காளானில் உள்ள லென்ட்டைசின் எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு படிவதை காளான் தடுக்கிறது. காளானை உணவாக உட்கொள்வதன் மூலம் சத்துப் பற்றாக்குறையை போக்க முடியும்.
காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் உள்ளன. காய்கறிகள், பழங்களைவிட காளானில் (mushrooom) அதிக புரதச் சத்து உள்ளது. காளானை பயன்படுத்தி செய்யக்கூடிய சிம்பிளான ரெசிபிகள் குறித்து இங்கு காண்போம்.
pixabay
காளான் சூப்
தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்,
புதினா மற்றும் மல்லி – சிறிது,
சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு, வெண்ணெய் – தேவையான அளவு,
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பொடியாக நறுக்கிய காளானை (mushrooom) வேக வைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து புதினா மற்றும் மல்லியை சேர்த்து வதக்கி அதனுடன் சோள மாவை சேர்த்து கிளற வேண்டும். பின்பு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு வேக வைத்துள்ள காளானை அத்துடன் சேர்த்து10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். சுவையான காளான் சூப் ரெடி!
காளான் கிரேவி
தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு ,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு
அரைப்பதற்கு…
வெங்காயம் – 1,
தக்காளி – 2,
பட்டை – 1 இன்ச்,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
ஏலக்காய் – 1,
கிராம்பு – 2,
சீரகம் – 1 டீஸ்பூன்,
சோம்பு – 2 சிட்டிகை.
செய்முறை:
முதலில் காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனைஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
காளான் பிரியாணி
தேவையான பொருட்கள் :
காளான் – 1/2 கிலோ,
பாசுமதி அரிசி – 2 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 2,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி – 1/4 கப்,
புதினா – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 3,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
நெய் – 3 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் பால் – 1/2 கப்,
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
மல்லி தூள் – 2 டீஸ்பூன்,
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
பிரியாணி இலை – 1,
ஏலக்காய் – 3,
இலவங்கம் – 2,
கிராம்பு – 5,
தண்ணீர் – 3 கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் காளானை (mushrooom) ஈரமான துணியால் துடைத்து சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். நன்கு வதக்கியதும் காளானை போட்டு பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் அரிசியைக் கழுவி போட்டு 3 கப் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். காளான் பிரியாணி தயார்!
காளான் பக்கோடா
தேவையான பொருட்கள் :
காளான் (mushroom) – 200 கிராம்,
பிரெட் – 6 ஸ்லைஸ்,
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு 1/2 கப்,
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
உடைத்த முந்திரி – 10,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 2,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
செய்முறை :
காளானை கழுவிய பின் பொடியாக நறுக்கவும். பிரெட்டை பிய்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 1 டேபிள்ஸ்பூன் நெய்யை ஓர் அகலக் கிண்ணத்தில் போட்டு, அதோடு மாவு வகைகள், உப்பு, மிளகாய் தூள், மற்ற பொருட்களையும் சேர்த்து விரல்களால் பிசறி விடவும். சூடான எண்ணெயில் பக்கோடா போல கரகரப்பாக பொரித்தெடுக்கவும். மிகவும் ருசியாக இருக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!