இன்று சனிக்கிழமை சதுர்த்தி திதி பூராடம் நட்சத்திரம் கார்த்திகை மாதம் 14ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை (astro) சரிபாருங்கள்.
மேஷம்
வேலை நிதானமதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எனினும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
மிதுனம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமை வெளிப்படும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்
இன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார். தொட்டது துலங்கும் நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சிலர் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
சிம்மம்
புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். புது பொறுப்புகள் தேடி வருவதால் புதுமை படைக்கும் நாள். மனதில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. நண்பர்களால் ஆதாயம் உண்டு.
கன்னி
எதிர் பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர் பாராத ஒரு வேலை முடியும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
youtube
துலாம்
தன்னிச்சையாக சிலமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும்.
விருச்சிகம்
கடந்த இரண்டு மூன்று நாட்களாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பண வரவு திருப்திதரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பயணத்தின்போது கவனம் தேவை. மகிழ்ச்சி தங்கும் நாள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.
தனுசு
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதுக்குள் இனம் புரியாத பயம் வந்து போகும். உத்தியோகத்தில், எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு ஏற்படும். விளைந்து கொடுக்க வேண்டிய நாள். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால் சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும்.
மகரம்
எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கும்பம்
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
மீனம்
எதையும் சமாளிக்கும், சாமர்த்தியம் பிறக்கும். அலுவலக பணிகளில் கவனமாக இருக்கவும். அதிகாரிகள் மத்தியில் உங்கள் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உதவிகள் கிட்டும் நாள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!