ஏன்ஜெல் வந்தாலே! நயன்தாரா தனது ரசிகர்களின் இதயங்களை இப்படித்தான் வென்றிருக்கிறார் !

ஏன்ஜெல் வந்தாலே!  நயன்தாரா தனது ரசிகர்களின் இதயங்களை இப்படித்தான் வென்றிருக்கிறார் !

‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற சரித்திரத்தில் இல்லாத புதிய இடத்தைப் பிடித்திருக்கிறார் நயன்தாரா. தன்னுடைய 35 வயதை நிறைவு செய்தாலும், இதுவரை வரலாறு காணாத இடம் அவருக்கு கிடைத்திருக்கிறது. எடுத்தவுடன் ஒரேநாளில், ஒரேஇரவில் அவருக்கு இந்த இடம் கிடைக்கவில்லை. அவருடைய பாதையில் பல மேடு பள்ளங்களை சந்தித்து பிரமாண்ட வளர்ச்சி அடைந்திருக்கிறார். 

நடிகர்களைப்  பற்றித் தெரிந்து கொள்வது, அவர்களைப்  பற்றிய கிசுகிசு என்றால் எல்லோருக்கும் அலாதி தான். நயன்தாரா தமிழ்நாட்டில்  மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் விக்னேஷ் சிவன் மனதை மட்டுமல்ல எப்படி அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டு  சூப்பர் ஸ்டார் ஆனார் என்று பார்க்கலாம்.

  • நயன்தாரா தன் நடிப்பில் பாத்திரத்தோடு ஒன்றி தன்னையே மாற்றிக்கொண்டு அதுவாகவே மாறி ஒன்றும் நடிப்பதில்லை. மேலும் பக்கத்து வீட்டுப்பெண் போன்று இயல்பாகவும் இல்லை. தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ளார். அது அனைவரையும் ரசிக்க வைக்கிறது. 'வில்லு' படத்தில் கவர்ச்சியாகவும், 'ஸ்ரீ ராம ராஜ்யம்' படத்தில் சீதா வேடத்திலும் இயல்பாக பொருந்துகிறார். 
  • தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல இடையூறுகளையும், அவமானங்களையும் சந்தித்தாலும், 'ராஜா ராணி' படத்தின் மூலம் இரண்டாம் என்ட்ரியில் விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். இது மக்களையும், தன் சக நடிகர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 
  • 'பிகில்' போன்ற மாஸ் படங்களில் (film) தோன்றினாலும், அவருடைய கதாபாத்திரத்தை சுற்றி கதை நகரும் படங்களில் அதிகம் தோன்றுகிறார். 'அறம்', 'இமைக்கா நொடிகள்', 'கோலமாவு கோகிலா' போன்ற படங்களில் முழுவதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் கலக்கி இருக்கிறார். இருப்பினும் அவை அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.
  • அவர் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள ஊடகங்களை நாடவில்லை. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இருந்தும் விலகியே இருக்கிறார். ஊடகங்களை முடிந்தவரை தவிர்த்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் தன் தனித்திறமை, விடா முயற்சி, தைரியம் ஆகியவை அவரை முன்னேறச் செய்தது என்று சொல்லலாம். மேலும், தன்னைப்பற்றி இழிவாக பேசும்போது வாய்ஸ்அவுட் பண்ணாமல் இருக்கவில்லை.
Instagram

  • விஜய் சேதுபதி நடித்தால், படம் முழுவதும் அவர்தான் தெரிவார். ஆனால் அவரையும் மீறி காதம்பரியாக நயன்தாரா மிகவும் அமைதியான கதாபாத்திரமாக இருந்தாலும், அனைவரையும் கொள்ளை கொண்டு விட்டார். 
  • அவருடைய கதாபாத்திரங்கள் வித்யாசமானவையாக, ரசிக்கும் விதத்தில் இருக்கும். பிரமிப்பூட்டும் விதத்திலும் அமையும். அவர் (nayanthara) ஒரு மோனோபோலி - தனித்துவமானவர் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிருபிக்கிறார். அவரைப் போன்று பின்பற்றி, அவரைப் போன்ற பாணியை இதுவரை யாரும் செய்ய முடியாது. அவர் நடித்தால் அந்த கதாபாத்திரம் மிகவும் உறுதியான கதாபாத்திரம் ஆகிவிடுகிறது. 
  • விஜய், அஜித், போன்ற நடிகர்களுக்குத்தான் பைத்தியக்காரத்தனமான ரசிகர்கள் இருப்பார்கள். முதல்முறை ஒரு லேடி நடிகருக்கு கட்அவுட் வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர் உண்மையில் ரியல் சூப்பர்ஸ்டார்தானே!
  • ஹீரோகளுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை ஒப்பிட்டுப்பார்த்தால், ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மிகக் குறைவு. ஹீரோவின் சம்பளத்தை எட்டவில்லை என்றாலும், வரலாறு காணாத ஹீரோயின் சம்பளம் நயன்தாரா பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க - கோடிகளில் புரளும் நயன்தாராவின் தர்பார் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Instagram

30 வயதிலேயே நடிகைகள் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால், நம் நயன் (nayan) தனது  இன்னிங்ஸை   ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்! எப்போதும் உள்ள ஸ்டீரியோடைப் கதாபாத்திரங்களை உடைத்து, புது புது அவதாரங்களில் வளம் வந்து அசத்துகிறார் நயன். அவர் நடிப்பு மிகையாகவும் இல்லாமல், அலுப்பாகவும் இல்லாமல் படம் முழுவதும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறார். ஒரு சில பிளாப் படங்கள் கொடுத்தாலும், வெள்ளி திரையில் லேடி சூப்பர் ஸ்டார் வந்தாலே சும்மா நச்சுன்னு இருக்கிறார்.

கொழு கொழுவென பப்பிளியாக ‘ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்’ பாட்டிலும், அதனைத் தொடர்ந்து அதே வருடம் ரஜினிக்கு ஜோடியாக ‘சந்திரமுகி’யில் கலக்கினார். பிறகு, உடலைக் குறைத்து சிலிம் ஃபிட்டில் ஒரு கலக்கு கலக்கினார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை முன்னும் பின்னும், மேலும் கீழும் எப்படி வேண்டுமானாலும் புரட்டிப்போட்டவர்கள் அனைவரும் வியக்கும் விதத்தில், லேடி சூப்பர் ஸ்டார் ஜொலிக்கிறார் என்பதில் ஐயமில்லை. அதற்கு  அவரின் துணிச்சலும், விடா முயற்சியும், தனித்துவமும், நல்ல மனசும், எளிமையான பண்பும், கடவுள் மீது கொண்டுள்ள பய பக்தியும் காரணமாகச் சொல்லலாம். ‘ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்’!

மேலும் படிக்க - தாரகையை போல் ஜொலிக்கும் நயன்தாராவின் அழகு மற்றும் ஒப்பனை இரகசியங்கள் இதுதான்!

பட ஆதாரம்  - Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!