ஊர் உலகத்துக்கே பிடித்த தொகுப்பாளினி யார் என்றால் அது டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். கடகட எனும் ரயில் பேச்சாலும் காமெடியாலும் மற்றும் மிக முக்கியமாக அழகாலும் அனைவரையும் கவர்ந்தவர் டிடி (dd) என்கிற திவ்யதர்ஷினி.
வயதுக்கேற்ற முதிர்ச்சி இவரது முகத்தில் இப்போது வரை தெரியாததால் அதுவே இவருக்கு ஆசீர்வாதமாக போனது. அதனால் இப்போதும் டீன்களின் ராணியாக இருக்கிறார். திடீரென ஒரு நாள் டிடியின் (dd) திருமணம் நடந்த போது டிடி ரசிகர்கள் மிகவும் துடித்து போனார்கள்.
அப்படிப்பட்ட டிடியுடன் வாழப் பிடிக்காமல் விலகினார் அவரது கணவர் ஸ்ரீகாந்த். நீண்ட மௌனத்திற்கு பிறகு அதற்கான காரணத்தை அறிவித்திருக்கிறார் அவரது கணவர் ஸ்ரீகாந்த்
நீங்கள் காதலிப்பவர் உங்களை ஏமாற்றி விடுவாரா ! அவரின் இந்த குணங்களை சரிபாருங்கள்!
தன்னுடைய பால்ய நண்பனான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதல் மணம் புரிந்தார் டிடி (dd) . ஆனால் என்ன ஆனதோ ஏதானதோ என தெரியவில்லை திருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்திற்காக காதல் தம்பதிகள் இருவரும் நீதி மன்றத்தை நாடினர்.
இணைந்த மனதோடு கேட்டதால் விவாகரத்தும் கிடைத்து விட டிடி மீண்டும் சிங்கிள் ஆனார். அதன் பின்னர் சில காலம் நிகழ்ச்சி தொகுப்பிற்கு வராமல் இருந்த டிடி மீண்டும் தலை காட்ட தொடங்கினார். கூடவே சில சினிமாக்களிலும் அவரைப் பார்க்க முடிந்தது.
பிரிந்த பின்னும் சேர்ந்தே இருக்கிறோம்.. தனிமை மற்றும் கணவர் பற்றி நடிகை சுலக்க்ஷணா !
இந்நிலையில்தான் தங்களுடைய காதல் திருமணம் ஏன் விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்தது என்பது பற்றி முதல் முதலாக உண்மையை உடைத்து பேசியிருக்கிறார் டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த். தொகுப்பாளினி டிடிக்கு லேட் நைட் பார்ட்டிகள் என்றால் மிகவும் விருப்பமாக கலந்து கொள்வாராம். கூடவே ஆண் நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் ஸ்ரீகாந்திற்கு இது பிடிக்காமல் போயிருக்கிறது.
டிவி நிகழ்ச்சி தொகுப்பதால் தான் இவ்வளவும் என்பதால் அதனையும் ஸ்ரீகாந்த் வெறுத்திருக்கிறார். டிடியின் இந்த குணங்கள் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராது என முடிவு செய்த பின்னர் இருவரும் பேசி புரிந்து கொண்டு விவாகரத்து செய்து கொண்டதாக கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.
சில நேரங்களில் சில மனிதர்கள்..
ஓ! பெண்களிடம் உள்ள இந்த விஷயம் ஆண்களுக்கு பிடிக்காதா?!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!