உலகெங்கிலும் உள்ள சிவாலயங்களில் ஒரு சேர அன்னாபிஷேகம் நடக்கிறது.. வழிபட்டு ஐஸ்வர்யம் பெறுக!

உலகெங்கிலும் உள்ள சிவாலயங்களில் ஒரு சேர அன்னாபிஷேகம் நடக்கிறது.. வழிபட்டு ஐஸ்வர்யம் பெறுக!

இன்று ஐப்பசி பௌர்ணமி. ஆன்மிகத்தில் மிக முக்கியமான நாள். உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவு தந்தவர் இறைவன். ஜீவராசிகளில் தன்னுடைய உணவை அதனை தனக்காக படைத்த இறைவனுக்கு நைவேத்தியம் செய்து விட்டு பின்னர் தானும் உண்ணும் வழக்கம் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கிறது.                                            

ஐப்பசி மாத பௌர்ணமி அன்று நிலவு தன்னுடைய சாபத்தில் இருந்து முழுமையாக விடைபெற்று முழு பொலிவுடன் 16 கலைகளுடன் தோன்றுவார். அந்த திங்களை தன்னுடைய சடையில் சூடி நிலவின் வேதனையை நீக்கிய இறைவனுக்கு இன்று மிக சிறப்பான நாள்.                                                          

 

Youtube

இன்று ஒரு நாள் உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்ன அபிஷேகம் (annabishekam)  நடைபெறுகிறது. எந்த சிவன் கோயில் சென்றாலும் நீங்கள் அன்னத்தால் ஆன சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். தான் படைத்த உயிர்களுக்கு உணவும் தந்து இருப்பிடமும் தந்து வாழ்வதற்கொரு வாழ்வும் தந்த இறைவனை நாம் எப்போதுதான் நினைப்பது? இப்படியான விஷேச நாட்களில்தானே!

நாம் அன்றாடம் உண்ணும் உணவான அரிசியின் வடிவம் அண்டத்தின் வடிவம். சிவலிங்கத்தின் மேல் பாகம் இதே வடிவம்தான். அதனால்தான் அன்னாபிஷேகம் அன்று நாம் இறைவனை தரிசித்தோம் என்றால் ஆயிரம் கோடி லிங்கங்களை தரிசித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.                                           

பிரம்மனின் அகங்காரத்தை சரி செய்ய அவரது தலையை கிள்ளினார் சிவபெருமான். தோஷம் காரணமாக அந்த கபாலம் அவரது கைகளிலேயே ஒட்டி கொண்டது. எவர் கைகள் மூலம் அன்னம் போட்டால் அவரது சாபம் தீருமோ அவரது கைகள் காசியில் சிவன் சென்றிருந்தபோது அவருக்கு அன்னமிட்டது. அன்னபூரணி அம்மா தன்னுடைய அன்பினால் சிவனின் சாபத்தை நீக்கினார். அன்றைய நாள்தான் ஐப்பசி பௌர்ணமி.

Youtube

சிவனின் சாபம் தீர்த்த நாளான இன்று நாம் சிவாலயங்கள் சென்று வழிபட்டால் நம்முடைய தோஷங்களும் நீங்கும். நமது சாபங்கள் நிவர்த்தியாகும். நமது தரித்திரம் விலகும். ஊருக்கே அன்னமிடும் யோக்கியதை நமக்கு அருளப்படும்.

அவசியம் இந்த நல்ல நாளில் உங்களுக்கு அருகே இருக்கும் சிவாலயம் செல்லுங்கள். கூட்டத்தை பற்றி கோபிக்காமல் நாம் ஒரு திரைப்படத்திற்கோ அல்லது தீம் பார்க்கிற்கோ செல்லும்போது எவ்வளவு உற்சாகமாக செல்வோமோ அப்படி செல்லுங்கள்.

 

Youtube

நம்மை படைத்த இறைவன் நம்மிடம் பதிலுக்கு என்ன எதிர்பார்க்கிறார்.. நம்முடைய அன்பு மட்டுமே அவருக்கு பிரியமான விஷயம். வருடத்தில் வரும் சில முக்கிய நாட்களிலாவது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மை நேசித்துக் கொண்டிருக்கும் இறைவனை சென்று தரிசித்து நம் அன்பை நம் காதலை நம் பிரியத்தை அவருக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டு வருவோம்.

நம் அன்பால் மனம் நிறைந்த இறை அருள் இந்த ப்ரபஞ்சமெங்கும் அதன் அன்பை பாகுபாடின்றி பரவ செய்யட்டும். சிவாயநம.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்