அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகினால் என்னவாகும்? தாகத்தின் காரணங்களும் விளைவுகளும் !

அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகினால் என்னவாகும்? தாகத்தின் காரணங்களும் விளைவுகளும் !

உடல் ஆரோக்கியமாக நீரோட்டமாக இருக்க நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். அதனால், தாகம் இல்லையென்றாலும்கூட சிறிது நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துகிறோம். ஒரு சிலர் சிறுநீர் நிறம் இல்லாமல் போகும்வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்று எண்ணி தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்று எப்படி  அறிந்து கொள்வது?

பொதுவாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நீங்கள் சாப்பிடும் உணவிலும், வேறு திரவ உணவையையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஜூஸ், மோர், டீ, காபி போன்றவையும் இதில் அடங்கும். மேலும், உங்கள் உடல் எடையைப் பொருத்தும் உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவு மாறுபடும்.

உடலுக்கு போதிய அளவு சோடியம் தேவைப்படுகிறது. அது ஒரு டிராபிக் போலீஸ் போல உடலுக்கு சத்துக்களை சமனாக அனுப்புகிறது. மேலும் சிறுநீரகத்திற்கு செல்லும் தண்ணீர் அளவுகளையும் சரிபார்க்கிறது. உடலின் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால், ரத்தத்தில் சோடியம் அளவுகள் குறைந்துவிடும். பிறகு சோடியம் குறைபாட்டால் டிராபிக் ஜாம் ஆகி விடும்.

Shutterstock

சிறுநீரகம் ஒரு மணிநேரத்திற்கு 800 முதல் 1000 மில்லிலிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதைவிட அதிகம் தண்ணீர் பருகினால், நீங்கள் உங்கள் சிறுநீரகத்திற்கு அதிக வேலை கொடுப்பதாகிவிடும். மேலும், கூடுதல் தண்ணீர் செல்களில் புகுந்து செல்களை வீங்க வைக்கும். இதை தண்ணீர் மயக்க நிலை(water intoxication) என்று அழைக்கிறார்கள். அதன் விளைவாக, தலைவலி தோன்றும்,கிறுகிறுப்பு வரும், மேலும் வாந்தி வரும். ஒரு சிலருக்கு தண்ணீர் தாகம் இருந்து கொண்டே இருக்கும்.

தண்ணீர் தாகம் ஏற்படுவதற்கான காரணங்களை கீழ் காணலாம் -

1. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் பருகினாலும் தாகம் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதால், தாகமும் ஏற்படும். 

2. சிலருக்கு போதிய உமிழ்நீர் சுரக்காமல், நாக்கு வறண்டு போகும் தன்மையால், தண்ணீர் தாகம் ஏற்படும். ஒரு நல்ல மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும். 

3. நீண்ட நேரம் வெயிலில் இருந்தால், தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கையில் ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு செல்வது நல்லது. 

4. நீங்கள் உண்ணும் உணவில் அதிக உப்பு இருந்தால், செல்களில் உள்ள நீரை உறிஞ்சி விடும். அதிக தாகம் ஏற்படும். உணவில் உப்பை அளவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க - இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள் & இயற்கை முறையில் அதிகரிப்பதற்கான வழிகள்!

Shutterstock

5. ரத்த சோகை இருந்தால், தண்ணீர் தாகம் ஏற்படும். லேசான ரத்த சோகையாக இருந்தால், பிரச்சனை குறைவு. உடலில் ரத்தம் குறைவாக இருந்தால், கிறுகிறுப்பு, வியர்வை அதிகம் சுரப்பது போன்றவை ஏற்பட்டு, தண்ணீர் தாகம் அதிகரிக்கும். உடலில் நல்ல ரத்தம் ஊரும் வகையில் உணவு உண்டு சரி செய்தால், தாகம் காணாமல் போய்விடும். 

6. ஏதாவது ஒரு காரணத்திற்காக மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். சில மாத்திரைகளை உட்கொள்வதால், வாய் வறண்டு போகும். 

7. ஜாகிங், நடைபயிற்சி, ரன்னிங் போன்ற உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும்போது அதிக தாகம் இருக்கும். வியர்வையால் உடலில் இருக்கும் நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். அப்போது போதிய தண்ணீர் குடிக்க வேண்டும். 

இப்படி தாகம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, உண்மையில்  உடலுக்கு தண்ணீர் தேவையா, இல்லையா என்று உணர்ந்து அதற்கேற்றவாறு தண்ணீர் குடிக்க (drink) வேண்டும்.உங்களுக்கு தாகமாக இருந்தால் தண்ணீர் குடிக்கவும். இல்லையேல், வெறுமனே நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்கவில்லை என்று நினைத்து ஒரு பாட்டிலில் தண்ணீர் வைத்துக் கொண்டு, சும்மா சும்மா தண்ணீர் குடிக்கக் கூடாது. மேலும் இதை சரியான நேரத்திற்கு குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள். 

மாரத்தான் ஓடுபவருக்கு, வெயிலில் வேலை செய்பவர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். நிழலில் அமர்ந்து, குளிரான இடத்தில் இருந்து கொண்டு அவர்களைப்போல தண்ணீர் அருந்தினால், உடலுக்கு தீங்குதான் ஏற்படும். தண்ணீராக இருந்தாலும், அளவாக தேவைக்கு பருகினால் உடல் நலம் பெரும். 

மேலும் படிக்க - உங்கள் உடல் நலனை அதிகரிக்க நார் சத்தின் முக்கியத்துவம்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!