முகப்பருக்கள் நீங்கள் சிகிச்சை அளித்தால் விரைவாக மறையும், இல்லை என்றால் மெதுவாக மறையும். ஆனால், அது விட்டுச் சென்ற கரும்புள்ளிகள் நீங்காது. இதற்கான தீர்வை எளிதில் அளிக்கிறது உருளைகிழங்கு ! இதை மூன்று விதமான ஃபேஸ் பேக்குகளாக (potato face mask) எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கின் சத்துக்களும் நன்மைகளும்
உருளைக்கிழங்கால் ஏற்படும் நன்மைகள் என்ன?
- முகத்தில் உள்ள கறைகளை நீக்கும்
- சூரிய கதிரால் ஏற்பட்ட கருமையை போக்கும்
- சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்
- கண்களைச் சுற்றி உள்ள கருப்பு வளையங்களை நீக்கும்
- மேலும், கண்களுக்கு கீழே வீங்கிய தோன்றதைக் குறைக்கும்
- சருமத்தில் நிறத்தை வெள்ளையாக்கும், இயற்கையான பிளீச்சிங் தன்மை கொண்டது
உருளைகிழங்கில் உள்ள சத்துக்களின் பட்டியல்
- வைட்டமின் ஏ, பி, சி
- நார்ச்சத்து
- மாவுச்சத்து
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- சுண்ணாம்புசத்து
- மேங்கனீஸ்
- இரும்புச்சத்து
உருளைக்கிழங்கு முகப்பூச்சு / ஃபேஸ் மாஸ்க் எப்படி செய்வது?
உருளைக்கிழங்கை பயன்படுத்தி ஏராளமான ஃபேஸ் மாஸ்க்குகள் தயாரிக்கலாம். சில முகப்பூச்சைப் பற்றி விரிவாக காணலாம்.
செய்முறை 1:
Shutterstock
- முதலில், உருளைக்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
- பின் அதன் தோளை நீக்கி விடுங்கள்.
- பாதி, உருளைக்கிழங்கை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளுங்கள்.
- உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின், நறுக்கி உருளைக்கிழங்கை அப்படியே உங்கள் முகத்தில் வட்ட வடிவத்தில் பத்து நிமிடங்கள் தேய்த்துக்கொள்ளுங்கள்.
- மீதம் உள்ள உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள்.
- பிறகு வடிகட்டி, சாறைமட்டும் எடுத்து முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். அப்படி பூசும் போது ஒரு பருத்தி பஞ்சை வைத்து தடவலாம்.
- ஒரு நிமிடம் ஊறியது, மீண்டும் உருளைத் துண்டுகளை வைத்து கருமை நிறம் உள்ள எல்லா இடங்களிலும் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
செய்முறை 2:
- முதலில், உருளைக்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
- பின் அதன் தோளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
- மிக்ஸி ஜாரில் உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு ¼ கப் மாதுளம்பழம், 2 தேக்கரண்டி தயிர், ½ எலுமிச்சம்பழத்தின் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளுங்கள்.
- அரைத்த விழுதை ஐஸ் டிரெயில் ஊற்றி 3 மணி நேரம் பிரீஸரில் உறைய வையுங்கள்.
- பிறகு எடுத்து, முகத்தில் வட்ட வடிவத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். 20 நிமிடம் அப்படியே விட்டு விடலாம்.
- பிறகு முகத்தை கழுவி விட்டு, துண்டினால் ஒத்தி ஈரத்தை உறிஞ்சுங்கள்.
- உங்கள் முகம் மென்மையாக, பொலிவாக, வெள்ளையாக இருப்பதை உணர்வீர்கள்.
செய்முறை 3:
Shutterstock
விடுதியில் உள்ள பெண்கள் மிக்ஸி பயன்படுத்த முடியாதவர்கள் உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்தி கருமை நிறத்தை நீக்குவார்கள் என்று பார்ப்போம்.
- முதலில், உருளைக்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
- பின் அதன் தோளை நீக்கி விட்டு, வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளுங்கள்.
- கத்தியைக்கொண்டு அதன் மீது கீரல் போடுங்கள், இதனால் உருளைக்கிழங்கில் உள்ள நீர் வெளியேறும்.
- அதன் மீது வைட்டமின் ஈ கேப்ஸுலை நறுக்கி அந்த எண்ணெயை உருளைக்கிழங்கின்மீது ஊற்றுங்கள்.
- இரண்டு துண்டுகள் இப்படி தயார் செய்து, முகத்தில் தேய்க்க ஆரம்பிக்கவும். வளச்சுழலாகவும், இடச்சுழலாகவும் மாறி மாறி முகத்தில் எல்லாப் பக்கங்களிலும் தேய்க்கவும்.
- பத்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்து ஊறவிட்டு முகத்தை கழுவி விடுங்கள்.
மிக்ஸி உள்ளவர்கள் உருளைக்கிழங்கை அரைத்து அதோடு வைட்டமின் ஈ எண்ணெயை கலந்து முகத்தில் ஒரு பூச்சு போல பயன்படுத்தலாம்.
இப்படி உருளைக்கிழங்கை வைத்து பல்வேறு ஃபேஸ் மாஸ்க்குகளை தயாரிக்கலாம். உங்களுடைய சருமம் எண்ணெய் படர்ந்த சருமமாக இருந்தால், அரிசி மாவில் அல்லது கோதுமை மாவில் உருளைக்கிழங்கு சாறை கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தலாம். வறண்ட சருமமாக இருந்தால், எலுமிச்சை சாறுடனும், வெள்ளரியுடனும் கலந்து பயன்படுத்தலாம். இப்படி எந்த முகப்பூச்சுடனும் உருளைக்கிழங்கு சாறை கலந்து பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவாகத் தோன்ற இந்த குறிப்புகளை பின்பற்றிப் பாருங்கள்.
மேலும் படிக்க – எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!