80களின் நாயகிகளில் முக்கியமான நடிகையாகவும் பரபரப்பான நடிகையாகவும் இருந்தவர் நடிகை சுலக்க்ஷணா (sulakshna). இவரது துறுதுறுப்பான நடிப்புக்கு பல லட்சம் ரசிகர்கள் இருந்தனர். 6 மொழிகளில் நடித்திருக்கும் சுலக்க்ஷணா கிட்டத்தட்ட 2000 திரைப்படங்கள் வரை நடித்து முடித்திருக்கிறார்.
நடிகை சுலக்க்ஷணாவிற்கு ஆந்திரா சொந்த மாநிலம். இவரது தாத்தா பத்திரிகையில் வேலை செய்ததால் நேர்காணல்களுக்கு சுலக்க்ஷணாவையும் அழைத்து செல்வாராம். அப்படிதான் திரையுலக அறிமுகம் சுலக்க்ஷணாவிற்கு கிடைத்திருக்கிறது.
இயக்குனர் கே பாலச்சந்தரின் காவியத்தலைவி திரைப்படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சவுகார் ஜானகி ஜோடிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு அப்படிதான் வந்திருக்கிறது. அதுதான் அவரது முதல் திரையுலக அனுபவம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுலக்க்ஷணா (sulakshana) பல மொழிகளில் நடித்திருக்கிறார். அவரது உண்மையான பெயர் ஸ்ரீதேவி. அந்தப் பெயரில் இன்னொரு நடிகை பிரபலமாக இருந்ததால் சுலக்க்ஷணா என்று பெயர் மாற்றி வைத்தவர் இயக்குனர் கே எஸ் விஸ்வநாத்.
அவர் இயக்கி சுலக்க்ஷணா நடித்த சுபோதயம் திரைப்படம் ஹிட் ஆனது. அதன் பின்னர் கன்னடத்தில் ராஜ்குமாருடன் நடித்த திரைப்படம் ஹிட் ஆனது. அதன் பின்னரே தமிழில் தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் நடித்தார். அதுவும் சூப்பர் ஹிட் ஆனது.
அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அடுத்த ஆண்டில் 12 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சுலக்க்ஷணா. நல்ல ஹீரோயின் எனப் பெயரும் புகழும் உச்சத்தில் இருக்கும்போதே 18 வயதில் சுலக்க்ஷணாவிற்கு திருமணம் நடந்திருக்கிறது.
இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் மகனை திருமணம் செய்திருக்கிறார் சுலக்க்ஷணா. கோபி கிருஷ்ணன் இவரது கணவர் பெயர். திருமணத்திற்கு பின்னர்தான் அதிகமான பட வாய்ப்புகள் வந்தன. குழந்தை நட்சத்திர படங்களை விலக்கி இவர் நாயகியாக நடித்த படங்கள் 200 இருக்கும் என்கிறார் சுலக்க்ஷணா.
கருத்து வேறுபாடு காரணமாகவே சுலக்க்ஷணா தன்னுடைய திருமண பந்தத்தை முறித்துக் கொண்டார். அதன் பின் குழந்தைகளுடன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை போராட்டமாகவே இருந்தது எனும் சுலக்க்ஷணா ஒன்பது ஆண்டுகள் குழந்தை வளர்ப்பிற்காக நடிக்காமல் இருந்திருக்கிறார்.
எந்த வித வருத்தமும் இல்லாமல் விரோதமும் இல்லாமல் விவாகரத்து நடந்தது. அதனால் இப்போது வரை நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம் என்று நம்பிக்கையாக பேசுகிறார் சுலக்க்ஷணா.
இப்போது நடிப்பு மற்றும் சினிமா விருதுக்குழு உறுப்பினர் என பிசியாக இருக்கும் நடிகை சுலக்க்ஷணாவிற்கு ஆறு மொழிகளில் எழுத மற்றும் படிக்கத் தெரியுமாம். எதை பற்றியும் அதிகம் யோசிக்காமல் இருப்பது சுலக்க்ஷணாவின் தனிக்குணம். அதனால் அவரது வளர்ச்சி புகழ் ஆகியவை குறைந்தது ஆனாலும் அதற்காக வருந்தவில்லை இப்படியே இருக்க விரும்புகிறேன் இதுவே எனக்கு மனநிறைவான இருக்கிறது என்கிறார் சுலக்க்ஷணா.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!