விபத்துக்கள் அவமானங்கள் கொஞ்சம் சரியில்லாத நாள்..கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்

விபத்துக்கள் அவமானங்கள் கொஞ்சம் சரியில்லாத நாள்..கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்

இன்று வியாழக்கிழமை துவிதியை திதி. கேட்டை நட்சத்திரம். கார்த்திகை மாதம் 12ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.

மேஷம்

உங்கள் உடல்நலம் காக்கப்படும். மிதமான நாள். அதிக வேலைப்பளு இருக்கும். ஆனால் நீங்கள் அதனை செய்ய தயாராக இருக்க மாட்டீர்கள். செலவுகளை பார்த்து செய்யவும்.

ரிஷபம்           

கடினமான உடல் உழைப்பு தேவைப்படும். உடல்நலம் ஒத்துழைக்காது என்றாலும் நீங்கள் விடாமல் முயற்சி செய்ய வேண்டி வரும். உங்கள் வேலையை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதே இதற்கான காரணம்.தாராள செலவு உண்டு. வாக்குவாதங்களை தவிர்ப்பது சக்தி நிலைக்கு நல்லது.

மிதுனம்            

வியாபாரம் மெதுவாக செல்லும். போராட்டமான நாள். விபத்துகள் ஏற்படலாம் என்பதால் நிதானம் வேண்டும். வியாபார பயணங்கள் நல்ல பலனை கொடுக்கும். கவனம் தேவையான நாள்.

கடகம்              

லாபகரமான நாள். வருமானம் உயரும். கோள்கள் சரியான கோணத்தில் இருப்பதால் மகிழ்ச்சியான நாளாகவும் நண்பர்களோடு செலவு செய்யும் நாளாகவும் இருக்கும். பிடித்த உணவை சாப்பிடுங்கள்.

சிம்மம்                 

மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம். விபத்துக்களில் இருந்து தற்காப்பாக பயணிக்க வேண்டும். பிரச்னைகள் உங்கள் மனதை தவிக்க வைக்கும். ஆனாலும் சந்தோஷமான செலவுகள் செய்வதால் மனம் நிறையும். மனதிற்கு பிடித்தவருடன் சண்டை வரும்.

கன்னி

பேசியே ஆளை மயக்கும் வித்தைக்காரரான நீங்கள் உங்கள் பேச்சின் மூலமே எதையும் சாதிக்கும் நாள். உங்கள் மனதின் வக்கிரங்கள் கூட உங்களுக்கு பணம் சம்பாதித்து தரும் நாள். விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்

அற்புதமான நாள். நல்ல உடல் நிலை மற்றும் உற்சாகமான மனநிலை ஏற்படும். உங்கள் மனதின் நேர்மறை தன்மை மற்றவருக்கும் பரவுவதால் உடன் இருப்பவர்களும் மகிழ்வார்கள். ஏற்றம் தரும் நாள்.

விருச்சிகம்

கொஞ்சம் சரியில்லாத நாள்தான். செய்த தவறுகளை யோசிப்பது உங்களுக்கு நன்மை தரும். உங்கள் கிரகங்களின் சேர்க்கை சரியற்றதாக இருப்பதால் நல்லதே செய்தாலும் தவறாகவே முடியும். அடுத்தவரிடம் பணம் மற்றும் அன்பு விஷயங்களில் ஏமாறாமல் இருக்கவும். கவனம்.

தனுசு

இன்று எதிர்பாராத அவமானங்கள் ஏற்படலாம். உங்கள் புதிய காரியங்களில் தடங்கல்களை சந்திக்கலாம். உங்கள் குழந்தைகளின் படிப்பு மேம்படும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் தூக்கலாக இருப்பதால் மற்ற மைனஸ்களை சரிக்கட்டி விடலாம்!

மகரம்

நன்மை தரும் நாள். மனநிலை உடல்நிலை இரண்டுமே அற்புதமான சக்திநிலையில் இருக்கும். உங்கள் முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும். உங்கள் மூலதனங்கள் லாபத்தை கொடுக்கும். மோசமான சூழல்களை சரிசெய்யக் கூடிய நாள்.

கும்பம்

உங்கள் நாள் இனிய நாளாக இருக்கப்போகிறது. குடும்பத்துடன் மகிழ்வாக நேரம் செலவழிப்பீர்கள். உங்கள் நிதி நிலைமை அற்புதமான முன்னேற்றங்களை காணக்கூடிய நாள். வித்யாசமான வக்கிர எண்ணங்களை குழி தோண்டி புதைத்து விடுவது நன்மை தரும்.

மீனம்

சரிசமமான நாள். படைப்பு திறன் மேலும் பெருகும். மனமும் உடலும் சக்தி நிலையில் நல்ல அதிர்வுகளுடன் இருப்பதால் எதையும் நேர்மறையாக பார்ப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்குரியவருடன் அருகே இருக்க விரும்புவீர்கள். அது நடக்கும்.

predicted by astro asha shah

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!அறிமுகமாகிறது

#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!