விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே ‘மெட்ராஸ் ஐ' எனப்படுகிறது. மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் முதன் முதலாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது.
தற்போது காலநிலை மாற்றத்தால் ‘மெட்ராஸ் ஐ’ (madras eye) எனப்படும் கண் நோய் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது, இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என இங்கு விரிவாக காண்போம்.
மெட்ராஸ் ஐ வந்திருப்பதை சில அறிகுறிகள் வைத்து நாம் உறுதி செய்யலாம். இதனை உறுதி செய்தவுடன் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. இந்த பாதிப்புள்ளவர்களுக்கு கண் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் சுரத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :
தற்போது காற்றில் மாசு பெருகி வருகிறது. அதனால் ஏற்படு அலர்ஜி காரணமாக கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழியவும் கூடும்.
தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!
வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :
ஜலதோசம், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் ஏற்படும். இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இந்த வகை மெட்ராஸ் ஐ ஏற்பட்ட கண்கள் அரிப்புடன் நீர் வழியும்.
பாக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :
பாக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ ஏற்பட்டால் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐயில் காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் உறுத்தல் இருக்கும்.
ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :
இந்த வகையில் கண் உறுத்தலும் வலியும் அதிகம் இருக்கும். அரிப்போ நீர்/சீழ் வடிதலோ இருக்காது.
இவர்களால் முடிந்தால், உங்களாலும் முடியும்!பி.சி.ஓ.எஸ் : நீங்கள் அறியாத விஷயங்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!