வீட்டின் பூஜை அறையை அமைக்கும் விதம் மற்றும் அலங்காரம் செய்ய பின்பற்ற வேண்டியவைகள்!

வீட்டின் பூஜை அறையை அமைக்கும் விதம் மற்றும் அலங்காரம் செய்ய பின்பற்ற வேண்டியவைகள்!

வீட்டிலுள்ள  பூஜையறை நாம் கடவுளை வணங்கும் ஒரு புனித இடமாகும்.  எனவே இயல்பாகவே பூஜை அறை அமைதியான இடமாக இருக்க வேண்டும்.  பூஜையறை வாஸ்து சாஸ்திரப்படி வைக்கப்பட்டால் வீட்டிற்கும் அதில் வாழ்பவர்களுக்கும் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வர முடியும். 

பூஜையறை தனியாக இருப்பது சிறந்தது என்றாலும் பெருநகரங்களில் இட நெருக்கடி இருப்பதால் இது சாத்தியப்படாது . அவர்கள் வீட்டின் கிழக்கு சுவர் மீது ஒரு சிறிய  பீடத்தை அமைத்து அது வீட்டின் வடகிழக்கு மண்டலத்தை நோக்கி இருக்குமாறு பூஜையறை அமைத்து வணங்கலாம். பூஜை அறையை அமைக்கும் விதம் மற்றும் அழகாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். 

twitter

பூஜை அறை அமைக்கும் விதம்

 • ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.
 • ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
 • பூஜை அறையில் கடவுளின் படம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.

பூஜை அறை அலங்காரம்

 • பூஜை அறையில் (pooja room) கலசம் வைத்து வழிபடுவது வழக்கம். கும்பத்தின் நடுவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து பூஜை அறையில் வைப்பது தெய்வீக அருள் கிடைப்பது மட்டுமின்றி பார்க்க அழகாகவும் இருக்கும். 
 • பூஜையறையில் தேவையற்ற பொருட்கள் அல்லது குப்பைக்கூடைகள் வைப்பதை தவிர்க்கவும். ஒவ்வொரு முறை பூஜை முடித்த பின்னரும் சுத்தம் செய்து விடுங்கள். 
 • பூஜையறையில் ஊதுபத்தி, பூஜை பொருட்கள் மற்றும் புனித நூல்களை வைப்பதற்கு  ஒரு சிறிய அலமாரியை உருவாக்கி அதில் வைத்து கொள்ள வேண்டும். 
twitter

 • பூஜையறை அருகே மின்சார புள்ளிகள் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் பண்டிகை நாட்களில் பூஜையறையை மின் விளக்குகளால் அலங்கரிக்கலாம். 
 • கோலம் என்பது தெய்வீக அருளை தரக்கூடியது. பூஜை அறையில் பச்சரிசி மாவில் கோலமிட்டு வர்ண பூக்களால் அலங்கரிக்கலாம். அல்லது வெண்மை நிற பெயிண்ட் கொண்டு கோலம் போடலாம். இது நீண்ட நாள் நிலைத்து இருக்கும். 
 • பூஜை அறையில் (pooja room) ஏதேனும் மலரைக்கொண்டு அலங்கரிப்பது நல்லது. ரோஜா, செம்பருத்தி, அரளி, தும்பை ஆகிய மலர்களை கடவுள் படங்களுக்குச் சமர்ப்பிக்கலாம். மல்லிகை, செவ்வந்தி மலர்களாலும், துளசி இலை கொண்டும் அலங்கரிக்கலாம். 
 • பூஜை செய்யும் முன்னர் சந்தனம், பன்னீர் தெளிப்பதன் மூலம் பூஜை அறையில் நறுமணம் வீசும். 
 • பூஜை அறையின் வாசலில் மஹாலட்சுமியையும், விநாயகரையும் வரவேற்கும் தோரணங்களால் அலங்கரியுங்கள். இது வீட்டிற்கு வண்ணமிகுதி தோற்றத்தைத் தரும்.
twitter

பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய விதிகள்

 • பூஜை அறையில் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் தண்ணீர் அல்லது பால் வைக்க வேண்டும். இதனை தினமும் மாற்ற வேண்டும்.
 • தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும்.
 • பூஜை அறை (pooja room) சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.
twitter

 • பூஜை அறையில் உடைந்த சிலைகளையோ அல்லது சாமி படங்களையோ வைத்து வழிபடுவது கூடாது. அது அபசகுனமானது.
 • இறந்த குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது.
 • பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.