முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்குவது எப்படி?

முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்குவது எப்படி?

பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் (13 வயதில் இருந்து 19 வயது வரை) சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத் தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும். 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனும்; பின் 14 நாட்கள் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோனும் சுரக்கும். அதன் பின்னர் மாதவிடாய் 3 நாட்களுக்கு அதிகமாகவும், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து, மொத்தம் ஐந்து நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும். ஆரம்பித்த நாளில் இருந்து 28 நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சிலருக்கு முன்னும் பின்னும் இருக்கும். 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை மாறி இருப்பது சாதாரணமானது. நீங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஒரு சிலருக்கு இந்த சுழற்சி, 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று இருந்தால், நிச்சயம் அதை சீராக்க வேண்டும். அப்போதுதான் வரும் நாட்களில் உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம் ?

இப்படி முறையற்ற மாதவிடாய் தோன்ற காரணங்களை முதலில் பார்க்கலாம்.

காரணம் 1: மன அழுத்தம்

10, 12 வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகம் இருப்பதால் முறையற்ற மாதவிடாய் தோன்றுகிறது. சில குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால், உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சில குழந்தைகளுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உள்ளதால், சரியான உணவு சாப்பிடாமல் உடல் மெலிந்து சக்தி இல்லாமல் போய்விடுவார்கள். இந்த இரண்டு வகை மாணவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சியில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி, அதிக எடை கொழுப்புச்சத்து இருந்தாலும், குறைவான எடை சத்துக்குறைபாடு இருந்தாலும், கருமுட்டை கர்ப்பப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டு, முறையற்ற மாதவிடாய் (menstruation) சுழற்சி ஏற்படும்.

காரணம் 2 : பிரசவத்திற்கு பின்

Pexels

சில பெண்களுக்கு குழந்தைப்பேருக்கு பின்னர் சீரான மாதவிடாய் வருவதில்லை. நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று, அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிடுவதால் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

காரணம் 3: தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்; மேலும் சோர்வாக உணர்வார்கள். இவர்களுக்கும்,  மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது.

காரணம் 4: மெனோபாஸ்

நாற்பது வயதை நெருங்கும் பெண்களுக்கு, மெனோபாஸ் வரப்போகும் காரணங்களினால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும். அது சாதாரணமானதுதான். ஆனால், அதிக உதிரப்போக்கு இருந்தால் பிரச்சனை.

காரணம் 5: ஹார்மோன் பிரச்சனைகள்

Pexels

ஹார்மோன் சரியாக சுரக்காத காரணத்தினால், பிசிஓஎஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படுத்தும். 

மேலும் படிக்க - இவர்களால் முடிந்தால், உங்களாலும் முடியும்!பி.சி.ஓ.எஸ் : நீங்கள் அறியாத விஷயங்கள்!

காரணம் 6: செயலற்று இருப்பது

உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருந்தால், நிச்சயம் உடலில் பிரச்சனைகள் மெதுமெதுவாக ஆரம்பமாகும். அறுவை சிகிச்சைக்குப்பின் நடமாடுவதை குறைத்துக் கொள்வார்கள். படிக்க வேண்டும் என்ற தருணங்களில், இப்படி தவிர்க்க முடியாத காரணங்களினால் செயலற்று இருப்பது. 

முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்

இதற்கான தீர்வுகளைப்பற்றி இப்போது பார்ப்போம்.

தீர்வு 1: நல்ல ஆரோக்கியமான, நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை 10, 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தீர்வு 2: உடல் எடையை சீராக்க வேண்டும். 

தீர்வு 3: நாம் உண்ணும் உணவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவு, பிராய்லர் கோழி, நூடுல்ஸ், மிகவும் பட்டை தீட்டிய அரிசி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

அதற்கு பதிலாக கம்பு, கேப்பை, சிவப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டுக்கோழி, செக்கில் ஆட்டிய எண்ணெய், பச்சைக்காய்கள், பழங்கள், கீரைகள் போன்ற இயற்கை உணவுக்கு மாறி, அளவான உணவை உண்டுவந்தால், ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

பேரிட்சம்பழம், செவ்வாழை, மாதுளை போன்ற பழங்களில் நல்ல இரும்புச்சத்து உள்ளது. வாழைப்பூ கர்ப்பப்பையை வலுவாக்கும் ஒரு இயற்கை தந்த வரப்பிரசாதம் ஆகும். மேலும், அவரைக்காய், வாழைத்தண்டு போன்ற நார்ச்சத்து உள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். வெள்ளை சக்கரையை தவிர்த்து நாட்டுச்சக்கரை, கருப்பட்டி அல்லது மலைத்தேன் பயன்படுத்துங்கள்.

Pexels

தீர்வு 4: தினமும் ஒரு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறிது நேரம் விளையாடலாம். உட்கார்ந்து விளையாடும் விளையாட்டு அல்ல, ஓடி ஆடி விளையாட வேண்டும். அது மனதையையும் புத்துணர்வாக வைக்கும். எந்த அறுவை சிகிச்சையாக இருந்தாலும், மருத்துவரிடம் ஆலோசித்து மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களில் நீங்கள் பழையபடி உடற்பயிற்சி செய்யலாம். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு பிரச்சனையாகி விடும்.

தீர்வு 5: நல்ல மருத்துவரை அணுகி வேறு ஏதாவது தொற்று போன்ற பிரச்சனைகள் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும்.

பொதுவான, முறையற்ற மாதவிடாய் (irregular menstrual cycle) சுழற்சியின் காரணங்களையும், அவற்றிற்கான தீர்வையும் பார்த்தோம். ஒரு ஆறு மாதம் உங்கள் சுழற்சி ஆரம்பிக்கும் நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுநாள் இடை வெளியில் வருகிறது மற்றும் எவ்வளவு நாட்கள் நீடித்து இருக்கிறது என்று ஆராய்ந்து ,இவை யாவும் ஒவ்வொருவரின் உடல் அமைப்பு மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு என்ன காரணம் என்று கண்டறிந்து கொண்டாலே, தீர்வு எளிதாகி விடும். மேலும், உடல் உபாதைகளை அலட்ச்சியம் செய்யாமல், ஆரம்பத்திலேயே சரி செய்வதால், குழந்தை இன்மை, தொற்று போன்ற பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!

மேலும் படிக்க - மாதவிடாய் காலம் கண்காணிப்பான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!