டம்பொன்ஸ் , மென்ஸ்ட்ருல் கப் (menstrual cup) அல்லது நாப்கின்களா ? வசதியும் விவரமும் !

டம்பொன்ஸ் , மென்ஸ்ட்ருல் கப் (menstrual cup) அல்லது நாப்கின்களா ? வசதியும் விவரமும் !

தாய்மை கோவில் என்றால் கருவூலம் கர்ப்பப்பையே ஆகும். அந்த கர்ப்பப்பையைக் காப்பது நம்கடமை. பெண்கள் பருவம் அடைத்தது முதல் 35 வருடம் வரை மாதவிடாய் என்னும் உதிரப்போக்கு ஏற்படும். மாதத்தில்  மூன்று நாட்கள் நடக்கும் போது கையாள வேண்டிய விஷயத்தை பற்றிய ஒரு நுண்ணிய கண்ணோட்டம்.


இன்றைய கால கட்டத்தில்  நாப்கின்களை விட டம்பொன்ஸ் அல்லது கப் தான் வசதியாக இருக்கும்  என்பார்கள். இதில் எது சிறந்தது மற்றும் சௌகரியமானது என்று தெரிந்து கொள்ளுங்கள்


துணியும் - பஞ்சும் -


நமக்கு முன்னாள் தலைமுறை உதிரப்போக்கு நாட்களில் துணியை பயன் படுத்தினர். பின்னர் தான் நாப்கின் பேடு(napkin pad) எனப்படும் பஞ்சை பயன்படுத்தி பழகினோம். இந்த பஞ்சு ரத்தத்தை உறிச்சி கொள்ளும் தன்மை கொண்டதாக அமையும்.


அதில் பஞ்சில் முன் பின் நீளமான துணி போல இருக்கும் பேப்பரை அக்கயிற்றில் மாட்டிக்கொள்ள வேண்டும்.துணியானது துவைத்து பயன்படுத்தும் படி இருக்கும். ஆனால்,  இப்பஞ்சானது ஒருமுறை பயன்படுத்தியதும் குப்பைக்கு செல்லும்.துணி பயன்பாட்டை விட இது பெரிதும் உபாயமாக இருந்தால் சில இடையூறுகளும் இருந்தது.பின்னர், பஞ்சின் அடிப்பகுதியில் ஓட்டும் தன்மையோடு வந்தது.அதனை ஜட்டியில் நடுப்பகுதில் ஒட்டிக்கொண்டாள் எளிமையாக இருந்தது. இவை பெண்களுக்கு பயன்படுத்த எளிமையாக இருந்தது.


ஆனால்,  எல்லா மக்களுக்கும் ஓரேமாதிரியான  உடல் அமைப்பு கிடையாது. அதற்கேற்ப பல நீளத்தில் பிஞ்சுகள் கிடைத்தன!


அதிக உதிரப்போக்கு ஏற்படும் போது பஞ்சு ஒழுகி,ஆடையை ஈரமாகும். அதை தவிர்க்க பஞ்சில் வேதியியல் ஜெல்லோடு பஞ்சுகள் வந்தன.இதனால், சுமார் 6-8 மணிநேரம் ஒழுகாமல் இருந்தன.


நன்மைகள் இருப்பது போல அதற்கேற்ப,  தீமைகளும் இருக்கின்றது.


ezgif-1-02ea9d0b6273


 • கயிற்றில் இருந்து விலகினால், உதிரப்போக்கு ஆடைகளுக்கு வர நேரிடும்.

 • இவ்வேதிப்பொருளின் காரணமாக,  பிறப்புறுப்பில் அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படுகிறது.

 • அதனோடு மட்டும் அல்லாமல் கர்ப்பப்பை கோளாறு ஏற்படுகிறது.

 • சில பெண்களுக்கு புற்றுநோய் கூட இந்த தொற்றின் காரணமாக ஏற்படுகிறது.


டம்பொன்ஸ் ( tampons ) -


 


வெளிநாடுகளில் பிரபலமான,  டம்பொன்ஸ் ( tampons ) நம்மில் பலருக்கு தெரியாது. சிறு விரல் நீளம் உள்ள டம்பொன்ஸ்,  கீழே நூலோடு இருக்கும். இதனை, வாஜினா என்று சொல்லப்படும் பிறப்புறுப்பின் நுழைவில் பொறுத்த வேண்டும்.நூல் வெளியே தெரியும் படி பொருத்திக்கொள்ள வேண்டும்.பருத்தியால் தயாரிக்கப்பட்ட இவை உதிரப்போக்கை உறிஞ்சிக்கொள்ளும்.5 முதல் 8 மணி நேரம் வரை பயன்படுத்தி, பின்பு நூலை பிடித்து இழுத்தால் வெளியேறிவிடும்.


டம்பொன்ஸ் உபயோகித்தால் -


 • பஞ்சைப்போல் விலகிவிடும் என்ற பயமோ, அசவ்கரிகமோ இதில் இருக்காது.இருப்பினும் நம் நாட்டில் இதற்கு போதிய விளம்பரமோ விழிப்புணர்வோ இல்லை.

 • விளையாட்டுகளில் மிக சுலபமாக நீங்கள் பங்கேற்கலாம்    

 • மிக சிறிதாக இருப்பதால் பர்சில் வைத்து எடுத்து செல்லலாம்

 • இதை அணிந்திருக்கோம் என நமக்கு தோணாது


குறைபாடுகள்-


 • இதை ஒழுங்காக வைக்காவிட்டால் கறை  (stain) ஆக வாய்ப்புகள் அதிகம்

 • பஞ்சும்,  டாம்பூன்ஸ்சும்,ஒருமுறை பயன்பாட்டு  பொருள் என்பதால், மாதாந்திர செலவில் ஒரு தனியிடம் வகிக்கிறது.

 • இதை எப்போது மாற்றுவது என்று கண்டறிய முடியாது


இதனை மாற்றுவழியாக கண்டுபிடிக்க பட்டது - மென்ஸ்ட்ருல்  கப் (menstrual cup) !


giphy %285%29
இவை சிலிக்கான் என்ற ரப்பரில் செய்யப்பட்டுள்ளது. பிங்க் மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறங்களில் கிடைக்கிறது. சிறிய கப் வடிவில் இருக்கும் இத்தனை சுருட்டி டம்பொன்ஸ் போல வஜினாவில் (vagina) வைக்க வேண்டும். உதிரப்போக்கு இதில் சேமிக்கப்பட்டு,  கழிவறை செல்லும் போதும் கழுவிவிட்டு மீண்டும் பொருத்திக்கொள்ள வேண்டும்.


சுமார் ஒரு கப்பின் விலை,  300-1000 குல் என்றாலும் வருட கணக்கில் பயன்படுத்தலாம் என்பது சிறப்பு.


மேலை நாடுகளில் இதனை பயன்படுத்துவதனால் கன்னி தன்மை இழக்க நேரிடும் என்ற பெரும் வாதம் நடந்தது.அவை பொய் என்று நிரூபித்துவிட்டது அறிவியல். கன்னி தன்மை பாதையை எட்டாமல் இருக்கும் என நிரூபித்தனர்.


மென்ஸ்ட்ருல் கப் உபயோகித்தால் -


 • இதனை மிகவும் சுத்தமான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்,  தோற்று கிருமிகள் மூலம் நோய் வரக்கூடும்.

 • இது செலவை மிச்ச படுத்தும் .

 • இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை.


குறைபாடுகள்


 • இதனை வஜினாவில் ஒழுங்காக ஏற்றவில்லை என்றால் சிக்கல்தான்

 • சிலருக்கு இது பட்ஜெட்டிற்கும்  மேல் இருக்கலாம்


காலங்களில் மாறி வர தொழில்நுட்பம் பெறுக பல மாற்றங்கள் வந்தாலும்,சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணிக்காக்க வேண்டும்.


மாதவிடாய் என்பது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. நீங்கள் நாப்கின், கப் அல்லது டம்பொன்ஸ் எதை  உபயோகித்தாலும் அதில் இருக்கும் நன்மைகளையும் குறைபாடுகளையும் தெரிந்து அதற்கேற்ப உபயோகிப்பது அவசியம்.


ezgif-1-b61d33710b2c
போதிய விழிப்புணர்வோடு, வெற்றிநடை போடுவோம் பெண்ணே வா !!!!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.