இன்று இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் காத்திருக்கு : உங்கள் ராசியை சரி பாருங்கள்!

இன்று இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் காத்திருக்கு : உங்கள் ராசியை சரி பாருங்கள்!

இன்று சனிக்கிழமை ஷஷ்டி திதி பூராடம் நட்சத்திரம் ஐப்பசி மாதம் 16ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி (astro) பலனை சரிபாருங்கள்.

மேஷம் 

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணிகளிலும் மிகுந்த கவனம் தேவைப்படும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். குடும்பத்தில் சிறிசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் குறையும். உடலும், மனமும் சோர்வடையும். தனியாக நேரம் செலவிடுங்கள்.  

ரிஷபம் 

சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த காரியத்திலும் அவசரப்பட்டு செயல்பட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.உறவினர்கள் சிலர் உங்கள் யோச னையைக் கேட்டு வருவார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள்.

மிதுனம் 

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நீண்ட நாளாக சந்திக்க  நினைத்த நண்பர்களை சந்திப்பீர்கள். சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். 

கடகம் 

உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். வேலை நிலையானதாக இருக்கும்.  அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். உங்கள் அர்பணிப்பு குறித்து உயரதிகாரி பாராட்டுவார். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்கள் வருகை சந்தோஷத்துடன் செலவுகளும் ஏற்படும்.  இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். 

சிம்மம் 

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும்.  எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் கொள்ளாமல் இருப்பது அவசியம். இன்று மாலை நண்பர்களுடன் வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். சமூக வாழ்க்கை பரப்பாக இருக்கும். 

கன்னி

உங்கள் செயல்களை திறம்பட செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பொறுமையாக இருங்கள். 

youtube

துலாம்

எந்த விஷயத்திலும் தீர்க்கமாக சிந்தித்து செயலாற்றுவீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உற்சாகமான நாள்.

விருச்சிகம் 

கடந்த இரண்டு நாட்களாக மன அழுத்தம், கவலை நீங்கும். காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். இதனால் சோர்வாக இருப்பீர்கள். தடைபட்ட காரியங்கள் விரைவாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் அலுவலகத்தில் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.  மற்றவர்களிடம் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். வீண் விவாதங்களை தவிருங்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். 

மகரம் 

உங்கள் முயற்சிகளில் தடைகள், தாமதங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும். எனினும் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். சமயோசிதமாகச் சமாளித்து சக ஊழியர்களின் பாராட்டுக ளைப் பெறுவீர்கள். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும்.  இளைய சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். விவேகமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். உறவினர் வருகையால் வீட்டில் சிறு சங்கடம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் செயல்களில் உறுதுணையாக இருப்பார்கள். இழுபறியாக இருந்து வந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும் என்பதால் சிக்கனம் தேவை. 

மீனம் 

இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சாதிக்கும் நாள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!