logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிரீன் ஜூஸ்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிரீன் ஜூஸ்!

காய்களையும், பழங்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அவற்றைப் பயன்படுத்தி பிரெஷ் ஜூஸ் செய்து குடித்துவிடலாம் என்று இல்லாமல், அன்றாடம் சாப்பிடும் காய்களோடு சேர்த்து இந்த ஜூஸ் செய்து சாப்பிட்டால் உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

கடைகளில் தற்போது பிரெஷ் ஜூஸ் கிடைக்கிறது. ஆனால் அவற்றில் உள்ள சத்துகள் முழுமையாக நமக்கு கிடைக்காது. மேலும் அவை மிகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும். நாமே தயாரித்து பருகினால் காய்களில் உள்ள முழு சத்தும்  (வைட்டமின், மினெரல்ஸ், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ்) கிடைக்கும்.

பழங்களை வைத்துத்தான் இதுவரை ஜூஸ் செய்திருக்கிறோம். காய்களில் ஜூஸ் செய்தால் குறைவான சக்கரையில், உங்களுக்கு நல்ல சக்தி கிடைக்கும். வெறும் காய்களை கொண்டு ஜூஸ் செய்வது நல்ல ருசியைத் தராது. அதோடு கொஞ்சம் பழங்களையும் சேர்த்து ஜூஸ் செய்தால், நல்ல சுவையாக இருக்கும்.

கிரீன் ஜூஸ் செய்ய சில குறிப்புகள்

சுவையான கிரீன் ஜூஸ் செய்ய எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

1. அதிக நீர் சத்து உள்ள காய்கள்

செளரி, வெள்ளரி போன்ற அதிக நீர் சத்து உள்ள காய்களைத் தேர்ந்தெடுங்கள். இது உங்களை அதிக நீரோட்டமாக வைக்க உதவும்.

2. அடர்ந்த பச்சை நிற கீரைகள்

கேள்(kale), ரோமைன் போன்ற பச்சைநிற கீரைகளை தேர்வு செய்ய வேண்டும்.

Shutterstock

ADVERTISEMENT

3. பழங்கள்

ஆப்பிள், பேரிக்காய், அன்னாச்சி போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். அதிக சக்கரை இல்லாமல் இருக்க ஏதாவது ஒரு பழத்தை சேர்க்கலாம்.

4. சுவைக்காக

இஞ்சி, புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்தால் உங்கள் ட்ரிங்க் சுவையாக இருக்கும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான கிரீன் ஜூஸ் ரெசிபிகள்

காய் மற்றும் பழங்களை கொண்டு செய்யக் கூடிய ஜூஸ் பற்றி பார்க்கலாம்.

1. கேள், செளரி, ரோமைன் ஜூஸ்

வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அடங்கிய இந்த ஜூஸ் செய்ய 

ADVERTISEMENT

தேவையான பொருட்கள் :

செளரி கீரை தண்டு – 2
கேள் கீரை இலைகள் – 2
ரோமைன் ஹார்ட் இலைகள் – 2
கீரை – 1 கப்
பச்சைநிற ஆப்பிள் – 1
வெள்ளரி – ½
இஞ்சி – 1 சிறிய துண்டு

செய்முறை :

  • அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
  • ஒரு வடிகட்டி மூலம் நன்றாக வடிகட்டிக் கொள்ளுங்கள் 
  • சுவைத்துப் பாருங்கள்!

2. கேள், தக்காளி, செளரி, குதிரை முள்ளங்கி ஜூஸ்

ADVERTISEMENT

Pexels

இந்த ஜூஸில்  வைட்டமின் ஏ, சி,  மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பேட்டி அமிலம்(fatty acids)

செய்முறை :

  • கேள், தக்காளி, செளரி, ஹார்ஸ் ரேடிஸ்(horse radish) ஆகிய  நான்கு பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டி அருந்துங்கள்.
  • பழங்கள் சேர்க்காமல் ஒரு வெஜ் ட்ரிங்க்!

3. அண்ணாச்சிப் பழ க்ரீன் ட்ரிங்க்

உங்களுக்கு அன்னாசிப்பழ சுவை பிடிக்கும் என்றால் இந்த க்ரீன் ட்ரிங்க் செய்து அருந்துங்கள். பச்சை காயின் நன்மையையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

ADVERTISEMENT

தேவையான பொருட்கள் :

செளரி தண்டு – 2
வெள்ளரி – ¼ துண்டு
அண்ணாச்சிப்பழம் – 1 கப்
கேள் – 4 இலைகள்
புதினா – 6 இலைகள்

இவை  அனைத்தையும்  ஒரு ஜூஸரில் போட்டு அரைத்து, அருந்துங்கள்!

4. பீட்ரூட் – கேரட் க்ரீன் ட்ரிங்க்

ADVERTISEMENT

Pexels

கேரட், பீட்ரூட் சேர்த்த ஒரு க்ரீன் ட்ரிங்க் –  இவை இயற்கையாகவே இனிப்பு சுவை தருவதால், பழங்கள் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.

தேவையான பொருட்கள் :

வெள்ளரி – ½ துண்டு
பீட்ரூட் – ½
கேரட் – 1
கேள் – 3 இலைகள்
இஞ்சி – 1 இன்ச்

ADVERTISEMENT

இந்த பொருட்களை அழுத்தினால் சாறு வரும் ஜூஸரில் போட்டு நொடியில் குடிக்கலாம். அடுத்த நொடி உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. க்ரீன் நிறம் அல்லாத ஒரு ட்ரிங்க்

சிலருக்கு பச்சை நிறத்தை பார்த்தாலே அலர்ஜியாக நினைப்பார்கள். அவர்களுக்காக ஒரு மாறுதலான ஜூஸ்.

இதிலிருக்கும் சத்துக்கள் : வைட்டமின் ஏ, பொட்டாசியம், போலிக் அமிலம்

தேவையான பொருட்கள் :

ADVERTISEMENT

கேரட் – 1
ஆரஞ்சு – 1
இஞ்சி – 1 இன்ச்
மஞ்சள்தூள் – சிறிது
எலுமிச்சை சாறு – சிறிது

செய்முறை :

  • கேரட், கொட்டை இல்லாத ஆரஞ்சு சுளைகள், இஞ்சி தோள் நீக்கியது ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, வடித்துக் கொள்ளுங்கள்.
  • இதில் சிறிது மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், சூப்பரான ஜூஸ் ரெடி! காலையில் காபிக்கு பதிலாக இதை அருந்துங்கள். சத்தான பானம் இது.

6. கிவி, ஸ்ட்ராபெர்ரி, புதினா ஜூஸ்

Shutterstock

ADVERTISEMENT

ஸ்ட்ராபெர்ரி, கிவி, புதினா ஆகியவற்றை அரைத்து, வடித்துப் பருகினால், ஸ்ட்ராபெர்ரி க்ரீன் ட்ரிங்க்.

இதிலிருக்கும் சத்துக்கள் : வைட்டமின் ஏ, சி, பி-6, மெக்னீசியம், ஜிங்க், ஃபோலேட்

நீங்கள் பயன்படுத்தும் காய்களும், பழங்களும் ஆர்கானிக்காகவும், சுத்தமானதாகவும் இருப்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்யுங்கள். 

பலவகையான க்ரீன் ட்ரிங்க் (green drink/juice recipe) பற்றி தெரிந்து கொண்டோம். இவற்றில் உங்களுக்கு தகுந்த சுவைகளில் சில பொருட்களை மாற்றி, சேர்த்து, நீக்கி ஜூஸ் தயாரித்து முயற்சி செய்யுங்களேன். உங்கள் உடலுக்கு சத்து கிடைக்கும், வித்தியாசமான ஒன்றை (ரெசிபி) செய்த திருப்தியும் கிடைக்கும் அல்லவா!

ADVERTISEMENT

 

மேலும் படிக்க – வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் சுவையான ரெசிபிகள்! மேலும் படிக்க – பல நன்மைகளைத் தரும் துளசி – உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்கள்!

பட ஆதாரம்  – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

30 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT