இன்று இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் பணம் வருமாம்.. சரி பாருங்கள்!

இன்று இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் பணம் வருமாம்.. சரி பாருங்கள்!

இன்று புதன் கிழமை ஷஷ்டி திதி மகம் நட்சத்திரம். மார்கழி மாதம் 1ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம்

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும் கனவு நனவாகும் நாள்.

ரிஷபம் 

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உழைப்பால் உயரும் நாள். 

மிதுனம் 

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் பேசும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம்  பெறுவார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். 

கடகம் 

இன்று சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.  சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். 

சிம்மம் 

உற்சாகமான நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனம் அமைதியற்ற நிலை ஏற்படும்.குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். ஆனால் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கன்னி

மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடவேண்டியிருக்கும் அலைச்சல் நிறைந்த நாள். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சமூக வாழ்க்கை நிலையாக இருக்கும்.

youtube

துலாம்

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.  குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ்கூடும் நாள்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக இருந்தாலும் முடிந்துவிடும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

விருச்சிகம்

இன்று கவனம் தேவைப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்ப வாழ்க்கை தொடர்பாக முக்கிய  முடிவுகளை எடுப்பீர்கள். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். 

தனுசு

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு  நீங்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து பாராட்டு பெறுவீர்கள். மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம் 

சந்திராஷ்டமம் நீடிப்பதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். 

கும்பம்

எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டிய நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும் சகோதர வழியில் நன்மை உண்டாகும் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எனினும் புது சலுகைகள் கிடைக்கும். 

மீனம் 

உற்சாகமான நாள். ஆனால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். திடீர் யோகம் கிட்டும் நாள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!