சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று பட தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

ஆக்ஷன் வகையில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வரும் 7ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. 

தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

twitter

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க - இதனாலதான் நான் ஆர்யா கல்யாணத்துக்கு வரல... மனம் திறந்த நடிகை பூஜா !

அரசியல் படமாக இல்லாமல், போலீஸ் படமாக உருவாகி வரும் இந்த தர்பார் படத்தில் மறைமுக அரசியல் வாசம் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். இதில் பல முன்னணி நடிகர்கள், தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

twitter

எனினும் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்மையில் தர்பார் படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலான நான் தான்டா இனிமேலு என்ற பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

மேலும் படிக்க - காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்..!

அனிருத்  இசையில் ஏற்கனவே வெளியான சும்மா கிழி என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், மொத்த பாடலும் சனிக்கிழமை வெளியாக உள்ளது. 

twitter

 

பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அனிருத் இரண்டாவது முறை இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி வரவுள்ள நிலையில், கடந்த 2ம் தேதியே அவரது இல்லத்தில் விசேஷ பூஜை ஒன்று போடப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

நடிகர் ரஜினிகாந்தின் நட்சத்திரம் திருவோணம் என்றும், அந்த நட்சத்திரத்தின்படி பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரஜினி தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன. 2021ல் அற்புதம் நிகழும் என சூப்பர்ஸ்டார் கூறியுள்ள நிலையில், அதற்கான பூஜையா என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.  

மேலும் படிக்க - நான் குடிக்கும் முதல் பீர் .... சூப்பர் சிங்கர் பிரகதி பதிவிட்ட புகைப்படத்தால் சர்ச்சை!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!