ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை பகிர்ந்து கொள்ள இனிமையான வாழ்த்துக்கள்!

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை பகிர்ந்து கொள்ள இனிமையான வாழ்த்துக்கள்!

ஆங்கில புத்தாண்டு என்று சொன்னாலே, ஒரு குதூகலம் அனைவருக்குள்ளும் வந்து விடும். இந்த நாளை உலகமே கோலாகலமாக கொண்டாடும் என்று சொன்னால், அது மிகையாகாது. ஆங்கில புத்தாண்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் உற்சாகமடைய செய்யும். மார்கழி மாத பணியும், செல்லமாய் வெப்பத்தோடு வருடும் சூரியனும், முத்துக்களாய் காலை பனித்துளியும், இந்த உலகத்தை அழகுபடுத்த, பிறக்கும் 2௦2௦ஆம் ஆண்டு புத்தாண்டை கோலாகலமாக நீங்கள் கொண்டாட திட்டமிட்டால், உங்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்ய, இங்கே சில இனிமையான புத்தாண்டு வாழ்த்து தொகுப்புகள்(new year wishes), உங்களுக்காக.

Table of Contents

  நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்(New year wishes for friends)

  1. நண்பா, துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும்
  புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும் என் வாழ்வில் அர்த்தங்களை கொண்டு வந்த என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  2. கனவுகளுடன் முடிந்து விட்டது நேற்றைய நாள்
  சாதனைகளுக்காக பிறக்கிறது இன்றய நாள்
  நாட்கள் பெருமை மிக்கது
  அதிலும் இந்த நாள் மிகவும் பெருமை மிக்கது
  விடியல் காணப் போகும் விழிகளுக்கு
  என் தோழமைகளுக்கு இதோ
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  3. உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு
  உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி உற்காகத்துடனும் உல்லாசத்துடனும் உன்னத வாழ்வு வாழ
  உளம் கனிந்த எனது 2௦2௦ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

  4. கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட,
  லட்சியங்களை சுமந்து இரத்தம் சிந்து
  உலகம் உன்னை போற்றும்!
  இந்த புதிய வருடம் உனது இலட்சியங்கள் நிறைவேற
  இறைவனை வேண்டிகொள்கிறேன் என் நண்பா!
  என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

  5. வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை,
  தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றி தான்!
  இந்த புத்தாண்டு முதல் நீ வெற்றிகளை குவிக்க
  என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

  6. நட்பும் உறவும் நன்மதிப்பு இழக்காமல்
  நகமும் சதையுமாய் நம்மோடு இருக்கட்டும்..!
  தொடரும் தொல்லைகள் தொடர்கதை ஆகாமல்
  படரும் கொடியாய் பரவட்டும் சந்தோசம்..!
  என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

  7. இடரும் இன்னலும் இனிமேலும் துளிராமல்
  வளரும் வெண்ணிலவாய் வருங்காலம் பிறக்கட்டும்..!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..!!!

  8. நிம்மதி நிலை பெற, மமதை இன்றி,
  மனமதை காத்திடுவோம்.. துயரங்களுக்கும், தடைகளுக்கும்
  விடை கொடுத்திடுவோம்..
  இப்புத்தாண்டு இன்னல் இல்லா, இனிய ஆண்டாய்
  அனைவருக்கும் அமையட்டும்!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..!

  9. கண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட
  எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர
  குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும்
  இல்லத்தில் சுகமும் இனிதே தங்கிட
  நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  10. இனிப்புடன் புத்தாடை போர்த்தி உவப்புடன்
  உளமார வாழ்த்தி சுற்றமும் நட்பும்
  நலம் காண நல்லதொரு விருந்து
  நாம் சமைப்போம் !
  வந்திருக்கும் 2020ஆண்டை கரம்
  குவித்து சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.
  உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் இனிதே
  இன்பம் பெருகி வளமோடு வாழ
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  காதலர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் (New year wishes for lovers)

  Shutterstock

  11. ஆங்கிலப் புத்தாண்டு அழகாய்ப் பிறந்தது!
  ஆனந்த வாழ்வின் வாசல்கள் திறந்தது!
  நெஞ்சின் பாரமெல்லாம் நேற்றோடு இறந்தது!
  நேர்மறை எண்ணங்கள் நெஞ்சோடு இணைந்தது!
  நம்பிக்கை மழைத்துளி நம்மை நனைத்தது! - இனி
  நன்மைகள் மட்டுமே நமக்காய் விதித்தது!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  12. எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துக்களை சொல்கிறார்கள் அதற்க்கு காரணமான இரவுக்கும் பகலுக்கும் யாரும் சொல்லாததால் அதற்க்கு நான் சொல்லிவிட்டேன்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  13. யாருக்கும் யாரையுமே பிடிக்காமல் போகாது
  அனைவருக்குமே அனைவரையுமே பிடிக்கவும் செய்யாது.
  சிலர் அப்படி...சிலர் இப்படி...ஆனால் ..எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குமே.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  14. ஆளப் போகும் புத்தாண்டால் நன்மை பெருகட்டும்!
  நேற்று நடந்தவை எல்லாமே ஒரு பேருந்து பயணத்தின்
  நிகழ்வாகட்டும்
  இனி வரும் நாட்கள் மகிழ்ச்சி வனத்திற்கே இட்டுச் செல்லட்டும்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  15. பூக்கும் பூவிதழில் வெளிப்படும் வாசம் போல்
  முயற்சிகள் யாரும் மலர்ந்து வெற்றிவாகை எனும் வாசம்
  உன் வாழ்வில் வந்திட
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  16. மலர்ந்திட்ட புதுவருடம் நம்முள் நேசத்தை அதிகரித்து,
  நல்ல மாற்றத்தை தரட்டும்
  ஒவ்வொரு விடியலும், இனிதாய் பிறக்கட்டும்
  மனம் நிறைந்த அன்போடு
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  17. நிம்மதியான வாழ்வு வேண்டும்
  நித்திரை தினமும் பற்றிட வேண்டும்
  உற்றவர் உறுதுணை பெற்றிடவேண்டும்
  நற்றவம் எங்கும் நல்கிடவேண்டும் வருவாயே!
  என் மனதை கவர்ந்தவளுக்கு,
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  18. அன்பும் அறமும் தளைத்திடவே
  ஆண்டவன் அருளும் ஒங்கிடவே
  அற்புதங்கள் பல நிகழ்ந்திடவே
  வருவாய் புத்தாண்டே மலர்ந்திடவே!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  19. உன் விரலசைவில் விடியல் விடியட்டும்.
  வாழ்க பல்லாண்டு வளர்க புகழ் நீண்டு
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  20. என் வாழ்க்கையில் நல்லதோர் மாற்றத்தை தந்தவனுக்கு,
  என்றும் என் மனதில் உனக்காக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை தந்தவனுக்கு
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  குடும்பத்தினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்(New year wishes for family)

  21. இந்த இனிய புத்தாண்டில்
  உங்கள் குடும்பமும்
  நீங்களும் எல்லா வளமும்
  நலமும் பெற வேண்டும்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  22. சூரியன் கதிர் பரப்ப... தாமரை இதழ் விரிக்க...
  அந்தணர் இன்னிசை கானம் வசிக்க...
  புது மனப்பெண்ணாய் பவனி வா "இனிய புது வருடமே".
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  23. வாழ்க்கை வளம் பெற வாழ்த்திப்பாடும் சொற்களெல்லாம்
  வந்து சேரட்டும்!
  உங்கள் வாசல் கதவை தட்டிடவே
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  24. புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
  மாற்றங்கள் மலரட்டும்
  இன்னிசை முழங்கட்டும்
  எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  25. ஆண்டிற்கு ஒருமுறை மலர்வாய்
  இல்லம் தோறும் மகிழ்ச்சி தருவாய்
  பேதமின்றி இருப்பாய்
  வாழ்க்கையில் வழமையை தருவாய்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  26. இருளை நீக்கி ஒளியை அருள
  புதிய ஆண்டே வருக!
  புதிய தொடக்கத்தில் புத்தொளி தருக
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  27. புதிய சரித்திர புத்தாண்டு புறப்பட்டு வருது
  பூமிக்கு மறுப்பிறப்பு புனிதமாய் அமையுது
  விதியை மாற்றும் வேகமிங்கு வெளிச்சமாய் தெரியுது
  வீரமிக்க புதுவுள்ளம் எல்லோருக்கும் பிறக்குது
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  28. முன்னேற்ற பாதையிலே
  முனைந்து நின்றால் ஏற்றமுண்டு
  எந்நாளும் துன்பமில்லை
  என்றறிய வந்ததின்று
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  29. உழைத்தவன் அறிவான் உழைப்பின் அருமை,
  அது தான் அவன் உயர்வுக்கு பெருமை
  நல்லதையே நினைப்போம், உதவிகள் செய்வோம்,
  மானுடம் வாழ மனிதநேயம் காப்போம்
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  30. மதமும் இனமும் மனதினே ஆளாமல்
  மனிதமும் புனிதமும், மலையாய் உயரட்டும்..!
  பயமும் கோபமும் பழக்கத்தில் இல்லாமல்
  பணிவும் துணிவும் பன்மடங்கு பெருகட்டும்..!
  அன்னை தந்தையின் அன்பினை மறக்காமல்
  அவர்களே தெய்வமென்று அகிலமும் வணங்கட்டும்..!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

  வாட்ஸ் ஆப் புத்தாண்டு வாழ்த்துக்கள்(New year whatsapp status)

  Shutterstock

  31. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
  மாற்றங்கள் மலரட்டும்.. இன்னிசை
  முழங்கட்டும்.. எல்லோர் வாழ்விலும்
  மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

  32. சாதி மத பேதமற்ற சமதர்ம சமுதாயம்
  மேதினியில் மலர்கவென்று
  இன்று மலர்ந்த புதுவசந்தம்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  33. இறைவன் அருளால்
  இன்பம் பொங்கவும்
  இல்லறம் சிறக்கவும்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  34. நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று
  சிறப்பாய் வாழ என் இனிய
  2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  35. துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருக
  என் இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்....

  36. முயற்சி விதைகளை தூவி, நம்பிக்கை பயிர்களை மட்டுமே
  முளைக்க செய்வோம்.
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  37. இந்த புத்தாண்டில் அனைவருக்கும் புதுமைகள் தொடரட்டும்
  மாற்றங்கள் மலரட்டும், இன்னிசை முழங்கட்டும்,
  எல்லோர் வாழ்விலும், மகிழ்ச்சி நிலைக்கட்டும்
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  38. கண்ட கனவுகள் கண்முன்னே கூடிவர
  எண்ணம் சிறக்க இன்பம் பெருக
  வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர
  மண்ணும் செழிக்க வருவாய் புத்தாண்டே!

  39. உறுதிமொழிகள் சிலவற்றை மனதிலே ஏந்தி ,குதூகுலமாய்
  புத்தாண்டை தொடங்கிடுவோம்..
  மாசில்லா பூமியை,வருங்கால தலைமுறைக்கு தந்திடவும்,
  நெகிழி பையை ஒழித்துசுற்று சூழல் காத்திடவும்..
  என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  40. நல்லதே நடக்க, நானிலம் சிறக்க,
  மகிழ்ச்சி பெருக, மனிதநேயம் செழிக்க
  வரவேற்போம், 2020 புத்தாண்டை,
  வாழ்வோம் பல்லாண்டு.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  சுவாரசியமான புத்தாண்டு வாழ்த்துக்கள்(Funny new year messages)

  41. வாழ்கையை கொண்டாடுங்கள்
  புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
  உங்களுக்கு என்னுடைய
  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  42. நல்லவற்றைய மட்டுமே நினைத்து,
  உதவிகள் மட்டுமே செய்து,
  மானுடம் வாழ, மனித நேயம் காத்து,
  பொல்லா காலம் போனதென்றே நினைத்து,
  நல்ல காலம் பிறந்ததேன்றே வாழ்வோம்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  43. வாடிய முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்திட
  குறுகிக் குனிந்தவன் நெஞ்சம் நிமிர்ந்திட
  வறுமைத் தொல்லை வாட்டம் போக்கிட
  தலைமுறைத் தாண்டியும் தமிழன் வாழ்ந்திட
  நலம் யாவும் மங்கலமாய் நம்வீடு
  வரவேண்டி வந்தது இந்த புத்தாண்டு
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  44. சிறு மிட்டாயொன்றை சிரிப்போடு பறித்திட
  குட்டி கைநீட்டி குறு குறுவென காத்திருக்கும் ஒரு
  குழுந்தையையை போல மனசு காத்திருக்கிறது
  மலரும் புத்தாண்டிற்கு!

  45. இளமை பொங்கி இனிமை ஓங்கிட
  வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட
  தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட
  வளமும் பெருகிட வருவாய் புத்தாண்டே!

  46. மதமும் இனமும் மனதினே ஆளாமல்
  மனிதமும் புனிதமும் மலையாய் உயரட்டும்..!
  இடரும் இன்னலும் இனிமேலும் துளிராமல்
  வளரும் வெண்ணிலவாய் வருங்காலம் பிறக்கட்டும்..!

  47. செல்வம் பெருகி வருமை தீர
  இல்லாமை என்ற நிலையும் மறைய
  நல்வினை புரிந்து நன்மை பெற்றிட
  வல்லமை தந்திட வருவாய் புத்தாண்டே!
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  48. வயலெல்லாம் விளைந்திருக்க
  வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
  மனமெல்லாம் நிறைந்திருக்க
  மங்கலமே நிலைத்திருக்க
  வருகின்ற புத்தாண்டு
  வளம் சேர்க்கட்டும்!
  மங்களம் பொங்கி வாழ்வு வளம்பெற அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  49. புதிய சூரியன் கிழக்கே உதித்தது! - அது
  எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் எரித்தது!
  மகிழ்ச்சி என்னும் மயில் தோகை விரித்தது!
  மனதில் நம்பிக்கைகள் மலர்ந்து சிரித்தது!
  வளமான வாழ்வின் வழிகள் தெரிந்தது!
  பிணிகள் எல்லாம் நம்மை விட்டுப் பிரிந்தது!
  நேற்றோடு போதும் கண்ணீர் வடித்தது! - இனி
  நமை வந்து சேரும் நமக்குப் பிடித்தது!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  50. முன்னூற்றி அருபத்தைந்தேகாலுடன் தன்
  முழு வருட பயணத்தில் இதோ
  எழுத்தறிவித்த இறைவனின் திரு விளையாட்டில்
  எண்ணில் அடங்கா இன்ப துன்பங்களை கடந்து
  மண்ணுயிருக்கும் பொன்னுயிருக்கும்
  மலையளவு சரிந்தாலும் தன்
  நிலையளவு தாண்டாத பூமியில்
  நிலையாய் வாழ்ந்த இரவு பகலே உனக்கு
  எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  மகிழ்ச்சி தரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்(Happy new year quotes)

  Shutterstock

  51. நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம்
  வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு
  உங்களுக்கு கொண்டுவரட்டும்

  52. நாளைய வாழ்க்கை என்னும் புது பானையில்….
  புதிய எண்ணங்கள், புதிய நண்பர்கள், புதிய முயற்சிகள்
  புதிய நம்பிக்கைகள், புதிய திட்டங்களை சேர்த்து
  சோர்விலா செயல்கள் என்னும் தீயை மூட்டி
  பொங்கட்டும் புது வாழ்வு …!

  53. மதங்கள் அற்ற ஒரு மாதம் பிறக்கட்டும் சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும் பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாய் இந்த புத்தாண்டு பிறக்கட்டும்

  54. இனி வரும் நாட்கள் எல்லாம் உனக்கான நாட்களே அதை அற்புதமாக மாற்றுவதும் அகோரமாக மாற்றுவதும் உன் கையிலே உள்ளது. மலரட்டும் புத்தாண்டு செழிக்கட்டும் உன் வாழ்வு..

  55. நல்லவற்றை நினைப்போம், உதவிகள் பல செய்வோம், மனித நேயத்தை காப்போம், பொல்லாத காலம் எல்லாம் போனது என்று எண்ணி இனி வரும் புத்தாண்டை இனிமையாய் கழிப்போம்.

  56. அத்தனை கனவுகளும் நினைவாக சொந்தங்கள் அனைத்தும் கூடி வர என்னா உயரத்தை ஏறி பிடிக்க பகைகள் நீங்கி நட்பு மலர துவங்கட்டும் இந்த புத்தாண்டு.

  57. ஏழ்மை காற்றில் இன்றே பறந்திட, பாழ்நிலம் முழுவதும் பசுமை அடைந்திட சபலங்கள் நீங்கி மானுடர் வாழ்த்திட,
  சங்கடம் அனைத்தும் சாம்பலாய் எறிந்திட பூமியின் வயதை ஒன்று கூட்டிட வாராய் புத்தாண்டே

  58. செல்வம் பெறுக, வறுமை நீங்க , சோகம் மறைந்து வளமை பிறக்க, அறிவும், துணிவும் அனைவரும் பெற்றிட நல்லோர் பெருகி உலகம் செழித்திட நடு இரவில் உதித்தெழுவாய் புத்தாண்டே…

  59. புதிய எண்ணங்கள், புதிய முயற்சிகள், புதிய உறவுகள், புதிய உணர்வுகள், புதிய நம்பிக்கை, என அனைத்தும் புதிதாய் பழைய சொந்தங்களோடு மலரட்டும் இந்த புத்தாண்டு..

  60. ஒவ்வொன்றாய் கிழிக்கப்பட்டு ஒரே ஒரு காகிதத்தோடு இன்று ஓரமாய் தொங்கிக்கொண்டிருந்தது பழைய நாள்காட்டி.. நம் வாழ்வில் வேகமாய் ஓடிய நாட்களுக்கு இன்று அதுவே சாட்சி..

  ஊக்கமளிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்(New year motivational messages)

  61. இந்த வருட புத்தாண்டு
  உங்களுக்கு உங்களது வாழ்வில்
  மிகுந்த சந்தோசங்களையும்
  வளங்களையும் கொண்டுவர
  வாழ்த்துகிறேன்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  62. இந்த இனிய புத்தாண்டு
  உங்களுக்கு ஒரு இனிய
  சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  63. இது 2௦2௦ஆம் ஆண்டு புத்தாண்டு
  சந்தோசத்திற்கும், கொண்டாடதிற்குமான தருணம் இது
  குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்
  இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்கு
  மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும்
  கொண்டு வர வாழ்த்துகிறேன்!

  64. மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
  மீண்டும் சோலை கொழுந்து விட்டது
  இதயம் இதயம் மலர்ந்து விட்டது
  இசையின் கதவு திறந்து விட்டது
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  65. சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
  சூரியன் பூமி தூரமும் தெரியும்
  கங்கை நதியின் நீளமும் தெரியும்
  வங்க கடலின் ஆழமும் தெரியும்
  வருக புத்தாண்டே

  66. விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
  மன நிம்மதியும் சந்தோசமும்
  உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
  மனமார்ந்த 2020ஆம் ஆண்டு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  67. என் அன்பு உள்ளங்களே
  தேவைகள் தீர்வதில்லை, எதுவும் முடிவு அல்ல
  எல்லாமே அடுத்த நல்லதுக்கான தொடக்கமே
  மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
  நலமுடனும் வளமுடனும் வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்

  68. புத்தாண்டில் புதிய சிந்தனை, புதிய முயற்சி
  புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
  நட்புகளுக்கும், சொந்தங்களுக்கும் உயிரோடு இணைந்த
  அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  69. புதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய எல்லைகள் இப்புத்தாண்டில் சூரிய கதிர் நம் வாழ்வில் பரவி, என்றும் பல நன்மைகளை அளிகாட்டும் என்று வாழ்த்துகிறேன்!
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  70. இருளை நீக்கி ஒளியை அருள புதிய 2020டே வருக!
  புத்தாண்டில் புத்தொளி தருக !
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

   

  மேலும் படிக்க - பயணம் : நீங்கள் பகிர்ந்து கொள்ள சில சுவாரசியமான கவிதைகள்!

  பட ஆதாரம்  - Shutterstock 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!