உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பகிர, சில சுவாரசியமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பகிர, சில சுவாரசியமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

ஒவ்வொரு வருடமும், டிசம்பர் 25ஆம் நாள் எப்போது வரும் என்று அனைத்து கிறித்துவர்களும் காத்திருக்கும் இந்த வேளையில், உங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் இந்த திருநாளில் பகிர்ந்து கொள்ள, சில அற்புதமான வாழ்த்து தொகுப்புகளை நீங்கள் இப்போது தேடத் தொடங்கி இருப்பீர்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இயேசு பிறந்த இந்த திருநாளில், புத்தாடை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, தங்கள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் கூறி மகிழ்வது சிறப்பு.

நீங்களும், இத இந்த திருநாளில், சில சுவாரசியமான வாழ்த்துக்களை (christmas wishes/messages) உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், இந்த தொகுப்பு உங்களுக்கானது. தொடர்ந்து படியுங்கள்!

Table of Contents

  நண்பர்களுக்கான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்(Christmas wishes for friends)

  1. விண்ணில் வாழ்ந்த இறைமகனே
  விண்ணவர் போற்றும் தூயவனே
  என்னில் நீவிர் வாழ்ந்திடவே இன்னிசையாலே அழைக்கின்றேன்
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  2. உலகக் கவலையில் நான் மூழ்கி உம்மை மறந்து அலைந்தேனே உள்ளம் எழுந்து வந்தருள்வீர்
  உண்மை இன்பம் அளித்திடுவீர்!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  3. என்றும் உன் நினைவே, எல்லாம் உன் செயலே
  எந்நாளும் உன்னைப் போற்றிடுவோம் எங்களை ரட்சிப்பாய்
  என வேண்டுகிறோம்..!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  4. மாசற்ற இயேசு நாதர் காட்டுகின்ற நன்றியை
  நேசமுடன் பின்பற்றி, வாழ்வில் உழைத்திடுவோம்!
  ஈடற்ற நற்பண்பை நாளும் கடைபிடிப்போம்
  பாடுபட்டால் நற்பலன் உண்டு
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  5. உலகமெங்கும் உன்னதரை உள்ளங்கள் பறைசாற்ற
  நம்பாரம் தீர்த்திடவே நம்மைத் தேடி வந்துவிட்டார்
  பாவங்களை மீடகவந்த பரமனவன் பிறந்த நாளை
  பக்தியோடு ஏற்றிடுவோம், பந்தமென போற்றிடுவோம்!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  6. சோர்ந்து போன மனிதனுக்கு சுகமான இறைப்பற்றை தந்திட
  வாழ்வைத் தேடும் மனிதனுக்கு வளமாய் வாழ்வை வழங்கி
  கிறிஸ்து பிறந்த இந்நாளிலும், தொடர்ந்து வரும் புத்தாண்டில்
  ஒவ்வொரு நாளும் நிறைவாக பெற்று மகிழ்ந்திட,
  இயேசுவை வேண்டிக் கொள்வோம்
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  7. கேட்டதும் கொடுத்து, தட்டியதும் திறந்து
  தேடியே கண்ட ஒளி, மானுடர்களை இரட்சிக்க மாட்டு தொழுவத்திலே
  புனிதனாய் பிறந்த ஒளி,
  ஒளி தண்ட வெளிச்சத்திலே, துயர் கண்ட இருள் நீங்கி, வாழ்வை செளுமையாக்கிய ஒளி!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  8. மண்ணில் பிறந்த இறை பாலகன்
  உங்களுக்கு உடலில் உள்ள நலன்களை அருளி
  உங்கள் வெற்றிகளை நோக்கி, வழி நடத்துவாராக
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  9. வானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம்
  அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க,
  மானிடர் சிறக்க, மண்ணிலே உதித்தார், மனங்களை வென்றார்!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  10. அன்பெனும் பண்புகளை ஆணித்தரமாய் சொல்லிவிட
  ஆயுளையே அவர் கொடுத்தார்
  அகிலத்தின் விடுதலைக்காய், அவர் பிறந்த நாளின்று
  அறியாமை போக்கிடுவோம்
  பகைமையை அறுத்தெறிந்து, பாசமோடு வாழ்த்திடுவோம்

  குடும்பத்தினர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்(Christmas wishes for family)

  Shutterstock

  11. உலகின் ஒளியே – எங்கள் உயிரின் ஒலியே
  உண்மையின் உருவே – எங்கள் உணர்வின் உணர்வே
  அண்டமும் கண்டமும் அசைவும் காற்றும் நீரும் நெருப்பும்
  நிலவும் வானும் உன் அசைவின் ஆக்கம்
  உன் ஜனனமும் மரணமும் உலகின் தத்துவம்
  இரக்கமும் அன்பும் இருவிழியென உணர்த்தி இன்பமும் மகிழ்வும் எங்களுக்களித்து எம்மைக் காத்திடும் தேவா
  எந்நாளும் உன்னைப் போற்றிடுவோம்!

  12. தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
  சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
  எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே!
  இத்தனை நாளும் மானிடன் வாழ்வது இயேசுவின் வார்த்தையிலே!

  13. மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
  புண்கள் இருக்கும் வரையில் மருந்து தேவை நித்தியமே!
  விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
  எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!"

  14. வந்தது கிறிஸ்த்மஸ் பெருநாள்
  வாழ்த்துக்கள் தூவிடும் திருநாள்
  சந்தனச் சந்தங்கள் சிந்தியே
  சதிராடித் துள்ளட்டும் உள்ளங்கள்

  15. மண்ணுலக மக்களின் பாவ இருள் போக்க
  விண்ணிலிருந்து இறங்கிவந்த நம் இயேசு பாலனை வரவேற்போம் அவரை போற்றி புகழ்ந்து கொண்டாடுவோம்

  16. மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை
  போற்றிப் பாடிக் கொண்டாடுவோம்
  ஆர்ப்பரித்துக் கொண்டாடுவோம்
  இந்த கிறிஸ்துமஸ் நன்னாளிலே

  17. மேசியா இயேசு ராஜன்
  இப்புவியின் நிந்தை நீங்க
  கந்தை பொதிந்த கோலமாய்
  பாரினில் தோன்றினார்.

  18. மாந்தர்கள் காண வாசம் செய்த மகிமை தேவனை
  மண்ணில் கண்டோமே மகிழ்வோம்
  கிறுஸ்து பிறந்த இந்நாளிலே

  19. அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்
  அண்டினோர் வாழ்வை இன்பமாய்
  மாற்றும் இயேசு அற்புதர்

  20. ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை தொழுதிடுவோம் பரிசுத்த
  அலங்காரத்துடனே நாமும் பரிசுத்தரை தொழுவோமே

  குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்(Christmas wishes for children)

  21. மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்.
  மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்.
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்....

  22. மாடடையும் குடிலினில்
  மாசற்ற மகிமை தேவன்
  மண்ணில் உதித்தார்
  மரியின் மகனாய்
  கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

  23. கர்த்தரின் வார்த்தைகளை ஏற்று
  கட்டளைகளைப் பத்திரப்படுத்து
  கனிவாகட்டும் உன் வாழ்வு
  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

  24. மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை
  ` போற்றிப் பாடிக் கொண்டாடுவோம்
  ஆர்ப்பரித்துக் கொண்டாடுவோம்
  இந்த கிறிஸ்துமஸ் நன்னாளிலே
  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  25. மேசியா இயேசு ராஜன்
  இப்புவியின் நிந்தை நீங்க
  கந்தை பொதிந்த கோலமாய்
  பாரினில் தோன்றினார்.
  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

  26. மாந்தர்கள் காண வாசம் செய்த மகிமை தேவனை
  மண்ணில் கண்டோமே மகிழ்வோம் கிறுஸ்து பிறந்த இந்நாளிலே
  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

  27. இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா நீ
  என் இதயத்தில்
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  28. என்னை உணர்ந்திரு என்னோடு விழித்திரு
  என்னோடு நினைந்திரு உன்னோடு
  இனிய கிறிஸ்தும்ஸ் வாழ்த்துக்கள்!

  29. இன்னே நான்பேசி முடித்தேன்
  நீயும் நன்றாக கேட்டுக் கொண்டாய்
  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

  30. அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்
  அண்டினோர் வாழ்வை இன்பமாய்
  மாற்றும் இயேசு அற்புதர்
  கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

  நேசிப்பவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்(Merry christmas quotes for love)

  Shutterstock

  31. பனிபொழியும் நாட்களிலே, இனிப்புடனே இன்பத்தையும்
  உவந்து உண்டு மகிழ, அன்புடன் தோழனின் வளமான
  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!

  32. மண்ணுலக மக்களின் பாவ இருள் போக்க
  விண்ணிலிருந்து இறங்கிவந்த நம் இயேசு பாலனை வரவேற்போம் அவரை போற்றி புகழ்ந்து கொண்டாடுவோம்
  அனைவருக்கும் இனிய கிறிஸ்துபிறப்பு நல்வாழ்த்துக்கள்!

  33. அன்று ஆயர்கள் கேட்ட ஆச்சர்ய நற்செய்தியை
  நாமும் கேட்போமா
  இயேசு நாமக்காய் பிறந்தாரென..
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

  34. கிறிஸ்துமஸில் பல விஷயங்கள் இருக்கலாம்
  அல்லது ஒரு சில இருக்கலாம்.
  நீங்கள் மகிழ்வோடு வாழ இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

  35. இறைவனின் அருளால் என்றும் நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று நம்புவோம்
  அனைவரும் ஒன்று கூடி யேசுவின் பிறப்பை கொண்டாடுவோம்.
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

  36. மாட்டுத் தொழுவத்து மாபரன்
  மண்ணுலக மக்களின் மனதினில்
  மங்கா புகழோடு வாழ்ந்திட
  மரியின் தியாகமல்லவா மடிந்தது
  செல்வ புதல்வா சிங்கார தலைவா
  செல்வங்களை நிரப்பிட வா
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  37. தூதர்கள் துதித்துப் பாட, மேய்ப்பர்கள் புகழ்ந்துப் போற்ற
  சாஸ்திரிகள் பணிந்து துதிக்க,
  மண்ணிலே சாமதானம், விண்ணிலே மகா மகிமை
  வாழ்வின் இருள் நீங்கி, வெளிச்சம் உதித்து எமக்காய்
  வாள் வெள்ளியும் முளைத்தது
  கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

  38. இறைவனின் அருளால் என்றும் நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று நம்புவோம் ஒரு இந்தியனாக யேசுவின் பிறப்பை கொண்டாடுவோம்.
  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  39. வானத்தில் இருந்து ஒளியாய் வந்தார்
  ஏசு எனும் ஓர் மனித, கடவுள் ஏசு
  மனிதர்கள் செய்யும் குற்றங்களை மன்னிக்க சொன்னார் தந்தையிடம்
  மீண்டும் பிறப்பார் அந்த ஏசு என்ற மாமனிதர் !
  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நட்புகளே !

  40. வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும்
  வேதமாய் வந்துதித்தான்! - வானில்
  விண்மீனாய் வந்துதித்தான்!
  விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற
  விரைவாக வந்துதித்தான்! - அந்த
  விண்மகன் வந்துதித்தான்!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  வாட்ஸ் ஆப் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்(Whats app christmas status)

  41. தெவிட்டாத அன்பு வெள்ளம்
  தெருவினில் பாய்ந்தோட
  உருவெடுத்து வா
  இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  42. கிறிஸ்துமஸில் பல விஷயங்கள் இருக்கலாம்
  அல்லது ஒரு சில இருக்கலாம்.
  நீங்கள் மகிழ்வோடு வாழ இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

  43. விரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டிய
  ஆண்டவன் வந்துதித்தான்! - ஒளி
  பூண்டவன் வந்துதித்தான்! -
  அரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே
  நலமெலாம் ஏற்றிடுவோம் - யேசு
  மலரடி போற்றிடுவோம்!
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..

  44. மன்னிப்பை மக்களுக்கு அருளிய
  மகா கடவுள் பிறந்த தினம்
  மக்களின் துன்பம் மறைந்த தினம்
  மகிழ்ச்சி நிறைந்த தினம்..
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்

  45. அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட
  அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது அது
  ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு
  அனைவரையும் கவர்ந்தது.
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  46. மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி
  மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று நல்
  மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,
  மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது.
  இயேசு பிறந்த இந்நாளில்
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  47. தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்
  கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது அந்த
  எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு
  மண்ணில் உதித்த நாள் இன்று!
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்...

  48. ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை தொழுதிடுவோம் பரிசுத்த அலங்காரத்துடனே நாமும் பரிசுத்தரை தொழுவோமே
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  49. மாட்டுத் தொழுவத்து மாபரன் மண்ணுலக மக்களின் மனதினில்
  மங்கா புகழோடு வாழ்ந்திட
  மரியின் தியாகமல்லவா மடிந்தது செல்வ புதல்வா சிங்கார தலைவா
  செல்வங்களை நிரப்பிட வா, தெவிட்டாத அன்பு வெள்ளம்
  தெருவினில் பாய்ந்தோட உருவெடுத்து வா
  இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  50. தூதர்கள் துதித்துப் பாட,
  மேய்ப்பர்கள் புகழ்ந்துப் போற்ற
  சாஸ்திரிகள் பணிந்து துதிக்க, மண்ணிலே சாமதானம்
  விண்ணிலே மகா மகிமை வாழ்வின் இருள் நீங்கி
  வெளிச்சம் உதித்து எமக்காய் வாள் வெள்ளியும் முளைத்தது
  கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

  கிறிஸ்துமஸ் தகவல்கள்(Christmas messages)

  Shutterstock

  51. வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும்
  வேதமாய் வந்துதித்தான்! - வானில்
  விண்மீனாய் வந்துதித்தான்!
  விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற
  விரைவாக வந்துதித்தான்! - அந்த
  விண்மகன் வந்துதித்தான்!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  52. விரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டிய
  ஆண்டவன் வந்துதித்தான்! - ஒளி
  பூண்டவன் வந்துதித்தான்! -
  அரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே
  நலமெலாம் ஏற்றிடுவோம் - யேசு
  மலரடி போற்றிடுவோம்!
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..

  53. மன்னிப்பை மக்களுக்கு அருளிய
  மகா கடவுள் பிறந்த தினம்
  மக்களின் துன்பம் மறைந்த தினம்
  மகிழ்ச்சி நிறைந்த தினம்..
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்

  54. அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட
  அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது - அது
  ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு
  அனைவரையும் கவர்ந்தது.
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  55. மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி
  மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று நல்
  மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,
  மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது.
  தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்
  கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது - அந்த
  எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு
  மண்ணில் உதித்த நாள் இன்று!
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்.

  56. அலைகள் தொடுத்திடும் கடலின் ஞானமாய்
  நுரைகள் பூத்திடும் பாலின் வெண்மையாய்
  மேய்ப்பனின் குரலுக்கு கட்டுப்பட்டு பசியில்
  புசிக்கும் எண்ணம்தவிர்த்து மேயாத மானாய் இங்கு
  மெய்யானதோ பொய்யானதோ – எனை மேய்ப்பவனின்
  எண்ணமெல்லாம், உலகின் ஒளியே – எங்கள் உயிரின் ஒலியே
  உண்மையின் உருவே – எங்கள் உணர்வின் உணர்வே
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  57. தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
  சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
  எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே!
  இத்தனை நாளும் மானிடன் வாழ்வது இயேசுவின் வார்த்தையிலே!

  58. கருணையின் சிகரமாய் கடவுளாய் பிறந்தவன் கடவுளின் ஒளி!
  வருந்தும் உள்ளங்களின் வாழ்க்கை வழி காட்டியாய் வாழ்வு கொடுத்த ஒளி!
  வாயில்தோறும் மின்னொளியில் ஒளிர்கின்ற நட்சத்திரத்தில்
  வீடு தேடி வந்த ஒளி!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  59. ஒளி தந்த வெளிச்சத்திலே துயர் கொண்ட இருள் நீங்கி
  வாழ்வை செழுமையாக்கிய ஒளி!
  கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

  60. மனங்கள் மயங்கும் மனிதர்கள் கசங்கும் சந்தை வீதியில்
  சூரியன் சுட்டெரிக்கும் காலை வேளையில் கையில் விளக்குடன்
  மனிதனைத் தேடினான் ஒருவன்….!
  மாடடைக்கும் கொட்டிலில் மார்கழிக் குளிரிரவில் 'மனிதன் இருக்கிறான் மனம் மட்டும் மாறட்டும்'
  எனப் பிறந்தான் ஒருவன்…!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  மனதை கவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்(Inspirational merry christmas wishes)

  61. சுக்குநாறிப் புல்லில் வளர்ந்து விட்ட குடிலில் அவதரித்த புனித ஒளி!
  கேட்டதும் கொடுத்து தட்டியதும் திறந்து தேடியே கண்ட ஒளி!
  மானுடர்களை இரட்சிக்க மாட்டு தொழுவத்திலே புனிதனாய் பிறந்த ஒளி!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  62. அடித்தால் அடி உதைத்தால் உதை வெட்டினால் வெட்டு
  என்று வன்முறை வளர்த்த தேசத்தில்
  ஒரு கன்னத்திற்கு மறுகன்னத்தையும், மேலாடை கேட்டால் உள்ளாடையையும் கொடுத்துவிடச் சொன்ன தனிமனிதன்…!
  அவன் பிறந்த இந்த நன்னாளில் மகிழ்ச்சி நிறைய,
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  63. உன் கண்ணிண் உத்திரத்தை நீக்கிவிட்டு
  பிறன் கண்ணின் துரும்பைப் பார் என்றவன்
  இதுவரை பாவம் செய்யாதவன்!
  எறியட்டும் முதல் கல் என்று எவரையும் தீர்ப்பிடாதவன்.
  உனக்கென்ன வேண்டுமென கேட்கிறாயோ
  அதையே பிறனுக்கும் கொடுக்கச் சொன்னவன்!
  தேவாலயங்களைத் துறந்து விட்டு தேகாலயங்களைத் திறக்கச் சொன்னவன்…!
  இயேசு பிறந்த இந்த திருநாளில்,
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  64. சர்ப்பம் தந்த பாவத்தை கர்ப்பம் வந்து தீர்த்த நாள்
  மரத்தால் விளைந்த பாவத்தை வரத்தால் களைந்த மந்திர நாள்
  வார்த்தை ஒன்று மனிதனாய் வடிவெடுத்த நல்ல நாள்
  தொழுவம் ஒன்று தொழுகை பெற்ற திருநாள்
  ஒதுக்கப்பட்டவை வணக்கம் பெறும் என வருகையால் சொன்ன நாள்.
  ஆடிடைக் கூட்டில் ஆதவன் உதித்த அதிசய நாள்
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  65. மானிடரை வாழவைக்க மண்ணில் வந்தார் இயேசு
  ஞாலம் காக்கும் ஞாயிராக எழுந்து வந்தார் இயேசு
  பாவிகளை ரட்சிக்கவே பிறந்து வந்தார் இயேசு
  காட்டிக் கொடுத்த கயவனுக்கும் கருணை செய்தார் இயேசு
  அந்த புனிதர் பிறந்த பொன்நாளை கொண்டாடுவோம்!
  இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

  66. பரிசுத்த ஆவியாய் நட்டநடு நிசியினிலே வந்து பிறந்தாரே
  பாவிகளை மீட்க மாட்டு கொட்டிலிலே வந்து பிறந்தாரே
  பராமபிதாவின் மைந்தன் மண்ணிலே வந்து பிறந்தாரே
  எல்லோரும் ஆனந்தமாய் கொண்டாடுவோமே!
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  67. வானுலகின் இராஜகுமாரன் வந்துபிறந்துவிட்டார் என்று
  வானில் தூய தாரகை ஒன்று ஒளிவீசி அறிவித்ததே!
  பரிசுத்தராம் கர்த்தர் இந்த பூமியில் வந்துவிட்டார் என்று
  பரமபிதாவின் புகழ்ப்பாடி ஆனந்தமாய் பறைசாற்றியதே
  ஏசுபிரான் பிறந்தநாளை உற்சாகமாய் கொண்டாடுவோமே
  எல்லோருக்கும் மனமார்ந்த கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்....

  68. நீ கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகை உன் வாழ்வில்
  கிறிஸ்து என நினைவு படுத்தவில்லை எனில் கிறிஸ்துக்குள் நீ இன்னமும் பிறக்கவில்லை!
  அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!!

  69. இல்லாதவருக்கு அருள்வதே சிறப்பு கொண்டாட்டங்கள் எல்லாம் கொடுப்பதிலே நிறைவுபெறட்டும்.
  அனைவருக்கும் இனிய இயேசு பிறப்பு மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.!!!

  70. கவலைகள் மறந்து இன்பம் புகுந்து
  நண்பர்கள் மற்றும் உறவினரோடு இயேசு பிறந்த நாளை
  மகிழ்ச்சியாய் கொண்டாட என் இதயம் கனிந்த
  கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள்!!!

  குறு செய்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்(Short merry christmas wishes)

  Shutterstock

  71. தட்டுங்கள் திறக்கப்படும் என்றவன் தட்டுமுன்னே –
  திறந்தே வைத்திருப்போம்..
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்....

  72. மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்.
  மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்.
  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்....

  73. பிறரின் பாவங்களுக்கு ,
  மனமுவந்து சிலுவை ஏற்கும்
  ஒவ்வொருவரும் தேவன் மகனே ..
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..

  74. சிலுவையில் அறையப்பட்ட
  தேவனிடத்திலிருந்து சிதறிய இரத்தால் பாவம் கழுவிய
  எங்கள் பாவத்தை எங்கே கொண்டு கழுவ ..
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..

  75. மனித மனமெனும் மயக்க நிலங்களில்
  கருணைப் பூவனம் குழுமிப் பூத்திட
  புனித நாயகன் பிறந்த நாளிதில்
  இனிய வாழ்த்துக்கள்

  76. இரவைத் தேற்றிடும் நிலவின் இனிமையாய்
  உறவும் உலகமும் இனிதாய் வாழ கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  77. இயற்கையில் உறைந்திடும்
  இணையற்ற இறைவா நீ என் இதயத்தில்
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!

  78. என்னை உணர்ந்திரு என்னோடு விழித்திரு
  என்னோடு நினைந்திரு உன்னோடு
  இனிய கிறிஸ்தும்ஸ் வாழ்த்துக்கள்!

  79. இன்னே நான்பேசி முடித்தேன்
  நீயும் நன்றாக கேட்டுக் கொண்டாய்
  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

  80. தேவாலயத்தில்
  மெழுகுவத்தியை அழவைத்து
  நாங்கள் கேட்ட மன்னிப்புக்கு
  எங்கே சென்று மனிப்பு கேட்க ...
  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

   

  மேலும் படிக்க - உங்கள் உறவுகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் (Christmas Gift Ideas In Tamil)

  மேலும் படிக்க - ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை பகிர்ந்து கொள்ள இனிமையான வாழ்த்துக்கள்!

  பட ஆதாரம்  - Shutterstock 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!