தசரா பண்டிகை: தசராவைப் பற்றிய 21 சுவாரசியமான அறியப்படாத விஷயங்கள் !

தசரா பண்டிகை: தசராவைப் பற்றிய 21 சுவாரசியமான அறியப்படாத  விஷயங்கள் !

தசரா நிச்சயம் ஒரு அதிசயமாகக் கொண்டாடக்கூடிய கண்கவர் பண்டிகையாகும். இந்தியா முழுவதும், தீய சக்தியை அழித்த நல்ல சக்தியைக் கொண்டாடும் விதமாக அமைந்த இந்தப் பண்டிகை தசரா அல்லது விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது.  தசராவின் (dusshera/dussera festival)அறியாத பல விஷயங்களைப் பற்றி காணலாம்.

1. தச மற்றும் ஹாரா என்ற சம்ஸ்கிருத பெயரின் சேர்க்கைதான் தசரா.

2. அன்று இந்நாளில், ராமன் ராவணனை வதம் செய்யவில்லை என்றால் சூரியன் உதித்திருக்காது என்று கூறப்படுகிறது.

3. மேலும், காமம், க்ரோதம், ஈர்ப்பு, பொறாமை, பேராசை, பெருமை, சுயநலம், அநீதி, கொடுமை மற்றும் அகங்காரம் ஆகிய பத்து தீய பண்புகளை இராவணனின் பத்து தலைகள் குறிப்பதாகவும், அவற்றைக் அழிப்பதே தசரா என்றும் கூறப்படுகிறது.

4. பத்திரகாளி, ஜகதாம்பா, அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, சண்டிகா, லலிதா, பவானி, மூகாம்பிகை ஆகிய ஒன்பது அவதாரங்களை கொண்டவள் துர்கா தேவி. பத்தாம் நாள் போரில், மஹிசாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்த துர்காதேவியை கொண்டாடும் விதமாக விஜயதசமி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. 

5. ராமன் ராவணனை கொள்வதற்கு முன், சண்டி ஹோம யாகம் செய்து துர்காதேவியின் ஆசி பெற்றார். துர்கா தேவியும் ராமருக்கு ஒரு வரம் கொடுத்து, ராவணனை கொள்ள அறிவுரையும் கூறியிருக்கிறார்.

Pixabay

6. மத்தியபிரதேசத்தில், சிவனை  வணங்கியதாலும், மண்டோதரியின்  கணவர் என்பதாலும், இராவணனை பூஜை செய்கிறார்கள். இராவணனுக்கு தனி கோவிலே கட்டி உள்ளார்கள். ஸ்ரீலங்காவில், இராவணன் எழுதிய ஆயுர்வேத புத்தகம் இன்றளவும் பிரபலம் ஆகும்.

7. தசரா அன்று கொல்கத்தாவில், துர்கா தேவியின் மிகப்பெரிய உருவச் சிலையை பூஜித்து பின் ஆற்றில் விடுவார்கள்.

8. தெற்கில், தசரா அன்று கொலு முடிவடைகிறது. வட இந்தியாவில், பார்லி விதைகளை நவராத்திரி முதல் நாள் மண் பானையில் வளர்ப்பது ஐதீகம்.

9. முதன் முதலில், மைசூர் ராஜா 17ம் நூற்றாண்டில் தசரா கொண்டாட உத்தரவிட்டார், மேலும், மஹிசாசுர அரக்கனின் பெயராலேயே மைசூர் என்ற பெயர் வந்தது.  

10. 750 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட துர்கா தேவியின் சிலைதான், மைசூர் தசராவின் முக்கியமான வசீகரிக்கும் அம்சம் ஆகும். 

Instagram

11. இந்த ஆண்டு(2019), 409ம் முறையாக மைசூரில் தசரா கொண்டாடப்படுகிறது.

12. இந்தியா மட்டுமல்ல நேபாளம் மற்றும் வங்காள தேசத்திலும் தசரா கொண்டாடப்படுகிறது. தசராவை நேபாளத்தில் தஷைன் என்று கூறுவர்.

13. தசராவிற்கு மலேசியாவில் தேசிய விடுமுறை அளிக்கப்படுகிறது.

14. சுடும் வெய்யில் குறைந்து, ரம்யமான குளிர்காலமாக மாரும் பருவ மாற்றத்தைக் குறிக்கிறது இந்தப் பண்டிகை. 

15.சம்பா(kharif) சாகுபடி முடிந்து அறுவடை செய்யும் காலமாகவும் கொண்டாடுகிறார்கள். தீபாவளி முடிந்து குறுவை(rabi) சாகுபடி செய்வார்கள்.

 

Instagram

16. இந்த தினத்தின் ஒரு நம்பிக்கை என்னவென்றால், அசோக சக்கரவர்த்தி புத்த மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

17. மேலும், டாக்டர். அம்பேத்கர் அவர்களும் இந்த நாளிலேயே புத்த மதத்திற்கு மாறியதாக கருதப்படுகிறது.

18. பன்னிரண்டு வருடங்கள் வனவாசம் முடித்து பாண்டவர்கள் நாடு திரும்பிய நாளாக இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். வன்னி மரத்தில் வைத்திருந்த ஆயுதங்களை சுத்தம் செய்து, மரத்துடன் சேர்த்து விஜயதசமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. 

19. ‘எழுத்திநிருது’ வித்யாரம்பம் என்று இந்நாளைக் குறிப்பிடுவர். மூன்று முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளை ‘ஓம் ஸ்ரீ கணபதியே நமஹ’ என்னும் எழுத்துக்களை அரிசியில் எழுத வைப்பார்கள்.

20. தசரா அன்று வாரணாசி அருகில் ராம்நகரில், காசியின் அரசன் துவங்கிய ராம்லீலா நாடகம் டெல்லியைப் போன்றே அரங்கேறும்.

Pixabay

21. சண்டிகர் அருகில் இருக்கும் அம்பாலாவில் 200 அடிக்கும் அதிகமான உயரத்தில் வருடா வருடம் இராவணனின் உருவச் சிலையை உருவாக்கி எரிப்பர். பரர இராவணா என்று அழைக்கப்படும் இந்த சிலை உலகிலேயே உயரமான கொடும்பாவியாகும்.

22. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில், துர்கா தேவியை தங்கள் மகளாக பாவித்து, பத்தாம் நாள் தங்கள் வீட்டிற்கு வந்த தேவிக்கு மாமிசம் சமைத்து விருந்து படைப்பார்கள். தங்கள் பெண் இல்லத்திற்கு வரும்போது விரதம் இருக்கக் கூடாது, விருந்து படைக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து!

இப்படி பல விதங்களில், இந்தப் பண்டிகையை, விடிய விடிய ராமர் லீலைகளாக நாடகம் போட்டு வட இந்தியாவிலும், பத்து நாட்கள் முடிந்த பின் குழு என்று ஹிமாச்சல பிரதேஷத்திலும், கர்பா என்று குஜராத்திலும், கொலுவாக நம்ம ஊரிலும் கொண்டாடுகிறோம். மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் இந்த இந்திய திருவிழாவை பற்றிய சில சுவாரசியமான  தகவல்களை  நீங்கள் அறிந்தீர்கள் என்று நம்புகிறோம்! 

 

மேலும் படிக்க - கல்வி மற்றும் தொழில் சிறக்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை: பூஜைகள் செய்ய ஏற்ற நேரங்கள்!

பட ஆதாரம்  -Instagram, pixabay, pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!