ஆலமர எண்ணெய்? இது கேட்க சற்று புதிதாக இருக்கலாம்!எனினும், உண்மை! ஆலமர எண்ணெய் பல நன்மைகளை (banyan oil uses) உடலுக்கு தருகின்றது. இதனை சரியான விதத்தில் பயன்படுத்தும் போது, எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். குறிப்பாக பல உடல் உபாதைக்லியா குணப்படுத்த இந்த எண்ணெய் பெரிதும் உதவியாக இருகின்றது. இந்த எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். இந்த எண்ணெய்யை மக்கள் 2௦௦௦ ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றம், மற்றும் பிற சத்துக்கள் உள்ளது.
ஆலமர எண்ணெய் எப்படி உங்கள் உடல் நலனுக்கு பயன் தருகின்றது என்று இங்கே பார்க்கலாம்
இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை, தலைமுடி உதிர்வு. இதனால், அவர்கள் முக அழகு பாதிப்பதோடு, தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படுகின்றனர். எனினும், தினமும், இந்த ஆலமர எண்ணெய்யை சிறிது தலைமுடியின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பாதத்தில் ஏற்படும் வெடிப்பு, பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக இருகின்றது. இதனால் சரியாக நடக்க முடியாமலும், காலில் வலி ஏற்பட்டும், எரிச்சல் உண்டாகியும் அவதிப் படுகின்றனர். தினமும், பாதன்காலில் இந்த எண்ணெய்யை இரவு தூங்க செல்லும் முன் நன்கு தேய்த்து வந்தால், பாத வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் மற்றும் பூஞ்சை தாக்குதல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
அலுவலகத்தில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், மற்றும் வயது மூப்பு காரணமாகவும் முதுகு வலி பலருக்கும் இன்று ஏற்படுகின்றது. இதில் இருந்து விடு பட, சிறிது ஆலமர எண்ணெய்யை எடுத்து, மிதமாக சூடு செய்து முதுகில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தில் ஏற்படும் அரிப்பு, வறட்சி, பருக்கள், கரும்புள்ளி, கரும் வளையம் போன்ற பிரச்சனைகள் நீங்கள் இந்த ஆலமர எண்ணெய் பயனுள்ளதாக உள்ளது. தினமும் சிறிது ஆலமர எண்ணெய்யை எடுத்து, மிதமாக சூடு செய்து உங்கள் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்து, வந்தால், நாளடைவில் சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். மேலும் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் இந்த எண்ணெய் தரும்.
உடலில் ஏற்படும் புண், வெக்கம் மற்றும் வேறு சில காயங்களை போக்க இந்த ஆலமர எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருகின்றது. தினமும், புண் ஏற்பட்ட இடத்தில் இந்த எண்ணெய்யை தடவி வந்தால், விரைவாக நல்ல பலனை எதிர் பார்க்கலாம். மேலும் இது காயங்கள் பரவாமலும், நோய் தாக்கம் ஏற்படாமலும் பாதுகாக்க உதவும்.
பற்கள் மற்றும் வாயில் பல நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் கூச்சு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதனை போக்க,. தினமும் ஆலமர எண்ணெய்யை வாயில் சிறிது ஊற்றி நன்கு கொப்பளிக்க வேண்டும். நல்லெண்ணையில் ஆயில் புல்லிங் செய்வது போல செய்ய வேண்டும். இது உங்களுக்கு நல்ல பலனை நிச்சயம் தரும்.
வயிற்றில் ஏற்பாடு நோய் தொற்று அல்லது அஜீரணம் போன்ற காரணத்தால் வயிற்றில் ப்ரச்சங்கியால் ஏற்படக் கூடும். இதனை போக்க, சிறிது ஆலமர எண்ணெய் எடுத்து, அதில் தேன் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து அருந்த வேண்டும். இது விரைவாக நீங்கள் குணமடைய உதவும்.
மூல பிரச்சனையை போக்க ஆலமர எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். இதனை குணப்படுத்த சில துளிகள் ஆலமர எண்ணெய்யை எடுத்து, சூடான பாலுடன் கலந்து தினமும் அருந்த வேண்டும். இப்படி செய்து வந்தால், நாளடைவில், விரைவாக நல்ல பலனை நீங்கள் காணலாம். மேலும் மல சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் அகலும்.
மேலும் படிக்க - ஆலிவ் ஆயிலின் மருத்துவ நன்மைகள் மற்றும் அழகு குறிப்புகள்
பட ஆதாரம் - Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!