ஹரியானாவில் 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு!

ஹரியானாவில்  50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு!

சுஜித் மரணம் நம்மை விட்டு அகலாத நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் (borewell) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஷிவானி அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள். 

சிறுமியை நீண்ட நேரம் காணாததால் அவரை தேடிய பெற்றோர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

twitter

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்  சிறுமியை மீட்கும் பணியை தொடங்கினர். சிறுமிக்கு ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு, குழந்தையின் உடல்நிலையை கேமரா மூலம் கண்காணித்தனர். 

சிறுமி தலைகீழாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருந்தாள். இதனால் கேமராவில் அவரது கால் மட்டுமே தெரிந்தது.  மேலும் 50 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது.

வாழ்நாளில் ஒருமுறையாவது நிர்மலாவை பார்க்க வேண்டும் - முதல் காதலிக்காக ஏங்கும் நடிகர் ரஜினி

பின்னர் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டப்பட்டு இன்று காலை 9.30 மணியளவில் சிறுமியை மீட்டனர். பின்னர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

twitter

குழியினுள்ளேயே சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். சுமார் 16 மணி நேரம் ஆழ்துளை கிணற்றில் (borewell) சிக்கியிருந்த சிறுமி, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டும் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். 

ஆழ்துளை கிணற்றை மூடாமல் பெற்றோர் அலட்சியமாக இருந்ததால் சிறுமி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததால் தேசிய மீட்பு படையினர் வேதனை அடைந்தனர். மீட்பு பணிகள் முடுக்கிவிட்ட நிலையிலும் சிறுமியை உயிரோடு மீட்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்ட அறிவுறுத்துவது ஏன்? உண்மை காரணங்கள்!

தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு சில மணி நேரங்களில் குழந்தையை மீட்டுள்ளனர். ஆனால் குழந்தையின் பெற்றோர் ஆழ்துளை கிணற்றை மூடாமல் அலட்சியமாக விட்டதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது என  அப்பகுதி எம்எல்ஏ கல்யாண் தெரிவித்துள்ளார். 

twitter

கடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் 80 அடி ஆழத்தில் (borewell) விழுந்தான். சுமார் 5 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சோகம் நீங்காத நிலையில் ஹரியானாவில் இதே போன்று மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகள் அவற்றில் தண்ணீர் இல்லாத சூழலில் அப்படியே விட்டுவிடும் போக்கு மக்களிடையே இருந்து வருகிறது. 

இதற்கு ஏழ்மையான சூழல், அலட்சியப் போக்கு உள்ளிட்டவை காரணங்கள் ஆகும். ஆனால் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றால் உண்டாகும் ஆபத்தை உணர்ந்து அதனை சரிசெய்தால் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இறந்த பின்னர் சுஜித்தின் ஆன்மா என்ன செய்தது - ஆவியுலக ஆராய்ச்சியாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!