குழந்தைகளுக்கான சத்து மாவை நீங்களே உங்கள் கைப்படத் தயாரிக்கலாம்.. ஆரோக்கியம் காப்போம் !

குழந்தைகளுக்கான சத்து மாவை நீங்களே உங்கள் கைப்படத் தயாரிக்கலாம்.. ஆரோக்கியம் காப்போம் !

எந்த தொலைக்காட்சியை திறந்தாலும் அதில் 10ல் 6 பொருள்களுக்கு மேல் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் பற்றிய விளம்பரம்தான் இருக்கிறது. இப்போதைய விளம்பர சந்தையும் பொருள்களும் குழந்தைகளை மையப்படுத்திதான் நகர்கிறது.                                            

காரணம் குழந்தைகளுக்கு அவசியமானது என்று நம் மூளையில் பதிந்து விட்டால் உடனடியாக எப்பாடு பட்டாவது அதனை நாம் வாங்கி விடுவோம். நம்மைக் காட்டிலும் நமது குழந்தை சௌக்கியமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லாத் தாய்மார்களுக்கும் உண்டு.                            

விளம்பரங்களில் கொடுக்கப்படும் சத்து மாவு (Health mix) என்பது எப்படிப்பட்ட நிலையில் அரைக்கப்பட்டது என்பதோ எப்படிப்பட்ட பயணங்களை அது மேற்கொண்டு எத்தனை நாட்கள் கழித்து நமது கைக்கு கிடைக்கிறது என்பதோ நமக்குத் திட்டவட்டமாக தெரியாது. உங்கள் அன்பின் கரங்களே உங்கள் குழந்தைக்கான சத்து மாவை தயாரித்தால் அதன் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் அல்லவா.                          

                   

Youtube

தேவையான பொருட்கள் :

தோலுடன் கூடிய உளுந்து - 1/4 கப்

தோலுடன் கூடிய பாசிப்பருப்பு - 1/4 கப்

தோல் நீக்கிய பாசிப்பருப்பு - 1/4 கப்

உடைத்த கோதுமை - 1/4 கப்

பொட்டுக்கடலை - 1/4 கப்

பார்லி - 2 டேபிள் ஸ்பூன்

கொள்ளு - 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் - 1/4 கப்

முந்திரி - 20

பிஸ்தா -20

ஏலக்காய் - 4

சிவப்பு அரிசி - 1/2 கப்

Youtube

செய்முறை

சத்து மாவு செய்வதற்கான செய்முறை மிக எளிதானது. மேற்சொன்ன அனைத்து பொருள்களையும் தனித்தனியாக கழுவி காய வைக்க வேண்டும். நல்ல வெயிலில் காய்ந்த உடன் ஒவ்வொரு பொருள்களையும் வாணலியில் தனித்தனியே மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின்னர் அனைத்து பொருள்களையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தேவைப்படும் நேரங்களில் கஞ்சியாகவோ, அல்லது நெய் ஊற்றி உருண்டை பிடித்தோ குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் ஆரோக்கியம் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் நீங்கள் இருப்பீர்கள்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                 

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!