logo
ADVERTISEMENT
home / அழகு
கட்டுக்கடங்காத வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் ஹேர் ஸ்ப்ரே, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

கட்டுக்கடங்காத வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் ஹேர் ஸ்ப்ரே, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

உங்களின் உலர்ந்த மற்றும் கட்டுக்கடங்காத கூந்தலை சீவி சீவி கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் சோர்வாகி விட்டீர்களா?  அல்லது விசேஷ நாட்களில் உங்கள் கூந்தலை அலங்கரித்த சில மணி நேரங்களிலேயே அது அடங்காமல் கலைந்து போகிறதா? இவை அனைத்திற்கும் ஒரு அற்புதமான தீர்வை இங்கு நீங்கள் காணலாம். உங்களுக்கு மிக அவசியமான ஒன்று ஹேர் செட்டிங் ஸ்பிரே!  கடைகளில் இவை மிக அதிக விலையில் விற்கப்படுகிறது ஆனால் நீங்கள் இதை வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம்.

இங்கு இரண்டு வகையான ஹேர் ஸ்ப்ரேக்களை(hair spray)  எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எவ்வாறு தயாரிப்பது என்ற விவரங்களை தொகுத்துள்ளோம். இதை உங்கள் வறண்ட கூந்தலை மிருதுவாகவும் உங்கள் கூந்தலை நீண்டநேரம் செட் செய்வதற்கும் பயன்படுத்தலாம். 

 

 

ADVERTISEMENT

1. கற்றாழை ஜெல் கொண்ட ஹேர் ஸ்ப்ரே

Pixabay

தேவையான பொருட்கள்

1. கற்றாழை ஜெல்:  1/2 முதல் 2 டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின் சி, அமினோஅமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உலர்ந்த முடியை (கூந்தல்) மென்மையாக்குவதில் சிறந்தது . மேலும் இது  தேவையான பிரகாசத்தை உங்கள் கூந்தலுக்கு வழங்குகிறது.

2. தேங்காய் அல்லது ஆர்கான் எண்ணெய்: 2 முதல் 3 சொட்டுகள்

தேங்காய் எண்ணெய் வறண்ட  முடி மற்றும் சேதமடைந்த முடியை சரிசெய்கிறது. ஆர்கான் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது உடல் செல்களைத் தூண்டுவதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும் .

3. ரோஸ் வாட்டர் – 1 கப்

ADVERTISEMENT

உங்கள் ஹேர் ஸ்ப்ரேயில் சிறிது நறுமணத்தை சேர்க்க விரும்பினால், அதில் சிறிது ரோஸ் வாட்டர் அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்க்கவும். மாற்றாக, நீங்கள் ஒரு கப்  சுத்தமான நீரில் கூட மேல் கூறிய அணைத்து பொருட்களையும் கலக்கலாம்.

4. ஸ்ப்ரே பாட்டில்

ஹேர் ஸ்ப்ரேவை  எவ்வாறு தயாரிப்பது? 

  • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து கிளறவும் 
  • அனைத்து பொருட்களும் தண்ணீரில் நன்கு கரையும் வரை நன்கு கிளறவும்.
  • இப்போது நீங்கள் இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து உபயோகிக்கலாம்

Also Read About சிறிய முடிக்கு சிகை அலங்காரங்கள்

ADVERTISEMENT

2. ஆளி விதைகளுடன் ஹேர் ஸ்ப்ரே

Pixabay

தேவையான பொருட்கள்

1. ஆளி விதைகள் ஜெல் :1 முதல் 2 டேபிள் ஸ்பூன்

ADVERTISEMENT

ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன.  அவை உங்கள் தலைமுடி வெகு வேகமாக வளர உதவுகின்றன. இது வறட்சி மற்றும் முடி செதில்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

2. சுத்தமான தேங்காய் எண்ணெய்:  2 முதல் 3 சொட்டுகள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, தேங்காய் எண்ணெயில் உங்கள் உலர்ந்த கூந்தலைப் பாதுகாத்து மென்மையாக்க  அனைத்து அத்தியாவசிய காரணிகளும் உள்ளன.மேலும் இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

3. கண்டிஷனர் அல்லது லேசான ஹேர் சீரம் : 1 தேக்கரண்டி 

ADVERTISEMENT

ஹேர் கண்டிஷனர் மற்றும் சீரம் இரண்டும் உங்கள் தலைமுடியை விரைவாக மென்மையாக்க உதவுகிறது. கனமான ஹேர் சீரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது பிசுபிசுப்பு தன்மையை உருவாக்கலாம். 

4.சுத்தமான  நீர்  

ஹேர் ஸ்பிரே செய்முறை 

அனைத்து பொருட்களையும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில்  கலந்து, அது கரைந்து நீரில் கலக்கும் வரை நன்றாக கிளறவும். இப்போது ஒரு பயனுள்ள ஹேர் ஸ்ப்ரே தயார்! 

ADVERTISEMENT

நீங்கள் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவதற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் 

  1. பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் உங்கள் ஸ்ப்ரே பாட்டிலை நன்றாக அசைத்து கலக்கி விடவும் 
  2. உங்கள் தலைமுடியின் நடுவில் இருந்து இறுதி வரை தெளிக்கவும்.
  3. உங்கள் தலைமுடியின் உச்சந்தலையில் அல்லது வேர்களில் தெளிப்பதைத் தவிர்க்கவும்
  4. ஹேர் ஸ்ப்ரேவை குளிர்ந்த இடத்தில் வைக்கவும்

பயன்பாடு மற்றும் முடி நீளத்தைப் பொறுத்து இது 2 -3 மாதங்கள் நீடிக்கும். எனவே, இப்போது உங்கள் கட்டுக்கடங்காத வறண்ட முடியை நொடியில் கட்டுப்படுத்த தயாராகுங்கள்!

 

மேலும் படிக்க – உங்கள் பெஸ்டியின் திருமணத்தில் முயற்சிக்க 17 அழகான சிகை அலங்காரங்கள்!!

பட ஆதாரம் – Pexels, Shutterstock

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

05 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT