logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
குளிர்காலத்திற்கு ஏற்ற 12 சிறந்த  ஸ்வெட்டர்ஸ் மற்றும் ஜாக்கெட் ரகங்கள்!

குளிர்காலத்திற்கு ஏற்ற 12 சிறந்த ஸ்வெட்டர்ஸ் மற்றும் ஜாக்கெட் ரகங்கள்!

குளிர்காலம் வந்தாச்சு! வகை வகையான ஜாக்கெட் மற்றும் ஸ்வெட்டர் வாங்கும் காலமும் வந்தாச்சு! நம்ம தேவைகள் மாற மாற வகை வகையான ஆடைகளும் மார்க்கெட்டில் கலை கட்டுகிறது. ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற உடைகள் பல ரகங்களில், பல வித்யாசமான நிறங்களில் வந்திருக்கின்றது. அப்படி என்ன ரகங்கள் இருக்கின்றது என்று அலசலாமா?!

ட்ரெண்டி லேடீஸ் ஜாக்கெட்

1. ஸ்வெட் ஜாக்கெட்

ஜிம், ஒர்க் அவுட், சைக்ளிங், ஜாகிங் போன்ற தருணங்களில் கனமாக இல்லாமல் எளிமையாக உடுத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கும் இந்த ஸ்வெட் ஜாக்கெட் குளிர்காலத்திர்ற்கு மிகவும் பொருத்தமானது. நண்பர்களுடன் வெளியில் செல்ல ஒரு சாதாரண உடையாகவும் இதை அணிந்து கொள்ளலாம் !

2. லெதர் ஜாக்கெட்

குளிர் காலத்திற்கு எப்போதும் ஏற்றது லெதர் ஜாக்கெட்(jacket). இதை அடிக்கடி துவைக்கத் தேவை இல்லை. சிக் என கச்சிதமாக, குளிருக்கு இதமாக இருக்கும். பூட்ஸ் மற்றும் டெனிம் பாண்டோடு அணிந்து அசத்துங்கள்! பயணங்களின்போது மிகவும் குளிரும் பொது , பைக்கில் செல்லும்போது , இரவு நேரங்களில் பார்ட்டி போன்ற நேரங்களில் இதை அணிந்து செல்லலாம்.

3. ப்ளேஸர்

ஆபீஸ் போன்ற இடங்களுக்கு ஒரு ஃபார்மல் லுக் கொடுக்கும் ப்ளேஸர். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அணிந்து அசத்தும் வகையில் பல நிறங்களில் கிடைக்கிறது. ஃபார்மல் பாண்ட், ஸ்கர்ட் ஆகியவற்றோடு அணிந்து கொள்ளலாம். கோடைகாலங்களில் காட்டன் அல்லது சிந்தெடிக் பிளேஸர்கள் அணியலாம் ஆனால் குளிர்காலத்தில் குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என்றால் இதுபோன்ற தடிமனான நீண்ட பிளேஸர்களைத் தேர்ந்தெடுங்கள் ! 

ADVERTISEMENT

4. குவில்ட் ஜாக்கெட்

நீங்கள் ஒரு உறைபனி குளிர் மண்டலத்தில் வாழ்ந்தால் அதிக ஸ்டைல் இல்லாமல், குளிருக்கு (winter) இதமாக மட்டும் வேண்டும் என்றால், இந்த குவில்ட் ஜாக்கெட் மிகப் பொருத்தமாக இருக்கும். இது ஹூட் வைத்தும் தயாராகிறது. சாதாரண அவுட்டிங், பயணங்கள், ஹைகிங் போன்ற நேரங்களில் ஒரு பொருத்தமான பூட்ஸ் உடன் பயன்படுத்தலாம்.

5. வின்ட் சீடர்

பனிக்காற்றில் செல்ல இருக்கிறீர்களா? இந்த வின்ட் ஷீட்டர்ரை பயன்படுத்துங்கள். இது பயணங்களின்போது உங்களை பாதுகாக்கும். இதை நீங்கள் துவைக்கத் தேவை இல்லை. இதற்கேற்ற ஒரு கிராப் பேண்ட் அல்லது டிரௌசர் உடன் அணிந்து செல்லலாம்.

6. ட்ரென்ச் கோட்

கொஞ்சம் நீளமாக இருக்கும் ட்ரென்ச் கோட், இந்த சீசன்க்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீளமாக இருந்தாலும் எடை குறைவாகவும், வாட்டர்ப்ரூஃப்பாகவும் இருக்கும். மேல் கூறிய சிறிய கச்சிதமான ஜாக்கெட்டுகளில் விருப்பம் இல்லையென்றால், இதுபோல் தளர்வான ட்ரென்ச் கோட் (jacket) அணிந்து செல்லுங்கள். எந்த வித டிரஸ் மீதும் இதை அணிந்து கொள்ளலாம்.

ட்ரெண்டி லேடீஸ் ஸ்வெட்டர்

7. ஸ்வெட் ஷர்ட்

இதை ஸ்வெட் ஷர்ட்ஸ், ஸ்வெட் ஜாக்கெட் போன்றே ஜிம், ஒர்க் அவுட் போன்ற இடங்களில் அணிந்து கொள்ளலாம். மிகவும் மருதுவாக இருப்பதால் , உறங்கும் போதும் அணிந்து கொண்டு உறங்கலாம். வியர்வையை உறிஞ்சியான இது குளிருக்கு இதமாக உங்களை வைத்திருக்கும்.

ADVERTISEMENT

8. தர்மல்

குளிர்காலங்களுக்கு மிகப் பொருத்தமான பெண்கள் அணியும் உள்ளாடை தான் இந்த தர்மல். ஹூட் கொண்ட ஜாக்கெட், ஸ்வெட்டர் போன்று மேலே ஒரு அடுக்கு போட விரும்பாதவர்கள், இந்த தர்மல் அணிந்து கொள்ளலாம். மேலும் இதில் வரும் சில வடிவமைப்புகளை நைட் வியராகவும் பயன்படுத்தலாம்.

9. ஹூடி

தலைக்கு குல்லாவுடன் வரும் இந்த ஹூடி (sweater), பயணங்களின் போதும், உலாவும் போதும் உடுத்திக்கொள்ள நன்றாக இருக்கும். கைகளை இதமாக வைத்துக்கொள்ள முன்புற பாக்கெட் உதவும். கூல் லுக் தரும், நைட் வியராக பயன்படுத்தலாம். இது பருத்தி , பாலியஸ்டர் போன்ற துணியால் ஆனது. எடை இல்லாமல், எளிதாக எடுத்துச் செல்ல வசதியாகவும் இருக்கும்.

10. ரோப்ஸ்

இந்த சீசனின் புதிய ட்ரெண்ட் இந்த ரோப்ஸ். முதலில் ரோப்ஸ் என்றால், குளித்து முடித்து வருவதற்கு பயன்பட்டது. இப்போது அதே மாடலில் ஸ்வெட்டர், மிக ஸ்டைலாக வந்துவிட்டது . உங்கள் உடல் முழுவதும் சுற்றி இருக்கக் கூடியதுதான் இதன் தனி சிறப்பு . குளிர்க்கு வெளியே செல்லும்போது அணிய மிகவும் ஏற்றது.

11. போன்ச்சோ

இந்த மாடல் இல்லாத வார்டிரோப் இல்லை என்று சொல்லும் அளவிற்கு போன்ச்சோ பிரபலமாகி விட்டது. வெஸ்டர்ன், இந்தியன், புடவை என எந்த உடை மீதும் அணிந்து கொள்ளலாம். சாதாரண ஸ்வெட்டர் போர் என்று நினைப்பவர்கள் இதை அணிந்து செல்லுங்கள்!

ADVERTISEMENT

12. கேப்

போன்சோ ஒரு துளையுடன் தளர்வாக மூடப்பட்டிருக்கும் . ஆனால் கேப் நீளமான கைகள் கொண்டு , முன்புறம் திறந்த வடிவமைப்பில் இருக்கும். இதுதான் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்! நீளமான பூட்ஸ் அணிந்து, கேப்பை அணிந்தால் பிரமாதமாக இருக்கும்.

நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம் . குளிரை சமாளிக்க வீட்டிலும், பயணங்களின் போதும், ட்ரெண்டியான ரகங்களை தேர்வு செய்து அணிந்து மகிழுங்கள்!

 

மேலும் படிக்க – உங்கள் ஷாப்பிங் ஆசையை நிறைவேற்றும் வகையில் சென்னையில் 6 சிறந்த டிசைனர் பொட்டிக்குகள் மேலும் படிக்க – கனமான தோற்றமா?​ நொடிகளில் ஒல்லியாக தெரிய இந்த வித்யாசமான குறிப்புகளை பின்பற்றுங்கள்!

பட ஆதாரம்  – Instagram 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

05 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT