logo
ADVERTISEMENT
home / அழகு
உடலில் தேவையற்ற முடிகளை நீக்க உதவும் வேக்சிங் முறை : வகைகள் மற்றும் நன்மைகள்!

உடலில் தேவையற்ற முடிகளை நீக்க உதவும் வேக்சிங் முறை : வகைகள் மற்றும் நன்மைகள்!

வேக்சிங் என்பது உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும். அதாவது வேக்ஸிங் என்றால் மெழுகு. வேக்ஸிங் பார்ப்பதற்கு மிகவும் திக்கா இருக்கும். 

சூடேற்றும்போது உருகத் துவங்கும். மெழுகு சூடேறினால் எப்படி உருகுகிறதோ அதுபோலவே வேக்ஸிங் சூடேற்றும் நிலையில் உருகத் தொடங்கும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் மெழுகில் முடிகளை இலகுவாக நீக்கக்கூடிய சர்க்கரை சேர்ந்து இருக்கும். பெரும்பாலான அழகுநிலையங்களில் இந்த வேக்சிங் (waxing) தான் செய்யப்படுகிறது. 

pixbay

ADVERTISEMENT

தற்போது நான்கு வகையான வேக்சிங் டிரெண்டிங்கில் உள்ளது. அவை, 

1. கோல்ட் வேக்சிங் (gold waxing)
2. ஹாட் வேக்சிங் (hot waxing)
3. ஸாஃப்ட் வேக்சிங் (soft waxing)
4. ஹார்ட் வேக்சிங் (hard waxing)

சருமத்தின் தன்மைக்கு ஏற்ப நிறைய வாக்ஸிங்கில் பல வகைகள் உள்ளது. அதாவது வறண்ட சருமம், சென்சிட்டிவான சருமம், எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு ஏற்ப சுகர் வேக்ஸ், சாக்லெட் வேக்ஸ், க்ரீன் ஆப்பிள் வேக்ஸ், ஸ்ட்ராபெர்ரி வேக்ஸ், ரோஸ் வேக்ஸ், 

பியர்ல் வேக்ஸ், கோல்ட் வேக்ஸ், ஆலுவேரா வேக்ஸ் என நிறைய ப்ளேவர்ட் வேக்ஸ்கள் சந்தைகளில் கிடைக்கிறது. சிலவகை வேக்ஸ்களில் சருமத்திற்கு பொலிவும் பளபளப்பும் கூடுதலாகக் கிடைக்கும். குறிப்பாக நான்கு வகையான வாக்ஸிங் முறைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அவைகள், 

ADVERTISEMENT

குளிர்காலத்திற்கு ஏற்ற 12 சிறந்த ஸ்வெட்டர்ஸ் மற்றும் ஜாக்கெட் ரகங்கள்!

கோல்ட்(cold) வேக்ஸ்

கோல்ட் வாக்ஸிங் (waxing) என்பது வாக்ஸை மிதமான தீயில் உருக வைத்து செய்யும் முறையாகும். இது உருகிய நிலையில் அதாவது லிக்யூட் வடிவில் காணப்படும். இதனை சருமத்தில் தடவியதும், ஸ்டிக்கர் டைப்பில் ஒட்டி எடுப்பதுபோல் வரும் ஸ்டிரிப் கொண்டு வேக்ஸ் மேல் வைத்து ஒட்டி முடிக்கு நேர் எதிர் திசையில் வைத்து எடுக்க வேண்டும். ஒரே முறையில் அனைத்து முடியும் நீங்கி விடும். இதில் வலி என்பது குறைவாகவே இருக்கும்.

ADVERTISEMENT

pixabay

ஹாட்(hot) வேக்ஸ்

இந்த முறையில் கிரீம் வடிவில் இருக்கும் வாக்ஸை ஹீட்டரில் நிறப்பி ஹீட் செய்து ஐஸ் குச்சி வடிவில் இருக்கும் சிப் கொண்டு எடுத்து தடவும் முறை. இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவி முடிகளை நீக்குதல் வேண்டும். வாக்ஸின்  அளவை கொஞ்சம் தாரளமாய் பயன்படுத்தினால், வலியின் அளவை குறைத்திட முடியும்.

ஸாஃப்ட்(soft) வேக்ஸ்

ADVERTISEMENT

கோல்ட் வேக்ஸ் மாதிரியான ஒரு ஃபீல் இந்த வேக்ஸில் இருக்காது. இது செமி சாலிட் வடிவில் இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த வேக்ஸை ஹீட் பண்ணி முடியில் இருக்கும் பகுதியில் தடவி துணியை வைத்து தேய்த்து இழுப்பார்கள். முடி மொத்தமும் துணியில் ஒட்டிக் கொள்ளும். இப்போது பேப்பர் வடிவிலான ஸ்டிப் பயன்பாட்டில் உள்ளது.

ஹார்ட்(hard) வேக்ஸ்

ஹார்ட் வேக்ஸை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. துணியோ, ஸ்டிரிப்போ இதற்குத் தேவையில்லை. ஹார்ட் வேக்ஸினை சிறிது எடுத்து ஹீட் செய்து கையில் தடவி ஆறியதும் திக்கான நிலைக்கு மாறும். பிறகு விரலால் உறித்து எடுத்தல் வேண்டும். மற்ற வேக்ஸைவிட இதில் வலி சற்று குறைவாக இருக்கும். 

பெரும்பாலும் அழகு நிலையங்களில் ஹீட் செய்து பயன்படுத்தும் வேக்ஸ்களையே (waxing) அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ADVERTISEMENT

 

pixabay

வேக்சிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • ஷேவிங் செய்வது போல் அல்லாமல் வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை பிடிக்கும். இது மற்ற முடிகளை நீக்கும் முறைகளில் சாத்தியம் இல்லை.

சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ : பயன்படுத்தும் முறைகள்& பேஸ் பேக்குகள்!

ADVERTISEMENT
  • ஷேவிங் போன்ற முறைகளுடன் ஒப்பிடும் போது இம்முறையில் வெட்டு காயங்கள் ஏற்படுவதில்லை.
  • வேக்சிங் முறையால் தேவையற்ற முடிகளை நீக்குவது மட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள இறந்த செல்களானது நீங்கி, சருமம் மிருதுவாக இருக்கும். 

pixabay

  • வேக்சிங் செய்வதால் பளபளப்பாக வழுவழுப்பான தன்மையில் தோல் தோற்றம் கொடுக்கும். கூடுதல் பொலிவு சருமத்திற்கு கிடைக்கும். 
  • இந்த முறையால் ஒருவித குளிர்ச்சித் தன்மை சருமத்திற்கு கிடைக்கிறது. 
    குறிப்பாக சரியான இடைவெளியில் செய்யப்படும் வேக்சிங், முடியின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும்.
  • வேக்சிங் செய்வதால் ஒரே சிட்டிங்கில் அனைத்து முடிகளும் வந்துவிடும். இதனால் அரை மணி நேரத்திற்குள் எளிமையாக முடிக்கலாம்.

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றி இத்தனை விஷயங்களா ! அறிந்து பயன்பெறுங்கள் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

08 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT