இன்று மூன்று ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வார்கள்!

இன்று மூன்று ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வார்கள்!

இன்று வியாழக்கிழமை அஷ்டமி திதி உத்திரம் நட்சத்திரம். மார்கழி மாதம் 2ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை (astro) அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும். மாலையில் வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

ரிஷபம் 

காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு.பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். 

மிதுனம் 

இன்று மனதில், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். குடும்ப மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வெற்றி பெறும் நாள்.

மேலும் படிக்க - #POPxoLucky2020 : உங்கள் ராசிகளுக்கு ஏற்ப எங்களது தயாரிப்புகளை இங்கே தேர்ந்தெடுங்கள்!

கடகம் 

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். உற்சாகமான நாள்.

சிம்மம் 

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு கஷ்டப்படாதீர்கள். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணி நெருக்கடி குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி

இன்று உற்சாகமாக நாளை தொடங்குவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும்,  தாழ்வு மனப்பான்மையும் வந்துச் செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். 

youtube

துலாம்

இன்று அதிர்ஷ்டகரமான நாள். பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். 

மேலும் படிக்க - பனிமழை பொழியும் மார்கழி மாதத்தின் சிறப்பம்சங்களை அறிவோம் வாருங்கள்!

விருச்சிகம்

தெளிவான மனநிலையில் சிந்தித்து நன்றாக செயல்படுவீர்கள். குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.  

தனுசு

நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். புது வாய்ப்புகள்தேடி வரும், மனசாட்சி படி செயல்படும் நாள். கண்களை கவனித்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும். மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். 

மகரம் 

சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வேண்டாவெறுப்பாக பேசுவீர்கள். இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வீண்கோபத்தை தவிர்க்கவும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கும்பம்

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆனாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மீனம் 

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். தேவையான அளவு பொருளாதார நிலை உயரும். சின்னசின்ன அவமானங்கள் ஏற்படும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். மாலையில் உறவினர் அல்லது நண்பர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் மனதில் உற்சாகமும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.  உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

மேலும் படிக்க - வெள்ளிக்கிழமை சகல ஐஸ்வர்யங்களும் உங்கள் வீடு தேடி வர இந்த முறையில் விளக்கேற்றுங்கள் !

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!