை சரிசெய்ய : நாள்பட்ட இருமலை சரிசெய்வதற்கு கற்பூர எண்ணெய் கொண்டு ஆவி பிடிப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். நல்ல சூடான நீரில் சில துளிகள் கற்பூர எண்ணெய் (camphor) சேர்த்து கலந்துஅந்நீரால் ஆவி பிடியுங்கள். இதனால் நெஞ்சு வலி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

 

pixabay

தசை வலிகளுக்கு : சில வகையான தசை வலிகளுக்கு கற்பூரம் சிகிச்சை அளிக்கும். இதற்கு கற்பூரத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். அதற்கு 5-6 துளிகள் கற்பூர எண்ணெயுடன், 1-2 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அந்த எண்ணெயை வலியுள்ள பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்துவந்தால் விரைவில் குணமாகும். 

பாத வெடிப்பை குணப்படுத்த : கால் வெடிப்புகளை குணப்படுத்த கற்பூரம் சிறந்த மருந்து. அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் சிறிது கற்பூரத்தை போட்டு கலந்து கால்களை முக்கி வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால் கால் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகு பெறும். 

மேலும் படிக்க - சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

பூச்சிக்கொல்லி : கற்பூரம் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும். அரை கப் சுடுநீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அத்துடன் 20 துளிகள் கற்பூர எண்ணெய் (camphor) சேர்த்து நன்றாக கலந்து பூச்சி அல்லது கொசுக்கள் வரும் பகுதிகளில் தெளிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் 4-5 கற்பூரத்தைப் போட்டு அறையில் வைத்தாலும் கொசுக்கள் வராது

தலைவலியை போக்க : கற்பூரத்திற்கு தலைவலியை போக்கும் சக்தியும் இருக்கிறது. கற்பூரத்தை சந்தனம் அல்லது துளசி சாற்றில் குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி நீங்கிவிடும். எலுமிச்சை சாற்றில் சிறிது கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்தாலும் தலைவலி கட்டுக்குள் இருக்கும். 

pixabay

உறுதியான கூந்தலுக்கு : முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூரத்தை கலந்து தினமும் கூந்தலில் தேய்த்து வரலாம்.  இது வேர்களை உறுதியாக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். துளசி சாறில் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, பேன் தொல்லைகள் நீங்கும்.  

பருக்களை நீக்க : கற்பூரம் பருக்களைப் போக்க உதவும். மேலும் சருமத்தில் கருமையான தழும்புகள் ஏற்படாமலும் தடுக்கும்.1 கப் சுத்தமாக தேங்காய் எண்ணெயை காற்றுப் புகாத ஒரு ஜாரில் ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க - சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ : பயன்படுத்தும் முறைகள்& பேஸ் பேக்குகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!