logo
ADVERTISEMENT
home / அழகு
சருமத்தை பாதுகாக்கும் கிளிசரின் சோப்பு : இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம்!

சருமத்தை பாதுகாக்கும் கிளிசரின் சோப்பு : இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம்!

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் சோப்புகளில் சோப்பின் கடினத் தன்மைக்காகவும் நறுமணத்துக்காகவும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். இதனால் உண்டாகும் தீங்குகளில் இருந்து நாம் தப்பிக்க வீட்டிலேயே சோப்புகளை தயாரித்து பயன்படுத்தலாம். 

கிளிசரினுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்து நாம் குளியல் சோப்பை தயாரிக்கலாம். கிளிசரின் (glycerin) எவ்வித பக்க விளைவும் அற்றது, பாதுகாப்பானது. நாம் தயாரிக்கும் சோப்புகளில் கெமில்கள்களை தவிர்த்து இயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி எப்படி சோப்பு தயாரிப்பது என இங்கே பாப்போம்.

மழைக்கால சரும வறட்சியை போக்கி உங்கள் முகத்தை அழகாக்கும் ஓட்ஸ்!

ADVERTISEMENT

pixabay

தயாரிப்பு முறை – 1 

தேவையான பொருட்கள்:

பப்பாளிப் பழத்துண்டுகள் – 4,
தேங்காயெண்ணெய் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை- 1 டீஸ்பூன்,
வோட்கா  – 1 டீஸ்பூன்,
கிளிசரின் – 1/2 டீஸ்பூன் ,
நறுமண எண்ணெய் – சில துளிகள். 

ADVERTISEMENT

pixabay

செய்முறை:

  • முதலில் நன்கு கனிந்த பப்பாளிப்பழம் ஒன்றை விதைகளை நீக்கி வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.  இந்தப் பப்பாளிக் கூழுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி விட்டு அதனுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். 

கொலு நிவேத்தியம் – நவராத்திரி பூஜை பலகாரங்கள்

ADVERTISEMENT
  • சர்க்கரை நன்கு கரைந்த பின் அதனுடன் 1 டீஸ்பூன் வோட்காவும், 1/2 டீஸ்பூன் கிளிசரினும் சேர்த்து மீண்டும் ஸ்பூனால் நன்கு கலக்கவும். பின்னர் நறுமண எண்ணெய்களில் சில துளிகள் சேர்க்கவும். (சந்தையில் லெமன், சந்தனம், ரோஜா, பாதாம் என நறுமணமூட்டும் எண்ணெய்கள் கிடைக்கின்றனர்) அதில் உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொன்றை சில துளிகள் கலந்து கொள்ளவும்.

pixabay

  • அதன் பின் நிறமூட்டிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து சில துளிகள் கலந்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து மொத்தக் கலவையையும் நன்கு கலக்கவும். இந்த கலவையை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடாக்கி கைபொறுக்கும் பதமானதும் அதை உங்களுக்கு பிடித்த மோல்டுகளில் ஊற்றி அறைவெப்ப நிலையில் ஆற விடவும். ஆறிய பின் எடுத்து துண்டுகளாக்கினால் சோப்பு ரெடி!

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும் புன்னகை அரசி சினேகா : வளைகாப்பு புகைப்படங்கள்!

தயாரிப்பு முறை – 2  

ADVERTISEMENT

தேவையான பொருட்கள் : 

கிளிசரின் – 1 டீஸ்பூன்,
ரோஸ் எசன்ஷியல் ஆயில் – 6 சொட்டுகள்,
ரோஜா இதழ்கள் – 1 கப்,
தூய்மையான குங்குமம் – சிறிது

pixabay

ADVERTISEMENT

செய்முறை : 

  • ஒரு கனமான கைப்பிடி உள்ள சில்வர் பாத்திரத்தில் கிளிசரினை எடுத்து கொள்ள வேண்டும். மற்றொரு அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். 
  • அதன் மேல் கிளிசரின்  (glycerin) பாத்திரத்தை வைத்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதி வந்ததும் அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ரோஸ் எசன்ஷியல் ஆயில், குங்குமம் சேர்த்து கலந்துகொள்ளவும். இதை உடனடியாக சோப் மோல்டில் ஊற்றவும். 
  • கிளிசரின் சோப் உடனடியாக குளிர ஆரம்பித்துவிடும். எனவே  சோப் மோல்டில் ஊற்றிய சோப் குளிர தொடங்கும் முன் ரோஜா இதழ்களை மேல் புறமாக தூவுங்கள். இரண்டு மணி நேரம் சோப்பை அறை வெப்பநிலையில் வைத்து குளிரவிட்டால் சோப்பு தயார். 
  • கிளிசரின் (glycerin) சிறந்த ஈரப்பதமூட்டும் திரவமாக உள்ளது. குளிர் காலத்தில் வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் கிளிசரின் சோப்பு உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

ADVERTISEMENT
04 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT