ராசியின் ரகசியங்கள் : உங்கள் ராசியைப் பற்றி மக்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் !

 ராசியின் ரகசியங்கள் : உங்கள் ராசியைப் பற்றி மக்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் !

ஒவ்வொரு இராசியின் அடையாளத்தின்படி அவர்களுக்கு குறிப்பிட்ட பண்பும் சில தனித்துவமிக்க திறமைகளும் இருக்கும்.  மேலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அந்தந்த ராசிகாரர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள், அவர்களின் வலிமை எது, பலவீனம் எது என்பதை அறிவதில் எப்போதுமே ஒரு சுவாரசியமும் ஆர்வமும் நமக்குள் இருக்கும். எனவே இங்கே நாம் ஒவ்வொரு ராசியின் (zodiac signs) குணாதிசயங்களை கொண்டு மற்றவர்களால் அறியப் படாமல் இருக்கும் சில ரகசிய பண்புகளை தொகுத்துள்ளோம். இப்போதே சரி பாருங்கள்! 

1. மேஷம்

12 ராசிகளில் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாகவும் மற்றவர்களை ஆளும் திறன் கொண்டவர்கள். ஆனால் தங்களுக்கான மன அழுத்தத்தின் காரணமாக அவர்கள் நிறைய சந்தேகங்களும் பாதுகாப்பற்ற தன்மைக்கும் வழி வகுப்பார்கள்.

2. ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் அழகான தோற்றத்தில் இருப்பதினால் அவர்கள் நிச்சயம் உங்கள் இதயத்தை வென்று விடுவார்கள். இருப்பினும் உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை மற்றும் அறியாதவற்றை நினைத்து அஞ்சுவார்கள்!

3. மிதுனம்

ஒரு மிதுன  ராசி காரரை புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும் ஆனால் அவர்களோ மற்றவர்களிடமிருந்து விரும்புவதெல்லாம் அன்பு, அரவணைப்பு மற்றும் விசுவாசம் மட்டுமே! இவர்கள் எப்போதும் தனது மகிழ்ச்சியான முகத்தை காட்ட முனைவதால் அவர்கள் எப்போது எவ்வளவு சோர்வாகவும் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் மற்றவர்களால் கண்டுபிடிக்க இயலாது.

4. கடகம்

கடக ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்ப்புகளுடன் இருப்பதால் இறுதியில் இவர்கள் மனக் கசப்புடன் ஏமாற்றங்களை அடைவார்கள். ஆளுமையில் அமைதியாக இருக்கும்  இவர்கள் எத்தகைய கடினமான பொய்யாக இருந்தாலும் அதை கண்டுபிடிப்பார்கள்.

இருப்பினும் இவர்கள் மக்களை நம்புவதில் சிரமப் படுவார்கள் என்பதே  மற்றவர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும்! 

5. சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சாதாரணமான நிலையில் இருந்து எப்போதும் தனித்துவமாகவும்   மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவும் இருப்பதையே விரும்புவார்கள். ஆனால் அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால்  மற்றவர்களுக்கு அவர்கள் எப்பொழுதும் தேவை என்று நினைக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.

6. கன்னி

உங்களின் அன்பார்ந்த அவர் ஒரு கன்னி ராசி காரரா?  அவர்கள் எவ்வளவு கூலான குணம் கொண்டவர்கள், நம்பகமானவர்கள்,புத்திசாலி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் உங்கள் அன்பார்ந்தவர் முத்தமிடுவதில் எவ்வளவு சிறப்பானவர் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் நினைப்பதை அப்படியே சொல்லும் குணம் கொண்டவர்கள். இத்தகைய குணம் கொண்ட கன்னி ராசியை பற்றி நீங்கள் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் ரகசியமாக விரும்புவது அவர்களின் செயல்களுக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் தான்.  

7. துலாம்

மற்றவர்களை சிரிக்க வைக்க விரும்பும் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் கேலி கூடியவர்களாக இருப்பார்கள் . அவர்கள் தனக்கென்று ஒருவரை கண்டுபிடிக்கும் வரை தனிமையில் இருப்பதை விரும்புவார்கள் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும் இருப்பினும் பிறருக்கு தெரியாத விஷயம் - இவர்களிடம் உதவி என்று  கேட்பவர்களை மறுத்து முடியாது என்று கூற இவர்களுக்கு கடினமாகும்.

8. விருச்சிக ராசி

கிண்டலும் கேலியும் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் (horoscope) இயல்பாகவே ஒரு அழகான மனம் கொண்டவர்கள். மற்றவர்களின் உண்மையான நோக்கங்களை படிப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கும் இவர்கள் உண்மையில் தோல்விக்கு அஞ்சுவார்கள்.

9. மகரம்

மகர ராசியில் இருப்பவர்கள் தன்னிடம் இருக்கும் பொருட்களையும் அன்பையும் மற்றவர்களிடம் அதிகம் பகிர்ந்துகொள்வார்கள். மற்றவர்களை அதிகமாக நம்புவார்கள் ஆனால் இவர்களை பற்றி அறியாதது என்னவென்றால் இவர்கள் தொடர்ந்து தங்கள் சுய மதிப்பை சந்தேகித்து கொண்டே இருப்பார்கள். இதை இவர்கள் நிச்சயம் மாற்றிக்கொள்ளவேண்டும்.

10. தனுசு

எதிலும் துணிச்சலும் தைரியமும் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் தான் யாருடன் வெளியே செல்ல வேண்டும், தன்னுடைய நண்பர்கள்,  தன்னுடைய உடை, என்று அனைத்தையும் கவனமாக தீர்மானிக்கும் நபர் ஆவர். இருப்பினும் இவர்களைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் மற்றவர்களின் சுயநல செயல்களால் இவர்கள் எளிதில் காயமடைகின்றனர்.

11. கும்பம்

இசையை அதிகம் நேசிக்கும் கும்ப ராசிக்காரர்கள் யாரேனும் ஏதேனும் பொய் பேசினால் அதை எளிதில் கண்டு பிடிப்பார்கள். இவர்கள் நம்பகமானவர்கள், கிண்டலும் கேலியுமாக பேசும் திறன் கொண்டவர்கள். மேலும் இவர்கள் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்கள். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து குணங்களின் கலவையையும் இருப்பது சுவாரசியமானது என்றாலும் கும்ப ராசிக்காரர்கள் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் மக்கள் தன்னை உண்மையாகவே நேசிக்கிறார்கள் மற்றும் அவரை அவராகவே ஒப்புக் கொள்கிறார்களா என்று இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஒரு சந்தேகத்துடனே இருப்பார்கள்!

12. மீனம்

மீன ராசிக்காரர்களுடன் நீங்கள் பழகியது உண்டா? அவர்கள் இசையை எவ்வளவு காதலிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அவர்கள் எப்போதுமே ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு தீர்ப்பதை விட அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள் என்பதுதான் இவர்களின் ரகசிய குணாதிசயம்.

 

மேலும் படிக்க - 'காதலில்' துளியும் ஒத்துப்போகாத ராசிகள்.. 'உங்க' ராசியும் இதில் இருக்கிறதா?!

பட ஆதாரம் - Pexels, Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.