இவர்களால் முடிந்தால், உங்களாலும் முடியும்!பி.சி.ஓ.எஸ் : நீங்கள் அறியாத விஷயங்கள்!

 இவர்களால் முடிந்தால், உங்களாலும் முடியும்!பி.சி.ஓ.எஸ் : நீங்கள் அறியாத விஷயங்கள்!

பி.சி.ஓ.எஸ்(PCOS) பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ரோம் பாதிப்பு தற்போது பொதுவாக பெண்களிடையே பெருகிவரும் அறிகுறி ஆகும். இது ஒரு நோய் அல்ல. பெண்களின் மாதவிடாய் சமயங்களில் சினை முட்டைகள் வெளியேறும். சில சமயங்களில் அது சரியாக முதிர்ச்சி அடையாத காரணத்தால் வெளியேறாமல், சின்ன சின்ன நீர்கட்டிகளாக மாறி உள்ளேயே தங்கிவிடும். இது சிறிய சிறிய உடல் கோளாறுகளில் இருந்து குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனை வரை கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

இன்று ஒன்பது முதல் பத்து வயது சிறுமி முதலே இந்தப் பிரச்சனை ஆரம்பமாகி விடுகிறது. பாலிவுட் பிரபலங்களான சோனம் கபூர், சாரா அலி கான் இதை எதிர்கொண்டனர் என்று குறிப்பிடத்தக்கது. அதைக் கட்டுப்படுத் அவர்கள் தேவையான படிகளையும் எடுத்தனர். ஆராய்ச்சியில், 60 சதவிகித பெண்கள் தாய்மை அடையாமல் போவதற்கான காரணம் பெண்களுக்கு இருக்கும் இந்த பி.சி.ஓ.எஸ் பாதிப்பு தான் என்று கூறப்படுகிறது. மேலும், பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களில் 30 சதவிகித பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் பிரச்சனை உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒழுங்கற்ற மாதவிடாய், சினைப்பையில் கட்டி இவை மட்டுமே பிசிஓஎஸ் ஆகாது. எப்படிப்பட்ட காரணமாக இருந்தாலும், தாய்மை அடைவதற்கு இது தடையாக இருக்கும். ஆரம்ப காலத்திலேயே பிசிஓஎஸ் கண்டுபிடித்தால் பிரச்சனைகளை எளிதில் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். சின்ன பிரச்சனைகளை கண்டுபிடித்து குணப்படுத்தாமல் இருந்தால், பின்னாளில் இதய நோய், சக்கரை நோய், குழந்தையின்மை போன்ற பெரிய நோய்களுக்கு காரணமாகிவிடும்.

பி.சி.ஓ.எஸ் அறிகுறிகள் என்ன, எதனால் ஏற்படுகிறது, அதற்கான தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

பி.சி.ஓ.எஸ் அறிகுறிகள் (PCOS symptoms)

Pixabay

பிசிஓஎஸ் பல அறிகுறிகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் ஏற்படக்கூடும். அவற்றுள் சில,

1.சோர்வாக இருத்தல், தூக்கமின்மை, அல்லது அதிகம் உறங்குவது
2. மெலிந்து போவது
3. கூடுதல் எடை போடுவது
4. சிறு வயதிலேயே பூப்பெய்துவது
5. பெண்களுக்கு தேவை இல்லாத இடங்களில் ஆண்களைப் போல முடி வளருதல்
6. ஒழுங்கற்ற மாத விடாய் ஏற்படுவது
7. தலைமுடி சொட்டை ஆகும் அளவிற்கு உதிர்தல்
8. ஒற்றைத் தலைவலி அல்லது அடிக்கடி தலை வலி ஏற்படுதல்
9. முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பது, முகப்பரு தோன்றுவது
10. முகத்தில் திட்டு திட்டாக கருப்பாக இருப்பது
11. கழுத்து, கைகால் மடிப்புகளில், மூட்டுகளில் வழக்கத்திற்கு மாறாக கருமையாக இருப்பது
12. கருவுற்றால் 90 நாட்களுக்கு மேல் தங்காமல் இருப்பது

பி.சி.ஓ.எஸ் ஏற்பட காரணம் (PCOS reasons)

பிசிஓஎஸ் ஏற்பட,

  • இன்சுலின், லெப்டின் ஆகிய ஹார்மோன் சம நிலையில் இல்லாமல் இருப்பது
  • ஓவரியில் சுரக்கும், டெஸ்ட்டோஸ்டெரோன் என்ற ஆன்ட்ரொஜென் சீராக சுரக்காதது

ஆகியவை காரணங்களாக அறிவியல் கூறுகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள், உடல் பருமனாக இருப்பது, நொறுக்கு தீனிகளை(junk foods) அதிகம் உண்பது, உடலுக்கு அதிக வேலை தராமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களால் ஏற்படுகிறது.

பி.சி.ஓ.எஸ் தீர்வுகள் (PCOS solutions)

Pixabay

சினைப்பை கட்டி தான் காரணம் என்று கருதி, திருமணத்திற்கு முன்பு கூட லாப்ராஸ்கோப்பி(laparoscopy) அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அறுவை சிகிச்சை எல்லாப் பிரச்சனைக்கும் உடனடி தீர்வு ஆகாது. உடல் பருமனாக இருந்தால், உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள் ; லைப் ஸ்டைல்(lifestyle) மாற்றங்கள் செய்வது; உணவுக்கட்டுப்பாடு; உடல் ஆரோக்கியம்; போதிய தூக்கம்; ஆரோக்கியமான உணவு முறை; போதிய அளவு உடற்பயிற்சி; புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தல் ஆகியவை நிச்சயம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். மாதவிடாய் சுழற்ச்சி இயற்கையிலேயே சீராக உதவும்.

உணவில் 40 சதவிகிதம் மட்டுமே மாவுச் சத்து உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு, மீதி சத்தான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என்று மாற்றிக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பெரும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1. வெள்ளைஅரிசி
2. இறைச்சி(கோழிக்கறி, ஆட்டுக்கறி)
3. காபி
4. பிட்சா
5.பர்கர்
6. பால்
7. முட்டை மஞ்சள்கரு
8. பதப்படுத்திய உணவு
9. எண்ணெய்ப் பதார்த்தங்கள்

சேர்க்க வேண்டி உணவுகள்:

1. சிகப்பு அரிசி
2. ஓட்ஸ்
3. வால்நட்
4. பாதாம்
5. பிளாக்ஸீட்ஸ்
6. தண்டுக்கீரை
7. பூசணிக்காய்
8. சுரைக்காய்
9. சோயா பன்னீர்
10. சோயா பால்
11. முட்டை வெள்ளைக்கரு
12. சால்மன் மீன்
13. பட்டை
14. பெர்ரி
15. ஆப்பிள்பழம்
16. கொய்யாப்பழம்

இந்த தொந்தரவுகள், குழந்தையாக இருக்கும் போதிருந்தும், பூப்பெய்தும் போதும், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும், மாதவிடாய் நிற்பதற்கு முன்(menopause) என பெண்களுக்கு பல கால கட்டங்களில் ஏற்படக் கூடும்.

பிசிஓஎஸ் ஹார்மோன் சமச்சீரின்மையினால் ஏற்படுகிறது என்று பொதுவாக கூறினாலும், அது பெண்களின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். இதை பெண்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு, விழிப்புணர்வோடு, தன் சக தோழிக்கும், உறவினருக்கும் தகுந்த ஆதரவு கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தால், விரைவில் இந்த அறிகுறிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான(health) சந்தோசமான வாழ்க்கை வாழலாம்.

 

மேலும் படிக்க - கருப்பை பிரச்சனையா? பெண்களின் கருப்பையை வலுவாக்கும் சிறந்த உணவுகள்!

பட ஆதாரம்  - Instagram, Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!