கூந்தல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அழகாக தோன்றும். ஒரு சிலருக்கு இயற்கையாகவே வறண்ட கூந்தல் இருக்கும். சில சமயம் உப்பு தண்ணீரினால்கூட ஆரோக்கியமான கூந்தல் வறண்டு காணப்படும். ஒரு சிலருக்கு வெளியில் சுற்றினால் ஒரு சில மணி நேரமே கூந்தல் பொலிவாக இருக்கும். அதன் பிறகு சிக்கலாகிவிடும். வெளியில் கிளம்பும் போது நொடியில் உங்கள் கூந்தலை பளபளப்பாக(shiny) நீண்ட நேரம் வைத்துக் கொள்ள வேண்டுமா?
இதோ இங்கே படிப்படியாக உங்கள் கூந்தலை மிளிர வைக்க செய்ய வேண்டிய முறைகளைப்பற்றி பார்க்கலாம்.
ஹேர் ஸ்பிரே எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் படிக்க - கட்டுக்கடங்காத வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் ஹேர் ஸ்ப்ரே, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
இப்போது, கூந்தலுக்கு பயன்படுத்தக் கூடிய சிறப்பான சில பிராண்ட் பொருட்களைப்பற்றி பார்க்கலாம்.
இது ஒரு ஆன்டி-ஃபிரிஸ் - கூந்தல் சிக்காகாமல் வைத்துக்கொள்ளும் ஒரு கிரீம். இந்த கிரீம் பயன்படுத்துவதால் உங்கள் முடி சிக்காவதை குறைக்கிறது, கூந்தலை மென்மையாக்குகிறது,
சூடாக வைத்து ஸ்டைல் செய்வதால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது, கூந்தலுக்கு ஊட்டச்சத்து கொடுக்கிறது,வெளிப்புற மாசுவினால் கூந்தலுக்கு ஏற்படும் சேதத்தில் இருந்து கூந்தலை பாதுகாக்கும்.
நன்மைகள் : கூந்தலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.
குறைபாடு : போதிய முடிவுகளை காண நேரம் ஆகலாம்.
தண்ணீரைப் போல இருக்கும் இந்த லோரியல் பிராண்ட் சீரம், மிகவும் பிரமாதமான ப்ரைம் ரோஸ் வாசனையில் கலக்குகிறது. இது கூந்தலுக்கு நல்ல பொலிவைத் தருகிறது, கூந்தலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது, கூந்தல் உதிர்வதை தடுக்கிறது, மற்ற பிராண்ட் கண்டிஷனர்களை விட இது குறைந்த எண்ணெய்ப் பசைத் தன்மை கொண்டது.
நன்மைகள்: பாட்டில் வடிவமைப்பு பம்ப் ஸ்டைலில் இருப்பதால் எங்கு வேண்டுமானுலும் உங்கள் கைப்பையில் வைத்து எடுத்துச் செல்லலாம்.
குறைபாடு: விலை சிறிது உயர்வு.
இந்த ஸ்பிரே கண்டிஷனரை கூந்தலில் ஸ்பிரே செய்யுங்கள். மற்றவற்றை அதுவே பார்த்துக் கொள்ளும். அந்தளவிற்கு கவலை இல்லாமல் இருக்கலாம். இந்த பிராண்ட் ஸ்பிரே பயன்படுத்தினால் - கூந்தலின் தரம் பெருகிவிடும், பளபளப்பாக ஆரோக்கியமாகத் தோன்றும், கூந்தலில் உட்புகுந்து ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும், கூந்தல் சேதமடைவதை எதிர்த்துப் போராடும், சிக்கலாவதைத் தடுக்கும், வறண்ட கூந்தல் நுனியை சரி செய்யும்.
நன்மைகள் : உடனடியாக கூந்தலுக்கு பௌன்ஸ்(bounce) ஆகும் தன்மையை தந்து அழகாக்கும்
குறைபாடு : வலுவான வாசனை, உணர்திறன் உச்சந்தலையில் நல்லதல்ல.
இந்த ஈரத்தன்மை கொண்ட க்ரீமில் ஆலிவ்(கூந்தலின் நடுவில் ஊடுருவும்), மெடோபோம் விதை(நடுவே ஈரத்தன்மையை பிடித்துவைத்துக்கொள்ளும்) மற்றும் பாதாம்(வெளிப்புறத்தில் படர்ந்து கொள்ளும்) இருக்கிறது. மேலும், இதைப் பயன்படுத்துவதால் - ஒரு நாள் முழுவதும் கூந்தலை மிரள வைக்கும், கூந்தலை இயற்கையாக மென்மையாக வைக்க உதவும், வறண்ட கூந்தலையும், அதிகம் நிறம் பூசியதால் கூந்தலுக்கு ஏற்பட்ட சேதங்களையும் சரி செய்யும், ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் கூந்தலின் தன்மையை அதிகரிக்கும்.
நன்மைகள் : யூவி(UV) கதிர்களில் இருந்தும் பாதுகாக்கும்
குறைபாடு : வலுவான வாசனை, மிகவும் வறண்ட கூந்தலுக்கு எதிர்பார்த்த முடிவை பெற சிறிது நாட்கள் ஆகும்.
இவை எல்லாமே, கூந்தலுக்கு உடனடியாக பொலிவைத்தரும் தரமான பிராண்ட்கள். உங்களுக்கு பிடித்த பிராண்ட் பயன்படுத்தி கூந்தலை அற்புதமாக ஜொலிக்க வையுங்கள்!