logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
அதிகமான கோபத்தின் விளைவுகள் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்!

அதிகமான கோபத்தின் விளைவுகள் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்!

உணர்வுகள்  மனித வாழ்வின் ஓர் அங்கம். கோபமும் ஒரு வகையிலான உணர்வுதான்.  நமக்கு யாராவது அநியாயமோ, துரோகமோ இழைத்தால் வெறுத்துப்போகிறோம். வெறுப்பும், எரிச்சலும் முற்றும்போது அது கோபமாக உருவெடுக்கிறது. கோபப்படும் விதமும் நபருக்கு நபர் வித்தியாசப்படும். சிலருக்கு சீக்கிரத்தில் கோபம் வராது, வந்தாலும் சீக்கிரத்தில் மறந்துவிடுவார்கள். 

ஆனால் சிலருக்கு சட்டென கோபம் (anger) வந்துவிடும், அதோடு நாள் கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில்கூட வன்மத்தை மனதில் தொட்டில் கட்டி வளர்ப்பார்கள். ஆனால் கோபம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோபத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம்.

pixabay

ADVERTISEMENT

கோபத்தின் விளைவுகள் (Effects of anger)

  • கோபப்படுகின்றவர்கள் தங்களை சுற்றிலும் எதிர்ப்புக் கோட்டைகளை உருவாக்கி கொள்கிறார்கள். இதனால் உடன் இருப்பவர்கள் அவர்களுடன் இயல்பாக பழக அச்சம் கொள்வர். 
  • கோபப்படும் போது நூற்றூக்கணக்கான நரம்புகள் செயல்படுகின்றன என்பதை அறிவியல் தெரிவிக்கின்றது. அதிகப்படியான கோபத்தால் நரம்புகள் விரைவில் செயல் இழந்து விடுகின்றனர். 
  • கோபப்படுகின்றவர்கள் நண்பர்கள சுற்றத்தார்களை ஏன் தன் குடும்பத்தையே இழந்து தன்னந்தனியாக இருக்க நேரிடும். 
  • கோபம் மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  

மேலும் படிக்க – எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த திரிபலா சூரணம் : ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள்!

  • மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.
  • அதிகமான கோபத்தால் அலுவலகத்தில் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற யாரும் முன்வரமாட்டார்கள். மேலும் இதனால் உங்கள் வேலை கூட பறிபோகும் நிலை கூட ஏற்படலாம்.

pixabay

ADVERTISEMENT

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான டிப்ஸ் (Tips to control anger)

எப்படிப்பட்ட கோபம் (anger) வந்தாலும் அதனை கட்டுப்படுத்த பல எளிமையான வழிகள் உள்ளன. அதனை தெரிந்து கொண்டால் உங்களால் கோபத்தை கூட வெல்ல முடியும். அவர் என்னென்ன என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம்.

கோபத்தை புரிந்து கொள்ளுங்கள் (Understand your anger)

முதலில் உங்களுக்கு கோபம் வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது தான் அதனை உங்களால் திருத்தி கொள்ள முடியும். பின்னர் ஏன் கோபம் வருகிறது என்று பொறுமையாக எண்ணிப்பாருங்கள். கோபம் தணிந்தவுடன் அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து வரிசைப்படுத்திப் பாருங்கள். அல்லது ஒரு தாளில் எழுதிப்பாருங்கள். இதனால் கோபம் கொஞ்சம் குறைந்திருக்கும். மேலும் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்த தெளிவு கிடைக்கும்.

எண்ணிக்கையை கணக்கிடுங்கள் (Count down)

சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும். அப்போது வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய் தாழிட்டுக்கொண்டு எண்களை பின்வரிசையில் இருந்து பொறுமையாக கணக்கிடுங்கள். உதாரணமாக 100, 99 , 98, 97… என கணக்கிட்டவாறு மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள்.  அல்லது பொறுமையாக இரு.. என்பது போன்ற வார்த்தைகளை கூட உச்சரித்து கொண்டு இருக்கலாம். ஆனால் அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

pixabay

மூச்சு பயிற்சி (Take a breath)

கோபம் (anger) வரும்போது சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக ஒன்று முதல் ஆறு வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர் அதேபோல ஒன்று முதல் ஏழு வரை எண்ணிக்கொண்டே மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக மனதில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்து பாருங்கள்… கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும்கூட குறைந்துவிடும்.

தசைகளை நிதானப்படுத்துங்கள் (Relax your muscles)

கோபம் வரும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். இதயத்துடிப்பு அதிகமாவது, நகங்களைக் கடிப்பது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் செய்துகொண்டிருந்தால் உடனடியாக உங்கள் மனதைச் சாந்தப்படுத்துங்கள். கோவமாக இருக்கும் போது வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்பட்டு தசைகள் நிதானமாகும்.

ADVERTISEMENT

மந்திரம் உச்சரியுங்கள் (Repeat a mantra)

கொடூர கோபத்தை ஒரே நிமிடத்தில் மறைய செய்யும் மந்திரம் சொன்னால் போதுமானது. கோபத்தை குறைக்க நீங்கள் அதற்கென மந்திரம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் இஷ்ட தெய்வ பெயரை கூட உச்சரிக்கலாம். அல்லது ஏதேனும் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வந்தாலும் கோபம் குறைவதை கண்கூடாக காணலாம்.

pixabay

பேசுவதை நிறுத்துங்கள் (Stop taking)

யாராவது உங்களை கோபப்படுத்தினா சட்டுனு யோசிக்காம எதையாவது பேசிடாதீங்க நிதானமா பேச வேண்டும். கோபத்தில் யோசிக்காமல் பேசும் நபராக இருந்தால் பேசுவதையே தவிர்ப்பது நல்லது. கோபத்தை கட்டுப்பாட்டில் வையுங்கள். எப்போதும் அமைதியை இழக்கக் கூடாது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி கோபம் வந்தாலும் நாவடக்கம் காத்துக்கொள்ளுங்கள். மேலும் கோபத்தில் முடிவெடுப்பதைத் தவிருங்கள்.

ADVERTISEMENT

உங்களை கட்டுப்படுத்துங்கள் (Give yourself a pinch)

மிகவும் கோவமாக இருக்கும் போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இது கோபத்தை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருப்பது எப்படி என்பது குறித்து உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்பி கொள்ளுங்கள். மிகவும் கோவம் வரும் நேரத்தில் உங்களை நீங்களே கிள்ளிகொள்ளுங்கள். உங்களுக்கு காயங்கள் ஏற்படுத்தும் அளவுக்கு உங்களை நீங்களே கிள்ளிப் போடாதீர்கள். ஏதுனும் ஒரு அழுத்தம் கொடுத்தால் போதுமானது.

மரம் நடுங்கள் (Planting tree)

விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக மரம் நடலாம். உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள். ஒரு குழுவாக இணைந்து மரம் நடுவது போன்ற இயற்கையோடு இணைந்த வேலைகளை செய்வதால் உங்கள் மனம் அமைதியாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த உதவிகள், நண்பர்களின் துணை வேண்டுமெனில் தயங்காமல் கேளுங்கள். நிலமை மிகவும் மோசமாக இருக்கும்பட்சத்தில் ரிலாக்ஸாக ஒரு ட்ரிப் சென்று வாருங்கள்.

pixabay

ADVERTISEMENT

சைக்கிளிங் (Cycling)

சைக்கிளிங் செய்வதால் உங்கள் கோவம் கட்டுக்குள் வைக்கப்படும். சைக்கிளிங் போவதால் உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடலுக்கும், உள்ளத்துக்கும் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. வாரத்துக்கு 5 நாட்கள் சராசரியாக 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வது நல்லது. 

மேலும் படிக்க – மனதை கவர்ந்த கவிதைகள் மற்றும் பொன்மொழிகள்

யோகா (yoga)

நம் உடலின் அனைத்து பாதிப்புகளுக்கும் யோகா தீர்வளிக்கிறது. அவற்றில் மன அழுத்தம் மற்றும் கோபத்தை குறைக்கும் யோகா உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய கைகளையும், கால்களையும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு நிற்க வேண்டும். முன்னாள் இருக்கும் ஏதாவது ஒரு புள்ளியின் மீது கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த அழுத்தம் பெறும். அப்போது உணர்வுகளை தூண்டிவிடும் புள்ளிகள் சாந்தமடையும்.

ADVERTISEMENT

pixabay

கோபம் மேலாண்மை சிகிச்சை

கோபம் மேலாண்மை சிகிச்சை என்பது கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான முறையாகும். கிழ்கண்ட முறைகளை பின்பற்றி கோபத்தை நாம் வெல்ல முடியும்.

உந்துவிசை கட்டுப்பாடு ( Impulse control)

கோபம் என்பது நீங்கள் காயம், எரிச்சலடைந்த அல்லது ஏமாற்றமடைந்த காலத்தில் நடக்கும் ஒரு சக்திவாய்ந்த உணர்வு. ஆனால் நீங்கள் அதை நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள் என்பதை பொறுத்து அது உங்களுக்கு உதவலாம் அல்லது காயப்படுத்தலாம். வேறு யாரையாவது தொந்தரவு செய்யாமல் நீங்கள் நடந்து கொள்ளலாம் என்றால் அது ஒரு நேர்மறையான உணர்வு. அதற்கு முதலில் நீங்கள் கோபமாக இருக்கும் போது உங்களை கட்டுப்படுத்த வேண்டும். இது அவசர நிலைகளை கையாளவும், பிரச்சினைகளை தீர்க்கவும், அர்த்தமுள்ள உறவுகளைப் பற்றிக்கொள்ளவும் உதவும்.

ADVERTISEMENT

சுய விழிப்புணர்வை அதிகரிக்கவும் ( Increase self awareness)

கோபத்தை குறைக்க முதலில் நீங்கள் உங்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். கோபத்தை வெளிப்படுத்த சரியான வழி இருக்கிறது. மிகவும் கோபமாக இருக்கும் போதும் கூட தெளிவாகவும், அமைதியாகவும் வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உணர்வுகள் எவ்வாறு பொருத்தமான வழிகளில் அடையாளம் கண்டு வெளிப்படுத்தப்படுவது என்பதை நீங்கள் அறிந்து உங்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். இதன் மூலம் கோபம் வந்தாலும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். 

pixabay

தியானம் (Meditation)

கோபம் என்பது புத்தி செயல்படுவதற்கு முன்பே ஆழ்மனத்திலிருந்து வரும் ஒரு செயல் தான். அதனால் எந்த நிலையில் கோபம் வந்தாலும் ஒரு 10 வினாடிகள் தியானம் செய்தாலே போதும் புத்தி வேலை செய்ய ஆரம்பித்து கோபமே வராமல் போய்விடும். கோபம் தோன்றியவுடன் சுயவுணர்வுடன் இருங்கள். முதலில் உங்களுள் கோபம் தோன்றியதை உணருங்கள். எனக்கு கோபம் வந்தாலும் நான் கோபத்துடன் யாருடனும் பேசமாட்டேன் என்று ஒரு செய்தியை மனதில் ஒலிக்க செய்தவாறே தியானத்தில் ஈடுபடுங்கள். 

ADVERTISEMENT

சுவாச நுட்பங்கள் (Breathing techniques)

நீங்கள் கோபப்படுவதை உணர்ந்தால் ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுங்கள். இது உங்கள் கோபமான எண்ணங்களை நிறுத்த துணை புரிகிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், பதற்றம் மற்றும் கோபத்தை தணிக்கவும் ஒரு வழிமுறையாக சுவாச பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளின் மதிப்பைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் உத்வேகம் இருந்து ஆழமாக மூச்சு விடும் போது கோபம் கட்டுக்குள் வைக்கப்படும். கோபத்தை அடையும் வரை ஆழமாக மூச்சுவிட வேண்டும்.

pixabay

தனிப்பட்ட பிரதிபலிப்பு (Personal reflection)

நமக்கு ஒருவர் மேல் கோபம் ஏற்பட முக்கிய காரணம் அவர்களின் செயல்பாடுகள் நமக்கு பிடிக்காமல் போகும் போது தான். அதை உடனே அவர்களிடம் சாமர்த்தியான முறையில் புரிய வைக்க முற்பட வேண்டும் முகத்தில் அடிப்பது போல் உடனே பேசி விடக் கூடாது. நாம் அவர்கள் மேல் உள்ள குறைகளை அவர்களிடம் கூறாமல் நம் மனத்திலே போட்டு வைத்துகொண்டு இருந்தால் அது ஒரு நாள் பூதாகரமாக வெடித்து நமக்கு கோபம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் உங்கள் கோபத்தை நீங்கள் சிறந்த முறையில் பிரதிபலிப்பது தவறான புரிந்துணர்வுகளை தெளிவுபடுத்துவதற்கு உதவுகிறது.

ADVERTISEMENT

உணர்ச்சி விழிப்புணர்வு (Emotional awareness)

உணர்ச்சி விழிப்புணர்வு என்பது தற்காப்பு, விரோதம், அல்லது உணர்ச்சிப்பூர்வமாக குற்றம்சாட்டாமல் உங்கள் உணர்வுகளை அமைதியாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். 90% உங்களை கோவம் படுத்தும் விஷயத்தில் நகைச்சுவையான ஒன்று இருக்கும். அந்த நகைச்சுவையை கண்டறிய முயற்சி செய்யலாம். கோவம் முன்னோக்கி செயல்படும் ஆற்றல். எனவே கோவம் வரும் போது நின்று கொண்டு இருந்தால் உட்காருங்கள். உங்களது உணர்ச்சிகளை மாற்ற நீங்களே முயற்சி செய்யுங்கள். 

கேள்வி பதில்கள் (FAQ’s)

என் கோபத்தை நான் கட்டுப்படுத்த முடியாவிட்டால் என்ன? (What if I can’t control my anger?)

உங்கள் கோபம் கட்டுப்பாட்டை மீறி வரும் போது அது உங்கள் வாழ்க்கையிலும், உறவுகளிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். உங்களால் இயலவில்லை என்றால்  ஒரு மனநல மருத்துவ நிபுணரின் உதவியை நாடுவது சிறந்தது. 

கோபம் பிரச்சினைகளை சரி செய்ய யோகா உதவுமா? (Can yoga help with anger issues?)

ஆம். கோபத்தில் இருக்கும் நபரை அமைதிப்படுத்த யோகா உதவுகிறது. கோபத்தை உணருவது இயல்பானது மற்றும் சாதாரணமானது. அதனால் நாம் கோபத்தை உணர்ந்த பின்னர் யோகா செய்யலாம். கோபம் வெவ்வேறு வடிவங்களில் வருகிறது. அதனை கட்டுப்படுத்த யோகா உதவுகிறது என்பது நிதர்சமான உண்மை.

ADVERTISEMENT

pixabay

ஒடுக்கப்பட்ட கோபத்தின் ஆபத்துகள் என்ன? (What are the dangers of suppressed anger?)

உங்கள் கோபத்தை நீங்கள் சமாளிக்கவில்லை என்றால் அது கவலை மற்றும் மனத் தளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது உங்கள் உறவுகளை சீர்குலைக்கும் மற்றும் நோய் உங்கள் ஆபத்தை அதிகரிக்கும். மேலும் உயர் இரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள், தலைவலி, தோல் சீர்குலைவுகள், மற்றும் செரிமான பிரச்சினைகளைப் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

மேலும் படிக்க – தரையிறங்கிய பறவை போலவே மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே .. சுதந்திர பறவையின் தனிமை பயணம் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

24 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT