ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்த சம்பவம் : கீர்த்தி சுரேஷ் வேதனை!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்த சம்பவம் : கீர்த்தி சுரேஷ் வேதனை!

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை  எரித்து கொன்ற சம்பவம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீதர், விஜயம்மா தம்பதியின் முத்த மகள் பிரியங்கா ரெட்டி (வயது 26), ஷாம்ஷாபாத் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

கொல்லப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வரும் இவர், தினமும் மருத்துவமனைக்கு வீட்டிலிருந்து டூவீலரில் தான் சென்று வருவார். இந்நிலையில் பிரியங்கா (priyanka) வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பியுள்ளார். 

பின்னர் அவசர அழைப்பு வந்ததும் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிச் சென்றுள்ளார். பணிமுடிந்து திரும்பி வரும் வழியில் இவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. இதனால் மருத்துவமனையில் இருந்து வாகனத்தை தள்ளிக்கொண்டு வரும் போது லாரி ஓட்டுநர் ஒருவர் பஞ்சர் ஒட்டித் தர உதவிசெய்ய முன்வந்துள்ளார். 

twitter

இந்தத் தகவலை  இரவு 9 மணியளவில் தனது தங்கைக்கு போன் செய்து கூறியுள்ளார். தன் தங்கையிடம் பேசும்போது "பைக் பஞ்சர் ஆயிடுச்சு... எனக்கு பயமா இருக்கு.. நான் டோல்கேட் பக்கமா தான் நிக்கிறேன்.. என்கிட்டே கொஞ்ச நேரம் நீ பேசிட்டே இரு' என்று தெரிவித்துள்ளார். 

ஆனால் சிறிது நேரத்தில் பிரியங்காவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பதறி போய் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆனால் அங்கு பிரியாங்காவை (priyanka) காணவில்லை. இதனால் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். 

மேலும் படிக்க - இது புதுசு! ஜாதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து கதைக்கு ஓகே சொல்லும் நயன்தாரா !

இதையடுத்து போலீசார் பிரியங்காவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஹைதராபாத் - பெங்களூர் ஹைவே பகுதியில் ஷாத்நகர் பாலத்துக்கு அடியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

twitter

இந்த தகவலை பிரியங்காவின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு பாலத்துக்கு விரைந்தனர். அங்கு ஒரு பெண் பாதி இருந்த படி சடலம் இருந்துள்ளது. யூகித்தபடியே அது பிரியங்காவின் சடலம்தான். அவரின் துப்பட்டா மற்றும் நகைகளை கொண்டு அது பிரியங்காவின் சடலம் தான் என உறுதியாகியுள்ளது.  

சடலத்தை பார்த்த பிரியங்காவின் பெற்றோர்கள் மற்றும் சகோதரி ஆகியோர் கதறி அழுதனர். இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார் பிரியங்காவை (priyanka) கடத்தி வந்து கொலை செய்தது லாரி ஓட்டுநர்களா? அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படு எரிக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க - ஏன்ஜெல் வந்தாலே! நயன்தாரா தனது ரசிகர்களின் இதயங்களை இப்படித்தான் வென்றிருக்கிறார் !

ஹைதராபாத் போன்ற பெரிய நகரில் இளம் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா ரெட்டியை  கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பிரியங்கா ரெட்டியின் தங்கை மற்றும் குடும்பத்தினர் அழுது கொண்டே தெரிவிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 

 

twitter

மேலும் பல்வேறு திரையுலகினரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து  நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், இதயம் நொருங்கி விட்டது, மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனதை உலுக்குகிறது என கூறியுள்ளார். மேலும்ஹைதராபாத் நகரம் மிகவும் பாதுகாப்பானது என கருதி இருந்தேன். ஆனால், நேற்றைய சம்பவம் தனது நம்பிக்கையை நொறுக்கி விட்டது.

பெண்களுக்கு பாதுகாப்பான தேசமாக நமது தேசம் எப்போது மாறும் என்றும், இந்த கொடூர செயலை செய்த கயவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், தான் கர்மாவை நம்புபவள், அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்து வரும் மெஹ்ரின் பிர்ஸ்டா, இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போயுள்ளேன். விரைவில் அந்த கயவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்துக்கு முன் நிறுத்தப் பட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இதே போல பலரும் பிரியங்கா ரெட்டிக்கு ஆதரவாக குரல்கள் கொடுத்துவருகின்றனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க - யார் மீதும் காதல் கொள்ளுங்கள்.. ஆனால் இப்படிப்பட்ட ஆண்களை மறந்தும் அனுமதிக்காதீர்கள் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!