முத்தம் தர ஏற்ற இடமாக உங்கள் உதடுகளை மாற்றிக் கொள்ளுங்கள்!கவரும் உதடுகளுக்கு லிப் ஸ்க்ரப்!

முத்தம் தர ஏற்ற இடமாக உங்கள் உதடுகளை மாற்றிக் கொள்ளுங்கள்!கவரும் உதடுகளுக்கு லிப் ஸ்க்ரப்!

உதடுகள்தான் பெரும்பான்மையோரின் ஈர்ப்பு விசை என சொல்லப்படுவதுண்டு. உங்கள் உதடுகளை முத்தத்தை நோக்கி நீங்கள் ஈர்க்க செய்ய வேண்டும் என்றால் லிப்ஸ்டிக் லிப் க்ளாஸ் மற்றும் போதாது. லிப் ஸ்க்ரப்பும் (lip scrub) தேவையானது.                                              

ஸ்க்ரப் செய்வதன் மூலம் உதடுகளில் நீங்கள் பிறந்தததில் இருந்து இருக்கின்ற இறந்த செல்களை நீக்க முடியும். அதனால் ஒளிர்கின்ற உதடுகள் உங்கள் வசமாகும். வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு எப்படி லிப் ஸ்க்ரப் தயாரிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!                                                  

Youtube

இதற்கு தேவையான பொருள்கள்

தேன்
சர்க்கரை
பாதாம் எண்ணெய்

மழைக்கால சரும வறட்சியை போக்கி உங்கள் முகத்தை அழகாக்கும் ஓட்ஸ்!                                                                

Pinterest

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களை கொண்டு உங்கள் உதடுகளை முத்தம் பெற ஈர்க்கும் இடமாக எவ்வாறு மாற்றலாம் என்பதை பார்க்கலாம். முதலில் லிப் ஸ்க்ரப் தயாரிப்பு முறைகளை அறிந்து கொள்வோம்.

ஒரு ஸ்பூன் தேன் , ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை இவை மூன்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் விரல்களால் எடுத்து உதடுகளில் நன்கு பூசி மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வதே நல்லது.

pinterest

5 நிமிட மசாஜிற்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் உதடுகளைக் கழுவி மெல்லிய துணியால் ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் லிப் பாம் தடவிக் கொள்ளுங்கள்.

தேன் உங்கள் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் கிருமிகள் போன்றவற்றை நீங்க செய்யும் ஒரு சிகிச்சை மருந்து.பாதாம் எண்ணெய் உங்கள் உதடுகளுக்கு தேவையான வைட்டமின்களை உள்ளே செலுத்துகிறது. சர்க்கரை இறந்த செல்களை வலியில்லாமல் நீக்குகிறது.

 

 

Youtube

மேலும் உங்கள் ஸ்க்ரப்பை சிறப்பாக மாற்றிக் கொள்ள கூடுதலாக வைட்டமின் ஈ எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆக்சிஜனேற்றங்கள் வேண்டும் என்று விரும்பினால் சிறிதளவு கோகோ பவுடர் அல்லது சாக்லேட் சேருங்கள்.

முத்தம் தர ஏற்ற இடம் இனி எப்போதுமே உங்கள் இதழ்கள் தான் என்பதை உங்களவர் உணர்ந்து கொள்வார்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!