ரவை / கோதுமை இல்லாமல் சுவையான சீமை சுரைக்காய் அல்வா செய்வது எப்படி?

ரவை / கோதுமை இல்லாமல் சுவையான சீமை சுரைக்காய்  அல்வா செய்வது எப்படி?

பாரம்பரிய இந்திய உணவான அல்வாவில் ஒரு சின்ன ட்விஸ்ட்! ரவை, கோதுமை, மைதா கொண்டு அல்வா செய்வது தான் வழக்கம். வித்யாசமாக பாசிப்பருப்பு அல்லது கடலைமாவிலும் அல்வா செய்வார்கள் என்று நமக்குத் தெரியும். மேலும், கேரட், பூசணிக்காய், போன்ற காய்களை வைத்தும் அல்வா செய்யலாம் என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சீமை சுரைக்காய்(zucchini) கொண்டு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான அல்வா செய்வது (ரெசிபி) எப்படி என்று இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

சீமை சுரைக்காயில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அவை உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது. சீமை சுரைக்காயின் சத்துக்களையும் அதன் பயன்களைப் பற்றியும் முதலில் பார்க்கலாம்.

சீமை சுரைக்காயின் சத்துக்களும் பயன்களும்

1. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். 

2. குறைவான கலோரி இருப்பதால், எடை குறைக்கவும் பயன்படுகிறது.

3. அதிக நீர் கொண்ட  ஒரு காய் இது. அதனால்  இதை உண்டால் மத மத என்று உணராமல் லேசாக  உணருவீர்கள்.

4. வைட்டமின் பி காம்ப்லெக்ஸ்(B-Complex) சத்து நிறைந்துள்ளதால், புண்கள் வராமல் பாதுகாக்கும்.

5. தேவையான அளவு பொட்டாசியம் இருப்பதால், நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்.

6. மெக்னீசியம் சத்து இருப்பதால், இதயம் சம்மந்தமான வியாதிகளை குணப்படுத்தவும் உதவும். 

7. ஃபோலேட்(folate) என்ற சத்து அதிகம் இருப்பதால் மூளை செயல்பாட்டையும், நியாபக சக்தியையும்  அதிகரிக்கும்.

8. அதிகளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. 

9. ஆன்டி-ஆக்ஸிடன்ட்(anti-oxidant) தன்மை இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

10. வைட்டமின் இ சத்துக்கள் இருப்பதால் அது சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை கட்டுப்படுத்தும். ஆன்டி-ஏஜிங்(anti-aging) தன்மை கொண்டது. மேலும், முடி வளர்வதற்கு தூண்டுகோலாக இருக்கும். 

 दिवाळीतील साहित्य कल्पना देखील वाचा

Pinterest

11. வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருப்பதால், பற்களையும் எலும்பையும் உறுதியாக வைக்க உதவும். குறைந்த கால்சியம் சத்து உள்ளவர்கள் சீமை சுரைக்காயை உண்ணலாம். 

12. இதன் ஆன்டி-இன்பிலமேட்டரி(anti-inflammatory) தன்மை ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கவல்லது.

13. அதிக இரத்த அழுத்தம் இருந்தால் குறைத்துவிடும் இந்த காய். 

14. தைராய்டு சமமாக வேலை செய்ய சீமை சுரைக்காயில் உள்ள மாங்கனீஸ் என்ற சத்து பயன்படுகிறது.

15. குழந்தைகளுக்கு டையேரியா போன்ற தொந்தரவு இருந்தால், சீமை சுரைக்காயை அரைத்துக் கொடுத்தால் குணமாகிவிடும்.

16. சீமை சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், கீழ்வாதம் போன்ற தொந்தரவுகளில் இருந்தும் விடுபடலாம். 

17. மேலும், சீமை சுரைக்காயில் லுடெய்ன்(lutein) மற்றும் ஜியாஜான்தின்(zeaxanthin) இருக்கிறது. இது சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் ப்ளூ லைட் சக்தியை உடல் உறிஞ்சிக்கொள்ள துணைபுரிகிறது. இந்த சத்து கண்களை மிகவும் பாதுகாக்கிறது. சருமத்தை கேன்சர் போன்ற கொடிய நோயில் இருந்தும் பாதுகாக்கிறது.

18. இத்தகைய சத்துக்கள் நிறைந்த சீமை சுரைக்காயை பயன்படுத்தி எவ்வாறு சுவையான அல்வா செய்வது என்று பார்ப்போம்.

சீமை சுரைக்காய் அல்வா ரெசிபி

தேவையான பொருட்கள்:

சீமை சுரைக்காய் - 1கிலோ
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
மாவா/கோவா - 250 கிராம்
சக்கரை - 250 கிராம்
நெய் - 150 கிராம்
அழகுபடுத்த சிறிது செர்ரி மற்றும் கேசரி மலாய்(உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப)

செய்முறை:

  1. முதலில் சீமை சுரைக்காயை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். 
  2. சுமாரான தடிமன் இருக்கும் கேரட் சீவுவதில் கிரேட்(grate) செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் துருவிய சீமை சுரைக்காயையும், பாலையும் சேர்த்து நன்றாக வேக விடுங்கள். பால் சுண்டும் வரை கிளரிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
  4. பிறகு நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக மீண்டும்  ஒரு ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
  5. ஏலக்காய் பொடியையும் சேர்க்கவும்.
  6. மாவாவையும் துருவி இதோடு சேர்த்து விடுங்கள். பத்து நிமிடங்கள் நெய் பிரிந்து வரும் வரை மேலும் கிளருங்கள். 
  7. பாத்திரத்தில் ஒட்டாமல் வந்த பின், அழகுபடுத்த சிறிது செர்ரி மற்றும் கேசரி மலாய் சேர்த்து பரிமாறுங்கள். 
  8. சுவையான சத்தான பச்சை நிறத்தில் அல்வா (halwa) ரெடி!
Pinterest

சீமை சுரைக்காயை பயன்படுத்தி கூட்டு, காய் சமைப்பது தெரியும். வித்யாசமான ட்விஸ்டில் அல்வா செய்வதை தெரிந்து கொண்டோம். சீமை சுரைக்காய் வெள்ளரிக்காய் போன்று இருந்தாலும், இரண்டும் முற்றிலும் மாறுபட்டது. வெள்ளரி பழ வகையைச் சார்ந்தது. ஆனால், சீமை சுரைக்காயை காய் வகையை சார்ந்தது. வெள்ளரியில் விதை இருக்கும். சீமை சுரைக்காயில் விதைகள் இராது. சீமை சுரைக்காயை அதிக நாட்கள் பிரிட்ஜ்ஜில் வைத்து உண்ண வேண்டாம். ஐந்து நாட்களுக்கு மேல் அதன் மருத்துவ குணம் போய்விடும். ஒரு புது விதமான காய் பற்றியும், அதன் எண்ணற்ற மருத்துவ பயன்கள் பற்றியும், இந்த பண்டிகை நாட்களில் எளிதாக செய்து அசத்த ஒரு இனிப்பு வகையும் தெரிந்துகொண்டோமல்லவா?!

ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது! 

 

மேலும் படிக்க - எளிமையான மற்றும் சுவையான தீபாவளி பலகாரங்கள்!

பட ஆதாரம்  - Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!