தெளிவான மற்றும் அழகான சருமத்திற்கு – தக்காளி பேஸ் பாக்!

தெளிவான மற்றும் அழகான சருமத்திற்கு – தக்காளி பேஸ் பாக்!

தக்காளி சமையலுக்கு மட்டுமல்லாது, உங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. அனைவருது வீட்டிலும் எளிதாக கிடைக்கும் ஒரு பொருள், தக்காளி. தக்காளி, சருமத்திற்கு நல்ல நிறத்தை தருவதோடு, சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் பருக்கள் ஆகியவற்றை போக்க உதவுகின்றது.

நீங்கள் தெளிவான மற்றும் அழகான சருமத்தை எளிமையான முறையில் பெற விரும்பினால், இங்கே உங்களுக்காக சில தக்காளி பேஸ் பாக்/பேக் (tomato face pack)குறிப்புகள்;

சரும ஆரோக்கியத்திற்கு தக்காளியின் பலன்கள்

 1. தக்காளியில் வைட்டமின் A, B, C உள்ளது. இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்க பெரிதும் உதவும்
 2. தக்காளியில் இருக்கும் வைட்டமின்கள் சருமத்திற்கு நல பலபலப்பைத் தரும்
 3. இதில் பழத்தில் அதிக தாது பொருட்கள் அடங்கியுள்ளது
 4. தக்காளியில் மக்னேசியம் உள்ளதால் நல்ல பொலிவைத் தரும்
 5. தக்காளியில் அமிலத்தன்மை உள்ளதால் pH அளவை சருமத்திற்கு பெற உதவும்
 6. தக்காளி சாறு வறண்ட சருமத்தை போக்க உதவும்
 7. இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. அதனால் சருமத்தில் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்க உதவும்

தக்காளி பேஸ் பாக்

செய்முறை 1

 • ஒரு சிறிய தக்காளி பழத்தை எடுத்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
 • இந்த கலவையை முகத்தில் தேய்த்து மிதமாக மசாஜ் செய்யவும்
 • பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும்
 • இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் நல்ல பொலிவு உண்டாகும்

செய்முறை 2

Pexels

 • ஒரு சிறிய நன்கு பழுத்த தக்காளி பழத்தை எடுத்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளவும்
 • தக்காளியை நன்கு மசித்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
 • இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
 • பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
 • இது உங்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தை தரும்

செய்முறை 3

 • ஒரு சிறிய தக்காளி பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும்
 • இதனுடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளவும்
 • அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தேய்க்கவும்
 • பின்னர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
 • இப்படி வாரம் 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து, முகம் இளமையான தோற்றத்தைப் பெரும்

செய்முறை 4

Pexels

 • ஒரு சிறிய தக்காளி பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
 • இந்த கலவையை முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்து சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்
 • பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
 • இப்படி செய்தால், வறண்ட சருமம் போய், நல்ல மிருதுவான சருமம் கிடைக்கும்

செய்முறை 5

 • ஒரு சிறிய தக்காளி பழத்தை எடுத்து மசித்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது சந்தனத்தை சேர்த்துக் கொள்ளவும்
 • இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து, மிதமாக மசாஜ் செய்யவும்
 • பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடவும்
 • இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தில் இருக்கும் எண்ணை பிசுக்கு போய், மிருதுவான சருமம் கிடைக்கும்

செய்முறை 6

Pixabay

 • ஒரு சிறிய தக்காளி பழத்தை எடுத்து மசித்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது முல்தானி மட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்
 • இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்
 • பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடவும்
 • இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் மாசு அகன்று, பருக்கள் நீங்கும். நல்ல தெளிவான முகமும் கிடைக்கும்

செய்முறை 7

 • ஒரு சிறிய தக்காளி பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது பச்சை அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும
 • சிறிது பன்னீர் / ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும்
 • அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்யவும்
 • பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

செய்முறை 8

Pixabay

 • ஒரு சிறிய தக்காளி பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது எலுமிச்சைப்பழ சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
 • இதனுடன் சிறிது கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்
 • அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும்
 • சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடவும்

 

மேலும் படிக்க - சருமத்தின் அழகை மீட்டு தரும் ஒயின் : பயன்படுத்தும் முறைகள் குறித்து எளிமையான டிப்ஸ்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!