உங்கள் உறவுகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் (Christmas Gift Ideas In Tamil)

உங்கள் உறவுகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் (Christmas Gift Ideas In Tamil)

ஆஹா! இப்போதுதான் வருடம் பிறந்தது போல இருந்தது. புது வருட பிறப்பிற்கான சந்தோஷங்கள் இன்னமும் காயவில்லை. அதற்குள் பொங்கல் வந்தது.. அப்படியே ஒவ்வொரு பண்டிகையாக வந்து தீபாவளி கொண்டாடி முடித்திருக்கிறோம்.

அதற்குள் அடுத்ததாக கிறிஸ்துமஸ் (christmas) நமக்காக காத்திருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போன்ற தோற்றத்தில் இருந்த வருடம் இனிதே நிறைவடைய போகிறது. கிறிஸ்துமஸ் அன்று உங்கள் உறவுகளுக்கு நீங்கள் என்ன மாதிரியான பரிசு பொருள்களை தரலாம் என நினைத்து வைத்திருக்கிறீர்களா.. இங்கேயும் ஒருமுறை அதனை சரிபார்த்து கொள்ளுங்கள்.                                                                                   

Table of Contents

  அவருக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள் (Christmas Gift Ideas For Boyfriend)

  காதலை விட உலகில் அற்புதமான விஷயம் வேறென்ன இருந்து விட போகிறது! உங்கள் காதல் கணவர், காதலர், கணவரான பின்னர் காதலிக்க நேர்ந்தவர் என யாராக இருப்பினும் அவர்களுக்கு நீங்கள் என்ன பரிசுகளை வழங்கலாம் என்று பாருங்கள்.                       

  ஷர்ட் (Shirt)

  புதிய ஆடை உங்கள் ஆடவரை எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வைக்கும். ஆகவே உங்கள் அவர் விரும்பும் வகையில் ஒரு நல்ல ஆடையை நீங்கள் பரிசளியுங்கள்.       

  Latest Trends: Indian

  shirt

  INR 1,029 AT navy blue

  பேண்ட் (Band)

  முழுமையான ஆடையை பரிசளிப்பது இன்னும் சிறந்த உணர்வை தரும். அதனால் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் ஷர்ட்டிற்கு ஏற்றதொரு பேண்ட்டை தேர்ந்தெடுத்து பரிசாக வழங்குங்கள்                                                                                                          

  Latest Trends: Indian

  jean

  INR 1,329 AT Roadster

  தங்கம் (Gold)

  கிறிஸ்துமஸ் அன்று உங்கள் மனம் கவர்ந்த காதல் துணைக்கு நீங்கள் தங்கத்தை பரிசளிக்கலாம். அது அவரை மேலும் மதிப்பிற்குரியவராக மாற்றும்.

  Accessories

  Bracelet

  INR 57,763 AT Tanishq

  ஷாட் க்ளாஸெஸ் (Shot Glasses)

  சோசியல் ட்ரிங்கிங் என்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறி இருக்கிறது. ஆகவே உங்கள் கணவருக்கு இதனை பரிசளித்தால் என்னை முழுதுமாக புரிந்து கொண்டவள் நீயே என்று அவர் உருகிப்போவார்!

  Lifestyle

  glass

  INR 795 AT Rock

  ஹெட்செட் (Headset)

  ஆண்களுக்கான பிரியமான பொருள்கள் எல்லாமே எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இல்லையா. அவர்களுக்காக இப்படி ஒரு ஹெட்செட்டை பரிசாக வழங்குங்கள் !

  Lifestyle

  croma headset

  INR 1,990 AT croma

  ஜாக்கெட் (Jacket)

  ஆண்களுக்கு எப்போதுமே ரெக்சின் போன்ற மூலப்பொருள்களால் ஆன ஜெர்கின் அல்லது ஜாக்கெட்கள் மிக விருப்பம். பெரும்பாலும் டு வீலர் பயணங்கள் அவர்களை சந்தோஷப்படுத்தும் அதற்காகவே மழையை தாங்கும் வகையில் ஒரு ஸ்டைலான ஜாக்கெட்டை வாங்கி பரிசளிக்கலாம்.

  Latest Trends: Indian

  jacket

  INR 6,999 AT Noora

  சாக்லேட்கள் (Chocolate)

  யார் சொன்னது ஆண்களுக்கு சாக்லேட் பிடிக்காது என்று.. நம் முன் கெத்து காட்ட தங்களுக்கு பிடிக்காதது போல காட்டிக் கொண்டாலும் சாக்லேட் அவர்களுக்கும் பிடித்தமானதுதான். அவர்களும் சிறு குழந்தையில் அதனை சுவைத்தவர்கள் தான் இல்லையா. வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து பாருங்கள்

  Lifestyle

  truffles

  INR 470 AT Raffaelo

  வாட்ச் (Watch)

  ஆண்களுக்கு பிடித்தமான பொருள்களில் வாட்ச்கள் முக்கியமானவை. பெண்களுக்கு ஆடைகள் அதிகமாக இருப்பதை போலவே ஆண்களும் விதம் விதமாக வாட்ச் கட்ட விரும்புவார்கள். அவர்களுக்காகவே ஒன்றை வாங்கி கொடுக்கலாம்

  Fashion

  watch

  INR 1,025 AT Maxima

  பேக் (Bag)

  உங்கள் காதல் துணைவருக்கு ட்ரெக்கிங் போன்ற சாகசங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கலாம். அப்படி இருந்தால் இது போன்ற ஒரு பேக் பரிசளியுங்கள். எங்கு சென்றாலும் உங்கள் நினைவோடுதான் செல்வார்.

  Accessories

  backpack

  INR 299 AT FRAZZER

  புத்தகம் (Book)

  உங்கள் காதல் துணைக்கு புத்தகம் தருவதை தவிர சிறந்த பரிசு வேறென்ன இருக்க முடியும் . அதுவும் இப்படியான ஒரு புத்தகத்தை பரிசளித்தார் அவர் மனம் உங்கள் வசம் மட்டுமே.

  Fiction

  book

  INR 122 AT english

  உறவினர்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள் (Christmas Gifts For Relatives)

  கிறிஸ்துமஸ் என்றாலே உறவினர்கள் மீது நமது அன்பை பொழிவதற்கான ஒரு வாய்ப்புதான் இல்லையா. நம்மோடு உடன் இருந்து நம்மை நேசிக்கும் அவர்களுக்கு சில ஸ்பெஷல் பரிசுகள் கொடுங்கள்.

  கிறிஸ்துமஸ் ட்ரீ காம்போ (Christmas Tree Combo)

  இப்படி இரண்டு கிறிஸ்துமஸ் மரங்களை நீங்கள் ஒன்றாக வாங்கி இரண்டு உறவினர்களுக்கு பரிசளிக்கலாம். அது அவர்கள் வீட்டை அலங்கரிக்கும்போதெல்லாம் உங்கள் மீது அன்பை அதிகப்படுத்தும்.

  Lifestyle

  christmas tree

  INR 299 AT Archies

  பூக்கள் (Flowers)

  கிறிஸ்துமஸ் அன்று பூக்கள் நிறைந்த பொக்கே ஒன்றை பரிசளிக்கலாம். அவர்களுடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மேலும் அழகாக மாற்றும். 

  Lifestyle

  flowers

  INR 492 AT igp

  மிட்டாய்கள் (Candles)

  உங்கள் உறவினர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் இனிமையாக அமைய இது போன்ற அஸ்ஸார்டெட் மிட்டாய் வகைகளை பரிசாக கொடுங்கள். 

  Lifestyle

  Chocolates

  INR 499 AT Ferns n Petals

  கிப்ட் ஹம்பர்கள் (Gift Humpers)

  ஒரு கிரீட்டிங் கார்டு சில இனிப்புகள் மற்றும் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை அடங்கிய இந்த வகை கிறிஸ்துமஸ் பரிசுகள் உங்கள் உறவினர்களை மகிழ்விக்கும்.

  Lifestyle

  gift hamper

  INR 1,033 AT Archies

  குஷன் கவர்கள் (Cushion Covers)

  உறவினர்கள் தங்கள் இல்லங்களை அலங்கரிக்கவும் அவர்களுக்கு பயன்படும் வகையிலும் பரிசளிப்பதுதான் சிறந்தது. அந்த வகையில் இந்த குஷன் கவர்களை பரிசளிக்கலாம்

  Lifestyle

  pillow cover

  INR 674 AT India Circus

  நண்பர்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள் (Christmas Gift For Friends)

  நண்பர்கள் இல்லாத விழாக்கள் சிறப்பாக இருக்காது. உங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து செய்வது அவர்களை மேலும் நெகிழ வைக்கும். உடன் சில பரிசுகளை கொடுங்கள்.

  ஸ்பா பரிசு (Spa Gift)

  உங்கள் நண்பருக்கு இதனை விட சிறந்த பரிசு வேறென்னவாக இருக்க முடியும். ஒரு அமைதியான நாளை அவருக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

  Relationships

  spa

  INR 1,275 AT Soulflower

  ஹூடி (Huti)

  மார்கழி மாதம் ஆரம்பித்திருக்கும் அந்த வேளையில் நீங்கள் உங்கள் நண்பருக்கு இது போன்றதொரு ஹூடியை பரிசளியுங்கள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதால் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

  Lifestyle

  hoodie

  INR 750 AT SV

  காஃபி மக் (Coffee Mag)

  காஃபி டீ பிரியர்களுக்கு இந்த மாதிரியான கோப்பைகளை பரிசாக கொடுக்கலாம். தினமும் அவர்களின் நாள் உங்கள் நினைவுடன் ஆரம்பிக்கட்டும்

  Lifestyle

  Adulting Coffee Mug

  INR 299 AT Giftcart

  உறைந்த தருணங்கள் (Frozen Moments)

  உங்கள் நண்பருடன் நீங்கள் எடுத்த புகைப்படங்களை இப்படி சிறு சிறு மேக்னெட் பிரேம்களுக்குள் அடைத்து ஒரு டஸ்ட்டர் உடன் அவர்களுக்கு பரிசளிக்கலாம். அவர்கள் வீட்டு பொருள்களில் உங்கள் நட்பு நிலைக்கட்டும்.

  Lifestyle

  photo magnet

  INR 950 AT OyeHappy

  ஓவியம் (Painting)

  உங்கள் நண்பரின் வீட்டில் நீங்கள் தேர்ந்தெடுத்த ஓவியம் அலங்கரிக்க வேண்டும் என்றால் நீங்கள் இப்படியான பரிசுகளை அவர்களுக்கு வழங்கலாம்.

  Lifestyle

  wall painting

  INR 1,495 AT Amazon

  பிரேஸ்லெட் (Bracelet)

  உங்கள் நண்பருக்கு அல்லது தோழிக்கு திருமணம் ஆகியிருக்கலாம். அவர்கள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான நபர்கள் என்பதை நீங்கள் இப்படியான பிரேஸ்லெட் வாங்கி அவர்களுக்கு தருவதன் மூலம் உணர வைக்கலாம். 

  Lifestyle

  bracelet

  INR 8,898 AT DW

  பயணத்தை பரிசளிக்கலாம் (Travel Can Be Rewarded)

  உங்கள் நண்பருக்கு பயணம் என்றால் பிடிக்கும். ஆனால் செல்ல யோசிக்கிறார் என்று உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் அவருக்கு இதுபோன்ற பயண கார்டை பரிசளிக்கலாம். நீங்கள் பரிசளித்ததில் இருந்து ஒரு வருடத்திற்குள் அவர் விருப்பமான நேரத்தில் விருப்பமான இடத்திற்கு செல்லலாம்.

  Lifestyle

  travel card

  INR 5,000 AT clear trip

  வாசனை திரவியம் (Perfume)

  உங்கள் நண்பர்களுக்கு வாசனை திரவியங்களை பரிசளிப்பது அவர்களை மேலும் பெருமைப்படுத்தும் செயலாகும். அவர்களால் தேர்ந்தெடுக்க நேரம் இல்லாமல் இருக்கும் சமயம் நீங்கள் அவருக்காக தேர்ந்தெடுப்பது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

  Lifestyle

  perfume

  INR 1,199 AT beyoutiful

  டைரி (Diary)

  அவ்வளவுதான் இதோ 2019 முடிய இன்னும் 6 நாட்கள்தான் இருக்கிறது. ஆகவே கிறிஸ்துமஸ் அன்று அதற்கு அடுத்த வருடத்திற்கான டைரிக்களை பரிசளிப்பது உங்கள் நண்பர்களை ஸ்பெஷலாக்கும்

  Lifestyle

  diary

  INR 269 AT cubic

  சகபணியாளர்களுக்கான பரிசுகள் (Gift For Peers)

  உடன்பணிபுரிபவர்களுடன் உங்கள் கிறிஸ்துமஸை கொண்டாடுவது ஆரோக்கியமான அலுவலக வாழ்க்கைக்கு உதவி செய்யும். அவர்களுக்கான சில பரிசு பொருள்கள் இதோ 

  கிப்ட் ஹாம்பர் (The Gift Humper)

  உங்கள் சக பணியாளர்களுக்கு பயன்படும் வகையில் நீங்கள் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குவதே அவர்களை மகிழ்விக்கும். இப்படியான ஒரு பியூட்டி பேக் அவர்களை சந்தோஷமாக்கும். ஆண்களுக்கும் தனியாக இருக்கிறது. 

  Lifestyle

  gift hamper beauty

  INR 1,627 AT Forest Essentials

  லான்டர்ன் (Lantern)

  உங்கள் சக பணியாளர்கள் வீட்டில் உங்கள் பெயர் சொல்லி ஒளிரும் வண்ணம் ஒரு அழகான லான்டர்ன் வாங்கி பரிசளிக்கலாம். அது எப்போதும் உங்கள் மீதான மரியாதையை உயர்த்தும்.

  Lifestyle

  lantern

  INR 172 AT applique

  வால் ஆர்ட் (Wall Art)

  உங்கள் சக பணியாளர்களுக்கு இப்படி ஒரு சுவரில் தொங்கும் வகையான கலைப்பொருள்களை பரிசாக வழங்கலாம். அவர்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ மாட்டி அழகு பார்ப்பார்கள்.

  Lifestyle

  wall hanging art

  INR 1,199 AT mandala

  கோல்ட் காயின் (Gold Coin)

  சகபணியாளர்கள் அல்லது குழு உறுப்பினர்களுக்கு வசதி இருப்பின் கோல்ட் காயின்களை பரிசளிக்கலாம். உங்கள் மீதான மரியாதை உயரும். 

  Lifestyle

  gold coin

  INR 4,325 AT Tanishq

  வால் க்ளாக் (The Tall Clock)

  வழக்கமான பரிசுதான் என்றாலும் அதிலும் வித்தியாசத்தை புகுத்தி நவீனத்திற்கு ஏற்ப உங்கள் பரிசை கொடுக்கலாம். அவர்களும் அதனை பயன்படுத்தி உங்களை அடிக்கடி புகழ்வார்கள். 

  Lifestyle

  wall clock

  INR 382 AT Shein

  தனித்துவமான கிறிஸ்துமஸ் பரிசுகள் (Unique Christmas Gift)

  சில பரிசுகள் என்பது அவர்களுக்கு மட்டுமேயானது என்பதை அவர்களும் அறியும் வகையில் நம்மால் தர முடியும். அவர்கள் பெயர் எழுதப்பட்ட பேனா முதல் அவர்கள் புகைப்படம் போடப்பட்ட தலையணை வரை எல்லாமே இதில் அடங்கும்.

  LED குஷன் தலையணைகள் (LED Cushion Pillow)

  உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு அவர்களின் புகைப்படம் போட்ட குஷன் தலையணைகள் தருவது வழக்கம். ஆனால் இந்த LED குஷன்களுக்குள் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது. உள்ளே ஒரு பொத்தானை அழுத்தினால் உங்கள் பரிசுக்குரியவரின் முகம் மஞ்சள் நிற LED விளக்கில் மிக அழகாக மின்னும். 

  Lifestyle

  led pillow

  INR 549 AT led

  விஸ்கி டம்ளர்கள் (Whiskey Tumblers)

  உங்கள் நண்பர்கள் அல்லது காதல் துணைக்கு அவர் பெயர் பொறித்த இப்படியான விஸ்கி டம்ளர்களை பரிசளிக்கலாம். இது அவர்களை மிக ஸ்பெஷலாக உணர வைக்கும். 

  Lifestyle

  whiskey glass

  INR 999 AT whiskey

  காம்போ பரிசுகள் (Combo Gifts)

  இரண்டு பொருள்கள் ஒரே காம்போவில் பர்சனலைஸ் செய்து கொள்ள முடியும். ஒரு வாழ்த்து அட்டை மற்றும் ஒரு காஃபி மக் இரண்டிலும் உங்கள் அன்புக்குரியவரின் படத்தினை இடம் பெற செய்து அதன் பின் பரிசளிக்கலாம்

  Lifestyle

  greetings

  INR 799 AT Archies

  LED சுழலும் க்யூப் (LED Rotating Tube)

  ஒரு கண்ணாடி கியூபிற்குள் உங்கள் ப்ரியத்துக்குரியவர்களின் புகைப்படத்தினை வைத்து அதனை LED ஓளியில் இரவெங்கும் ஒளிர செய்ய முடியும். இந்த வகை க்யூப்கள் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம்

  Lifestyle

  led cube

  INR 1,350 AT IGP

  கீ செயின்கள் (Key Chains)

  பரிசுக்குரியவரின் பெயர் பொறிக்கப்பட்ட பிளாஷ் லைட் அடங்கிய கீ செயின்கள் நல்ல பரிசுக்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது. 

  Lifestyle

  key chain

  INR 250 AT Vista Print

  வால் க்ளாக் (Tail Clock)

  உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அவர்களின் புகைப்படம் போடப்பட்ட வால் கிளாக்குகளை பரிசாக வழங்கலாம். அவர்கள் அன்பு காலத்தால் அழியாமல் நிலைக்கட்டும்.

  Lifestyle

  wall clock

  INR 449 AT Ferns n Petals

  கேலிச்சித்திர வகை (The Cartoon Type)

  ஒரு தமாஷான தருணங்களை கொண்டாட அல்லது உங்கள் அன்புக்குரியவரை சிரிக்க வைக்க இப்படியான அவரை போன்ற கேலி சித்திரம் ஒன்றை பரிசாக வழங்கி விடுங்கள்.

  Lifestyle

  caricature

  INR 449 AT Ferns n Petals

  சுழலும் போட்டோ பிரேம்கள் (Rotating Photo Frames)

  கொஞ்சம் வித்யாசமான பரிசு கொடுக்க நினைத்தால் சுழலும் வகையில் நான்கு தருணங்களை கொண்ட போட்டோ பிரேம்களை பரிசாக கொடுங்கள்

  Lifestyle

  photo frame

  INR 799 AT Archies

  கீ ரிங் (Key Ring)

  இதய வடிவிலான கீ ரிங்கில் உங்கள் காதலோடு பிரியாமல் இணைந்து இருங்கள். ஒரு கண்ணாடி இதயத்துக்குள் உங்கள் காதல் வளரட்டும். 

  Lifestyle

  transparent key chain

  INR 460 AT GONDGET

  பெர்சனலைஸ்ட் டைரிகள் (Personalist Diaries)

  வருடத்தின் பெயர் போடப்பட்ட டைரிகள் உங்களை சலிப்படைய வைத்திருக்கலாம். அந்த நேரங்களை விட்டு விடுங்கள். உங்கள் ப்ரியத்துக்குரியவர்களின் புகைப்படம் அவர்கள் வார்த்தைகள் போடப்பட்ட டைரிக்களை உங்கள் சொந்தமாக்கி கொள்ளுங்கள். 

  Lifestyle

  personalised diaries

  INR 250 AT Vista Print

  குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள் (Christmas Gifts For Kids)

  குழந்தைகளுக்கு பரிசளித்து அவர்களை மகிழ்விப்பதுதான் கிறிஸ்துமஸ் நோக்கமே. சாண்டாக்ளாஸ் உருவானதும் அதற்காகவே. ஆகவே குழந்தைகளுக்கான பரிசுகளையும் பார்த்து விடுங்கள். 

  நைட் க்ளோ ஸ்டிக்கர்கள் (Night Glow Stickers)

  இரவு நேரத்தில் பிரபஞ்சத்தின் மடியில் உறங்குவது போன்ற தோற்றத்தை தரும் க்ளோ ஸ்டிக்கர்கள் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமானது. பரிசளிக்கலாம்.

  Lifestyle

  night glow

  INR 584 AT moon and star

  நிறம் மாறும் விளக்குகள் (Color Changing Lights)

  இதுவும் நைட் க்ளோ ஸ்டிக்கர்கள் போன்றது. ஆனால் அதனை விட உண்மையானது. இதனை சுவரில் ஒட்ட வேண்டியதில்லை. இரவு விளக்கை எரிய விட்டால் போதுமானது.

  Lifestyle

  ked night lamp

  INR 549 AT saiyam

  கலரிங் புத்தகங்கள் (Coloring Books)

  குழந்தைகளுக்கு வண்ணங்கள் பிடிக்காமல் இருக்குமா.. அவர்களுக்காகவே 20 புத்தகங்கள் அடங்கிய பேக்கை வாங்குங்கள். பரிசளியுங்கள். கிறிஸ்துமஸின் வண்ணம் அவர்கள் முகமெங்கும் ஜொலிக்கும்.

  Lifestyle

  colouring books

  INR 275 AT sawan

  பவுலிங் கேம் (Bowling Games)

  சிறு குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பவுலிங் கேம் வாங்கி கொடுக்கலாம். வண்ணங்கள் நிறைந்த எதுவும் அவர்களை ஈர்க்கும்.

  Lifestyle

  bowling set

  INR 270 AT Amazon

  BEN 10 லேப்டாப் (Ben 10 Laptop)

  குழந்தைகள் விளையாடி கொண்டே படிக்கும் வகையில் உள்ள இந்த லேப்டாப்கள் அவர்களுக்கு பரிசளிக்கலாம். ben 10 பிடிக்காத குழந்தைகளே கிடையாது

  Lifestyle

  laptop

  INR 446 AT om

  பென்சில் பாக்ஸ் (Pencil Box)

  கிறிஸ்துமஸ் என்றால் மெழுகுவர்த்திகளும் கிறிஸ்துமஸ் மரமும் மட்டும்தான் பரிசளிக்க வேண்டுமா.. குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவத்தில் பென்சில் பாக்ஸ்களை பரிசாக கொடுங்கள்.

  Lifestyle

  pencil box

  INR 299 AT sillyme

  பெட் கவர் (Pet Cover)

  குழந்தைகளின் தூக்கத்தை கொண்டாட்டமாக மாற்றும் பில்லோ மற்றும் பெட் கவர்களை அவர்களுக்கு பிடித்தமான பொம்மை பிரிண்ட்களுடன் கொடுங்கள் 

  Lifestyle

  bedspread

  INR 249 AT singhsvillas

  கலரிங் டூல்ஸ் (Coloring Tools)

  குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் கலரிங் டூல்ஸ் அவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். அதனை அழகாக அடுக்கி வைக்க வசதியான பாக்ஸ் உடன் பரிசளிப்பது நேர்த்தியானது. 

  Lifestyle

  colouring tools

  INR 311 AT amazia

  சாக்லேட் பாக்ஸ் (Chocolate Box)

  அவர்களின் பெற்றோர் அனுமதியுடன் இப்படியான சாக்லேட் பாக்ஸ்களை அவர்களுக்கு பரிசளிக்கலாம். இந்த கிறிஸ்துமஸ் அவர்களுக்கு மிகவும் இனிப்பாக மாறட்டும்

  Lifestyle

  chocolate box

  INR 750 AT pralines

  டால் ஹவுஸ் (Doll House)

  ஒரு நல்ல குழந்தைக்கு இதனை விட சிறந்த பரிசு இல்லை. நாமெல்லாம் மணலில் வீடு கட்டி விளையாடினோம். இன்றைய தலைமுறைக்கு இந்த டால் ஹவுஸ் என்பது மிக மிக பிடித்தமான பரிசு

  Lifestyle

  doll house

  INR 6,241 AT hoomedu

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!