சமையலில் சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும்; ஓமம் வளர்க்கும்போதும் நெய் பயன்படுத்தி பார்த்திருக்கிறோம். வெண்ணையில் இருந்து தயாரித்தாலும், நெய்யில் வெண்ணையைவிட ஒரு சதவிகிதம் சத்து அதிகமாகவே இருக்கிறது. மருத்துவ குணம் கொண்ட நெய் (ghee) சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்ல பயன்களைத்(benefits) தரும்.
இத்தனை நன்மைகள் செய்யும் நெய், கூந்தலுக்கு (hair) என்னென்ன நன்மைகள் செய்யவல்லது என்று பார்க்கலாம்.நெய்யை லேசாக சூடு செய்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துக்கொள்ளுங்கள்.
கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு ஊறவைக்கவும். பின்னர் கழுவி விடுங்கள்.
எலுமிச்சை சாறுடன் நெய் சேர்த்து கூந்தலில் தேய்த்துக்கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியதும் குளித்து விடுங்கள். உங்கள் கூந்தலில் இயற்கையான பொலிவைப் பார்க்கலாம்.
இளநரை மற்றும் சொரியாசிஸ் உள்ளவர்கள், மருத்துவ குணம் கொண்ட நெய் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.
நெய்யோடு, நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் உங்கள் கூந்தல் உதிர்வது குறைந்து நன்றாக வளரும்.
உதடு காய்ந்து, கருமையாக இருந்தால், நெய் தடவி வாருங்கள். மிருதுவான, ரோஸ் நிறத்தில் மாறிவிடும். கண்களைச் சுற்றி உள்ள கருமையைப் போக்க, பயப்படாமல் நெய் தடவலாம். கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. நல்ல விளைவையும் தரும்.
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், குளிப்பதற்கு முன் நன்றாக தடவி ஊறவைத்து 15 நிமிடங்கள் களித்து குளித்துக்கொள்ளுங்கள். மிருதுவான, மென்மையான சருமம் கிடைக்கும்.
முகத்திற்கு நெய் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய முகப்பூச்சுகள்:
பாலுடன், கடலைமாவு மற்றும் நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து, கழுவுங்கள். அழகான பொலிவான முகம் கிடைத்துவிடும்.
ஒரு தேக்கரண்டி நெய்யோடு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இதில் பச்சைப்பாலை கலந்து கொள்ளுங்கள். குளிர்காலங்களில் சருமம் வறண்டு போனால் இந்தக் முகப்பூச்சு உபயோகித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக பங்குபெரும் நெய், புண்களுக்கும், சருமத்தில் உள்ள கரைகளுக்கும் எப்படி தீர்வாகும் என்று பார்க்கலாம்.
100 கிராம் நெய்யில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள், பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் நன்றாக கலக்குங்கள். பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். இந்த முறையை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ப்ளெண்டர் பயன்படுத்தலாம். 20 முறை குறைந்தது செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது, நெய் நிறம் மாறி வெள்ளை நிறமாகும். இதை உடலின் வெளிப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உட்கொள்ளக்கூடாது.
வெய்யிலில் சென்று கருத்த தோள்(skin), பருக்களால் ஏற்பட்ட கருமை, தழும்பு, அரிப்பு போன்ற எந்த சரும பிரச்சனைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
நெய்யின் பயன்களைக் கண்டு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? நல்ல சுத்தமான நெய் வாங்கி உணவில் மட்டுமல்லாது, உங்கள் கூந்தலுக்கும், சருமத்திற்கும் உபயோகித்து பெரும் பயன் பெறுங்கள்.
பட ஆதாரம் - Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !