சருமத்தின் அழகை மீட்டு தரும் ஒயின் : பயன்படுத்தும் முறைகள் குறித்து எளிமையான டிப்ஸ்!

சருமத்தின் அழகை மீட்டு தரும் ஒயின் : பயன்படுத்தும் முறைகள் குறித்து எளிமையான டிப்ஸ்!

ஒயின் (wine) மிதமான அளவு குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என கேள்வி பட்டிருப்போம். இதயத்துக்கு நல்லது என்றும், ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீரமைக்கும் என்று நாம் அறிந்ததே. அத்தகைய ஒயின் நமது சருமத்தின் அழகை மீட்டெடுக்கவும் பயன்படுகிறது. ஒயினை பயன்படுத்தி சருமம் மற்றும் கூந்தல் அழகை எப்படி பராமரிப்பது என இங்கு காணலாம். 

pixabay

சரும அழகிற்கு ஒயின்!

 • திராட்சையில் வைட்டமின் ஏ, சி, டி-க்களும், அமினோ அமிலமும், மினரல்களும் அதிகம் உள்ளதால் சருமத்துக்கு ஆரோக்கியமான பலன்களைத் தரவல்லது. திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் சிகப்பு, ரோஸ், வெள்ளை நிற ஒயின்கள், அழகியல் சார்ந்த சிகிச்சைக்குப் பயன்படுகிறது. அதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட், சருமத்தில் உள்ள எலாஸ்டிக் ஃபைபர்களை மீட்டு சருமச் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. 
 • வெளியில் இருக்கும் மாசு, புகை, சூரிய ஒளி போன்றவற்றால் நமது சருமம் எளிதில் பாதிப்படைகிறது.இந்த பாதிப்பை நீக்கி சருமத்திற்கு மீண்டும் அழகை தரும் எல்லா மூலப்பொருட்களும் ஒயினில் உள்ளது. இது சருமத்தில் உள்ள ஆக்ஸைடை வெளியேற்றி சருமத்தை மென்மையாக்குகிறது.

மழைக்கால சரும பராமரிப்பு : சில அடிப்படை டிப்ஸ்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகள்!

ஒயின் ஃபேஷியல்

 • ஒயின் ஃபேஷியல் என்பது முகத்தை ஸ்டீமிங், கிளென்சிங் செய்த பிறகு ஒயின், மூலிகைகள், பழங்கள், எசன்ஷியல் ஆயில்களின் கலவை முகத்தில் பூசப்பட்டு மசாஜ் செய்யப்படும். சரும வகையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் ஒயினும் மாறுபடும். இது சருமத்தை சீரமைத்து உடனடி பிரகாசத்தை தருகிறது. 
pixabay

 • யோகர்ட், தேன், ரெட் ஒயின் சேர்ந்து ஒன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 5-7 நிமிடங்கள் உலர வைத்த பின்னர் பின் முகத்தை நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். இந்த பேஷியலை வாரத்திற்கு 2 முறை செய்யும் போது விரைவில் நல்ல மாற்றத்தினை உணரமுடியும். 

ஒயின் ஸ்கிரப்

 • ஒயின் ஸ்கிரப் குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. ஒயின் தயாரிப்பின்போது மீதமான திராட்சை தோல்கள் ஸ்கிரப்பாக பயன்படுத்தப்படுகிறது. கூடுதல் பலன்களுக்கு கொஞ்சம் ஒயினும் சேர்க்கப்படும். ஸ்கிரப்பிங் முடிவடைந்தவுடன் ஸ்டீம் பாத் எடுத்து பின்னர் பின்னர் சாதாரண குளியல் செய்தால் சருமம் புத்துணர்ச்சி அடையும். 

ஒயின் பாத்

 • ஒயின் பாத் விலை அதிகமாக இருக்கும். குளிக்கும் தண்ணீரில் ஒயினை கலந்து குளிக்க வேண்டும். இதனால் ஒயினும், எசன்ஷியல் ஆயில்களும் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலக்கப்பட்டு சருமத்திற்கு இதமளிக்கும். 
pixabay

ஒயின் ஸ்பா

 • ஒரு பெரிய பாத் டப்பில் 2 கிலோ கறுப்புத் திராட்சை சேர்த்து 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி திராட்சையை லேசாகப் பிசைந்து விடவும். அந்தத் தண்ணீரில் அரை மணி நேரம் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதே ஒயின் ஸ்பா என்றழைக்கப்படுகிறது. இதன்மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்வும், இளமையான தோற்றமும் கிடைக்கும்.

எப்போதும் ஃப்ரெஷ் லுக் விரும்பும் பெண்களுக்கான பாதாம் பேஸ் பேக் !

ஒயின் சோப்

 • ஒயின் (wine) ஸ்பா, ஒயின் தெரப்பி போன்றவை செய்துகொள்ள நேரமில்லை அல்லது கட்டணம் அதிகம் என நினைப்பவர்கள் ஒயின் சோப் பயன்படுத்தலாம். இதுவும் நல்ல பலனைக் கொடுக்கும். ஒயின் சோப்பைத் தேர்வு செய்கிறீர்கள் எனில் முகத்துக்கு ரோஸ் ஒயின் சோப், உடலுக்கு ரெட் ஒயின் சோப் எனப் பயன்படுத்துவது நல்லது. 
 • குறிப்பு : டிரை ஸ்கின் உடையவர்கள், ஸ்வீட் ஒயினைப் பயன்படுத்தவும். சென்சிட்டீவ் ஸ்கின் உடையவர்களுக்கு, ரெட் ஒயின் பெஸ்ட் சாய்ஸ். இது, சருமத்தின் ஆழ்துவாரங்கள் வரை சென்று, பருக்கள் மற்றும் கட்டிகள் வருவதைக் குறைக்கும்.எண்ணெய் பசை சருமம் எனில், ரெட் ஒயினுடன் சம அளவு தயிர் கலந்து பயன்படுத்துவதன் மூலம் அழகான தோற்றத்தைப் பெற முடியும்.
pixabay

முடி உதிர்வை தடுக்கும் ஒயின்!

 • கூந்தல் உதிர்தல் பிரச்சனை இருந்தால் குளிக்கும் போது இறுதியில் ரெட் ஒயின் (wine) கொண்டு கூந்தலை அலசினால் கூந்தல் உதிர்தல் பிரச்சனை குறையம். மேலும் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
 • அடத்தியான கூந்தல் வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிறந்த தீர்வு ஒயின்தான். முடியின் ரத்த ஓட்டத்தை நன்கு அதிகரித்து இறுக்கமான முடிகளை உருவாக்கும். மேலும் முடியின் அடர்த்தியை இவை அதிகரித்து போஷாக்கான தலைமுடி பெற செய்கிறது. 
 • ஒரு பெளலில் ரெட் ஒயின் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்து குளிக்கவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் உங்கள் கூந்தல் வளர்ச்சி மேம்படும்.
 • ரெட் ஒயின், 1/4 கப் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து வைத்து கொள்ளுங்கள். முதலில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலசி கொள்ளுங்கள். பிறகு வினிகர் கலவையை தலை மற்றும் கூந்தலில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கூந்தல் மிருதுவாகும். 
 • ரெட் ஒயின் கொண்டு கூந்தலை அலசுவதால் சூரியனின் புற ஊதாக் கதிர்களினால் கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம். அதனால் கூந்தலின் கூந்தல் வறட்சி தடுக்கப்பட்டு நுனிப்பகுதி உடையாமல் ஆரோக்கியமாக இருக்கும். 

அடர்த்தியான தலைமுடி பெற வேண்டுமா? இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.