தயிர், மோர், வெண்ணெய், சீஸ், பனீர் போன்று பாலில் எடுக்கப்படும் யோகார்ட்டும் சத்துக்கள் நிறைந்தது. இதை, இனிப்புத் தயிர் என்று சொல்லலாம். மிதமான பக்குவத்தில் கிரீமாகக் கிடைக்கும் இந்த இனிப்புத் தயிர் உடலுக்கு அதிக நன்மைகளை செய்கிறது.
Table of Contents
- யோகார்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் விவரம் (Nutritional Profile Of Yogurt)
- யோகார்டின் ஆரோக்கிய நன்மைகள் (Health benefits of yogurt)
- யோகார்ட் சரும நன்மைகள் (Skin benefits of yogurt )
- கூந்தலுக்கு யோகார்ட் நன்மைகள் (Hair benefits of yogurt )
- வீட்டிலேயே யோகார்ட் செய்வது எப்படி (How to make yogurt at home )
- கேள்வி பதில்கள் (FAQ’s)
பெரும்பாலும் தயிர் மற்றும் யோகார்ட் இரண்டும் ஒன்று தான் என பெரும்பாலான கருத்துக்கள் நிலவுகிறது ஆனால் இவை இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. இவை தயார் செய்யப்படும் முறைகள், பாக்டீரியாக்களின் அளவுகள், பாலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது. ஆனால் யோகார்ட் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.
யோகார்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் விவரம் (Nutritional Profile Of Yogurt)
யோகார்டில் (yogurt) பல்வேறு ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பாப்போம்.
100 கிராம் யோகார்டில் நிறைந்துள்ள சத்துக்கள்
கலோரிகள் – 59 மி.கி.,
புரதம் – 5.7 மி.கி.,
போலேட் – 12 மி.கி.,
ரிபோப்ளேவின் – 0.2 மி.கி.,
வைட்டமின் பி12 – 0.6 மை.கி.,
வைட்டமின் பி5 – 0.6 மி.கி.,
வைட்டமின் ஏ – 7.0 மி.கி.,
கால்சியம் – 199 மி.கி.,
பாஸ்பரஸ் – 157 மி.கி.,
பொட்டாசியம் – 255 மி.கி.,
துத்தநாகம் – 1 மி.கி. நீர் – 88%,
சர்க்கரை – 4.7 மி.கி,
கொழுப்பு – 3.3 கி.
யோகார்டின் ஆரோக்கிய நன்மைகள் (Health benefits of yogurt)
நமது ஆரோக்கியத்தை காக்கும் ஏராளமான சத்துக்கள் யோகார்டில் உள்ளது. பல்வேறு வகையான யோகார்ட்டுகள் கிடைக்கின்றன. அதில் மிகவும் பிரபலமானதும் எல்லோராலும் விரும்பப்படுவது எதுவெனில் கிரேக் யோகார்ட் தான். யோகார்ட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.
புரதம் நிறைந்தது (High in protein )
யோகார்டில் (yogurt) ஏராளமான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தயிர், யோகார்ட் இரண்டிற்குமான வித்தியாசம் என்பது அதிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற புரதச்சத்துக்களின் அளவு தான் முக்கியம். ஒரு மீடியம் சைஸ் பௌல் தயிரின் மூலம் நமக்கு 3-4 கிராம் அளவு புரதம் கிடைக்கும். அதே அளவுள்ள கிரேக் யோகர்ட்டில் 8 முதல் 10 கிராம் அளவுக்கு புரதச்சத்து கிடைக்கிறது. ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், பசியை அதிகரிக்கவும் புரதம் முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் படிக்க – சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ : பயன்படுத்தும் முறைகள்& பேஸ் பேக்குகள்!
ஒவ்வாமையை குறைக்கிறது (Decreases allergy symptoms )
ஒவ்வாமை பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவில் யோகார்ட் சேர்த்து வந்தால் விரைவில் குணமாகும். யோகார்ட்டும் ஒரு ப்ரோ பயாடிக் உணவு என்பதால் வயிற்றுப் பிரச்சனைகள் இருப்பவர்கள் யோகார்ட் சாப்பிடுவது நல்லது. ஆனால் நிற மூட்டிய ஃப்ளேவர்டு யோகார்ட் சாப்பிட வேண்டாம். அவற்றில் செயற்கை நிறம் இருக்கும். அதனால் நிறமற்ற வெறும் யோகார்ட் சாப்பிடுவது நல்லது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த (Reduce blood pressure )
யோகார்ட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படும். யோகார்டில் உள்ள பொட்டாசியம் நம் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அழிக்க உதவுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் வாய்ப்பு குறைகிறது. சமீபத்தில் 2000க்கும் மேற்பட்டோரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எலும்பு ஆரோக்கியம் மேம்பட (Good for bones )
ஒரு கப் யோகார்ட்டில் சுமார் 275 மி.கி கால்சியம் உள்ளது. கால்சியம் எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல் அவற்றை பலப்படுத்துகிறது. இதனால் பெண்கள் தினமும் யோகார்ட் சாப்பிடுவது ஆரோக்கியமான ஒன்றாகும். இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன. இதனால் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவக்கூடும்.
மூளை செயல்பாட்டை ஊக்குவிக்க (Enhances brain functions)
யோகார்ட் சாப்பிடுவது உங்கள் மூளையில் உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்கவாதம் அபாயத்தை குறைக்க ஏற்கனவே ஒரு பயனுள்ள வழியாக அறியப்பட்ட யோகார்ட் (yogurt) மூலையின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மனநிலையை சமாளிக்க மக்களுக்கு உதவக்கூடும். இதனால் பதட்டம், மன அழுத்தம் மற்றும் வலி ஆகியவை கட்டுக்குள் வைக்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (Builds immunity)
யோகார்டில் இருக்கும் புரோபயாடிக்குகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. இது பல்வேறு நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் சிறப்பாக இருக்கிறது. யோகார்டில் துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை நல்ல ஆரோக்கியத்திற்கு முற்றிலும் அவசியமானவையாகும்.
எடை குறைய உதவுகிறது (Help for weight loss )
உடல் எடையை குறைக்க நினைக்க விரும்புபவர்கள் தாராளமாக யோகார்ட்டை சாப்பிடலாம். யோகார்டில் உடல் எடையினை குறைக்க உதவும் ஏராளமான பண்புகள் உள்ளன. இது உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளைக் குறைக்க உதவும். இதில் நிறைந்துள்ள புரதம் பெப்டைட் போன்ற பசியைக் குறைக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்க கால்சியத்துடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் யோகர்டை உணவில் சேர்த்து வர உடல் பருமன் ஏற்படுவதை குறைக்க உதவி புரிகிறது.
மேலும் படிக்க – குளிர்காலத்திற்கு ஏற்ற 12 சிறந்த ஸ்வெட்டர்ஸ் மற்றும் ஜாக்கெட் ரகங்கள்!
கொழுப்பை குறைக்க (Regulates cholesterol)
யோகார்ட் கொழுப்பை எரிக்க உதவுகிறது.யோகார்டில் இருக்கும் புரதம், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் உடலில் உள்ள கொழுப்பை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் தாராளமாக யோகார்டை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன்களை பெறலாம். மேலும் உடலில் இருக்கும் தசைகளை வலுவாக்கி ஆரோக்கியத்தை காக்க முக்கிய பங்காற்றுகிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்த (Treats asthma)
தயிரில் காணப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாவை உட்கொள்வது உங்கள் நுரையீரல் திசு ஆரோக்கியமாக இருக்க உதவும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. குறிப்பாக, இது ஆஸ்துமா அழற்சியின் அபாயத்தைக் குறைக்கும் இன்டர்லூகின் செல்கள் உற்பத்தியைத் தூண்டக்கூடும். இதனால் ஆஸ்துமாவை குணப்படுத்த அன்றாட உணவில் யோகார்டை சேர்த்து வந்தால் விரைவில் நல்ல முடிவுகளை பெறலாம்.
தொற்றுநோய்களை அழிக்கிறது (Prevents infections)
ஈஸ்ட் தொற்றுநோய்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மையை யோகார்ட் பெற்றுள்ளது. இது குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது. யோகார்டில் இருக்கும் லாக்டோபாகிலஸ் அமிலோபிலஸ், உடலில் பாக்டீரியா தொற்றுநோய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, ஹைட்ரஜன் பெராக்சைடை உற்பத்தி செய்வதன் மூலம் ஈஸ்டை கொன்றும் விடுகிறது. இதனால் நமது உடல் தொற்றுநோய்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
யோகார்ட் சரும நன்மைகள் (Skin benefits of yogurt )
யோகார்ட் கால்சியம் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்தது. இது ஆரோக்கியமட்டுமல்ல நமது அழகுபடுத்தவும் நிறைய நன்மைகளை தருகிறது. யோகார்ட் சருமத்திற்கு மிக அருமையான பலன்களை தருபவை. மாசற்ற முகத்தை பெற யோகார்ட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
சருமத்தை ஈரப்பதமாக்குகிறது (Moisturizes skin)
யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் சுருங்கிய சரும துளைகளை திறந்து சருமத்தை பொலிவாக்குகிறது. மேலும் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை மிருதுவாக்குகிறது. லெமன் ஜூஸ், யோகார்ட், தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கழுத்தில் தடவி உலர்ந்த பின்னர் கழுவி வந்தால் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.
சுருக்கங்களைக் குறைக்கிறது (Reduce wrinkles )
யோகார்ட் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தருகிறது. தினமும் யோகார்டை தடவி வந்தால் சுருக்கங்கள் குறைந்து இளமையான சருமம் பெறலாம். வறண்ட சருமத்திற்கு விரைவில் பலன் தரக் கூடியது. முகம் எளிதில் சுருக்கம் பெறுவதற்கு சருமத்தில் நீர்ப்பற்றாக்குறையும் முக்கிய காரணம். யோகார்ட் சருமத்திற்கு தொடர்ந்து ஈரப்பதம் அளிக்கிறது.
முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது (Fights acne )
யோகார்டிலுள்ள நல்ல பேக்டீரியாக்கள் கிருமிகளுக்கு எதிராக சண்டையிடும். முகப்படுக்களின் வீரியத்தை குறைத்து சருமத்தை லேசாக்கும். அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். ஓட்ஸ் மற்றும் யோகார்ட் சம அளவு எடுத்து அதில் 1 ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் நன்றாக தடவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் எளிதாக நீங்கிவிடும்.
கருவளையத்தை குறைக்கிறது (Reduce dark circles)
சிலருக்கு கண்களுக்கு கீழே அசிங்கமாக கருவளையம் இருக்கும். யோகார்ட் கண்களுக்கு கீழே உண்டாகும் கருமையின் மீது செயல்புரிந்து கருவளையத்தை போக்குகிறது. யோகார்டுடன் மஞ்சள் பொடியை சேர்த்து தினமும் இரவில் தூங்க செல்லும் முன்னர் கண்களில் தடவி வந்தால் விரைவாக கருவளையம் மறையும்.
தோல் நோய்களை சரிசெய்ய (Treats skin infections )
வேப்பிலை பொடி மற்றும் யோகார்ட் சம அளவு எடுத்து, அதில் 1 ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் நன்றாக தடவுங்கள். மூக்கின் ஓரங்களில் பெரும்பாலும் இறந்த செல்கள் அதிகமாய் காணப்படும். அது போன்ற பகுதிகளில், லேசாக அழுத்தம் கொடுத்து தேயுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் நோய்கள் சரியாகும்.
மேலும் படிக்க – தெளிவான மற்றும் அழகான சருமத்திற்கு – தக்காளி பேஸ் பாக்!
கூந்தலுக்கு யோகார்ட் நன்மைகள் (Hair benefits of yogurt )
ஆரோக்கியமான தலைமுடி வளர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்கு அதிக கவனம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். யோகார்ட் தலைமுடிக்கு வேகமாக ஆரோக்கியம் ஊட்ட உதவும் வகையிலான பொருளாகும். இதில் இருக்கும் வைட்டமின், கொழுப்பு ஆசிட் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.
கூந்தலை மிருதுவாக்குகிறது (Conditions hair)
யோகார்ட்டை கூந்தலில் தடவி அலசி வந்தால் கூந்தல் மிருதுவாகும். ஒரு முட்டை, 2 டீ ஸ்பூன் யோகர்டை ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை உங்கள் கூந்தல் முழுவதும் வேர் முதல் நுணி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் இதை குளிர்ந்த நீரில் ஷாம்பு கொண்டு கழுவவும். நீங்கள் இதனை வாரத்தில் 2 முறை செய்தால் கூந்தல் மிருதுவாகும்.
முடி உதிர்வை குறைகிறது (Reduce hair fall )
செம்பருத்தி மலரின் இதழ்கள், யோகார்ட், தேன், ரோஸ்மெரி எண்ணெய் சில துளிகள் சேர்த்து கலந்து மிக்ஸியில் தேவைக்கேற்ப நீர் விட்டு பேஸ்ட் போன்று அரைக்கவேண்டும். அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுள் தேனை சேர்க்க வேண்டும். இந்த கலவையை தலைமுடியின் வேர் கால்களிலிருந்து தடவ வேண்டும். முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு கொண்டு அலசி வந்தால் முடி உதிர்வு குறைந்து கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
பொடுகை நீக்குகிறது (Treats dandruff )
பொடுகு குளிர்காலத்தில் எல்லாருக்குமே பிரச்சனை தரக் கூடியது. இயற்கை முறையில் பொடுகினை ஒழிக்க முற்படுவதே சிறந்த வழி. இதனை சரி செய்ய தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேன், யோகர்ட் இவற்றை ஒன்றாக கலந்து கூந்தலில் தடவ வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும்.
ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவுகிறது (Helps to healthy hair )
வெந்தயம் 1 கப் யோகார்ட், 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை உங்களது ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் நன்கு தடவ வேண்டும். பிறகு மைல்டு சாம்பு போட்டு அலச வேண்டும். இப்பொழுது உங்கள் தலைமுடி மிருதுவாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் இருப்பதை காணலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கு இதனை வாரம் இரண்டு முறை செய்து வரலாம்.
பொலிவான கூந்தலுக்கு உதவுகிறது (Add shine to hair )
முட்டையை எடுத்து நன்கு அடித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1/2 கப் யோகார்ட்டை கலந்து அதை தலையில் நன்றாக தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து 5 நிமிடம் அப்படியே மசாஸ் செய்யுங்கள். பின் 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வர கூந்தல் பொலிவாக காணப்படும்.
வீட்டிலேயே யோகார்ட் செய்வது எப்படி (How to make yogurt at home )
தயிரைக் காட்டிலும் யோகார்ட் கொஞ்சம் விலை அதிகம் தான். அதனால் வீட்டிலேயே செய்து பயன்படுத்துவது கூடுதல் சுகாரத்துடனும் இருக்கும். விலையும் கொஞ்சம் குறைவாக இருக்கும். வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
- முதலில் பால் எடுத்து கொதிக்க வைத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். 100 – 105 பாரன்ஹீட் அளவு வெப்பநிலைக்கு வரும்வரை குளிரவிடுங்கள்.
- பாலாடை மேலே நன்கு படியும்வரை காத்திருக்க வேண்டும். பின்பு அதில் வழக்கமாக தயிர் உறைய வைப்பது போன்று, இரண்டு ஸ்பூன் அளவுக்கு யோகர்ட் சேர்த்து மெதுவாகக் கலக்குங்கள். அதன்மேல் உள்ள ஆடையை தூக்கி எறிந்துவிட வேண்டாம்.
- வெதுவெப்பான தண்ணீரில் இந்த உறை ஊற்றிய கலவையை குறைந்தது 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை (இரவு முழுவதும்) வைத்திருக்க வேண்டும். பின்னர் காலையில் எடுத்து, அதன்மேல் தேங்கியிருக்கும் அதிகப்படியான நீரை மட்டும் வெளியேற்றி விடுங்கள்.
- பயன்படுத்துவதற்கு 4 மணி நேரத்திற்கும் முன்பாக ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தத் தொடங்குங்கள். நான்கு முதல் ஐந்து நாட்கள் வரையிலும் இந்த யோகார்ட்டைப் பயன்படுத்தலாம்.
கேள்வி பதில்கள் (FAQ’s)
தயிர் மற்றும் யோகார்ட் ஒரே சுவையுடையதா? (Does yogurt and curd taste same?)
தயிர் என்பது பாலை உறையவைத்து பெறப்பட்ட ஒரு பால் தயாரிப்பு. தயிரில் லாக்டிக் ஆசிட் உள்ளது. தயிர், யோகார்ட்டை விட சற்று அதிக புளிப்பு தன்மையுடன் இருக்கும். சில வகை யோகார்ட் இனிப்பு தன்மையுடனும், நிறமூட்டிகள் சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.
தினமும் யோகார்ட் சாப்பிட்டால் என்ன ஆகும்? (What happens if you eat yogurt everyday?)
தினமும் யோகார்ட் தவறாமல் சாப்பிடுவோர் குடலில் வைட்டமின் பி தயாரிக்க உடலுக்கு உதவுகிறது. யோகார்ட் உள்ள லாக்டிக் அமிலம் பாக்டீரியா புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தொற்றுகள், இரைப்பை குடல் நோய்கள் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு யோகார்ட் சாப்பிட வேண்டும்? (How much yogurt should you eat a day?)
தற்போது 90% அமெரிக்க குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வாரத்திற்கு 1 கப் யோகார்டை குறைவாக உட்கொள்கின்றனர். இது ஒரு நாளைக்கு யோகார்ட் பரிமாறலில் சுமார் 0.1% மட்டுமே குறிக்கிறது. இது பால் குழுவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட சேவையில் கால் பங்கிற்கும் குறைவாகும். இதனால் தினமும் 1 கப் யோகார்டை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!