வயிறு சம்மந்தமாக எந்தப் பிரச்சனைக்கும், தனக்கு அல்சர் இருக்கிறது என்று பொதுவாக நினைத்து விடுகிறார்கள். நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவினால், சாப்பிடும் முறையினாலும், உடற்பயிற்சி, ஆரோக்கியம் போன்றவற்றினாலும் வயிறு சம்மந்தமான அஜீரணம், வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பல தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் நெஞ்செரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் என்றது பெரும்பாலோனோருக்கு வரும் ஒன்றாகும். முதலில், இவை என்ன என்று புரிந்து கொண்டு, பின்னர் அதற்கான தீர்வைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வயிற்றில் உணவு செரிக்க ஹைடிரோக்ளோரிக் அமிலம் (HCL)சுரக்கும். அது வயிற்றின் கீழ்நோக்கிதான் செல்லும். அப்படியல்லாமல், மேல்நோக்கி சென்றால் அது எதுக்கலித்தல் அல்லது புளித்த ஏப்பமாகத் ( sulfur burps ) தோன்றும்.புளித்த ஏப்பத்தைத் தவிர வேறு என்ன அறிகுறிகள் தோன்றும் என்று பார்க்கலாம்.
இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால், கெர்ட்(GERD Gastroesophageal reflux disease) என்ற நோயாகி விடும். இது மிகவும் ஆபத்தானது. ஏன்னெனில், அது உணவுக்குழாயை சேதம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. பிறகு, உணவு உண்ண மிகவும் கடினமாகிவிடும்.கெர்ட் இருந்தால் அதற்கான அறிகுறிகள் கீழ்வருமாறு -
நெஞ்செரிச்சல்
விழுங்குவதில் சிரமம்
தொண்டை வலி
தொண்டை கரகரப்பு
வறட்டு இருமல்
தொண்டையில் ஏதோ மாட்டிக்கொண்டது போன்ற உணர்வு
இருதயத்திலோ, நுரையீரலிலோ எந்த கோளாறும் இல்லை. உணவுக்குலாயில் (esophagus) ஏற்படும் எரிச்சல் தான் அப்படித் தோன்றுகிறது. கெர்ட் நோயின் அறிகுறிதான் நெஞ்செரிச்சல் என்பதை தெரிந்து கொண்டோம்.அல்லவா? சரி, நெஞ்செரிச்சல் (heartburn) வர காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.
ஆரோக்கியமான பழக்கங்களினால் இந்த எரிச்சலை கட்டுக்குள் வைக்கலாம். அப்படிப்பட்ட பழக்கங்களின் பட்டியல் இதோ:
1. உணவை சிறிது சிறிதாக பிரித்து உண்பது. ஒரே வேளையில் அதிகம் உண்ணாமல், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம்.
2. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
3. தூங்கும்போது தலையை உயர்த்தி படுத்துக்கொள்ள வேண்டும். அது இரைப்பையில் உள்ள அமிலத்தை மேல்நோக்கி வராமல் பார்த்துக்கொள்ளும்.
4. நீண்ட நாட்கள் இருந்தால், ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது சிறந்தது.
மேலும் படிக்க - உங்கள் உடல் நலனை அதிகரிக்க நார் சத்தின் முக்கியத்துவம்!
உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருந்தால், கீழ்காணும் உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
புளிப்புத்தன்மை கொண்ட பழங்கள்(திராட்ச்சை, அன்னாச்சிபழம், தக்காளி, ஆரஞ்சு)
வெங்காயம், பூண்டு
அதிக கொழுப்பு உள்ள உணவுகள்
அதிக காரமான உணவு
காபி/டீ
குளிர்பானங்கள்
புகை பிடித்தல்
மது அருந்துதல்
கீழ்காணும் உணவுகள் உங்கள் நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தாமல் (remedies), உடலுக்கு நல்ல ஆரோக்யத்தைக்கொடுக்கும்.
கற்றாழை
வாழைப்பழம்
கொத்தமல்லி
பச்சை காய்கள்
புளிப்பு இல்லாத பழங்கள்
ஓட்ஸ்
முலாம்பழம்
மீன்
இஞ்சி
முதலில், மனஅழுத்தம்தான் உடல் உபாதைகளுக்கு ஆரம்ப காரணமாக இருக்கும். கவனித்துப் பார்த்தீர்களானால், நீங்கள் உணர்ச்சி வசப்படும் போது இரைப்பையில் அமிலம் சுரப்பதை உணர்வீர்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்(தீர்வு). விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். மேலும், நல்ல ஆரோக்கியமான உணவை அளவாக சாப்பிடுங்கள். உடலில் ஏற்படும் சிறிய பிரச்சனையை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பத்திலேயே சரி செய்ய முயற்சியுங்கள். அப்படி கண்டு பிடிக்காமல் விட்டு விடீர்களெனில், மனம் தளராமல், நல்ல மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சையை இறுதிவரை பின்பற்றுங்கள்.
மேலும் படிக்க - உடலை சுத்திகரித்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நீர் – டிடோக்ஸ் நீர்!
பட ஆதாரம் - Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!