மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்... உண்மையாக நடந்தது என்ன? வனிதா விளக்கம்!

மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்... உண்மையாக நடந்தது என்ன? வனிதா விளக்கம்!

பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சில வாரங்களுக்கு முன்பு போட்டியாளர் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததால் விதியை மீறியதாக அவர் வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த சம்பவங்கள் எதுவும் ஒளிபரப்படவில்லை. இதனை தொடர்ந்து வெளியே வந்த மதுமிதா செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். 

அப்போது நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் அவரவர் கருத்துக்களை ஒரு வாக்கிய கவிதையாக எழுதுமாறு கூறினர். அந்த கவிதையில் 'வருண பகவானும் கர்நாடகத்தை சேர்ந்தவரா? மழை வடிவில் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்' என்ற வரியை நான் எழுதினேன்.

twitter

இந்த கவிதை வீட்டில் இருப்பவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அரசியில் பேசக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மதுமிதாவை மேலும் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தால் விரக்தியடைந்து கத்தியால் தன் கையை அறுத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் துன்புறுத்தி வெளியேற்றினர் : மதுமிதா புகார்!

மேலும் அப்போது கூட கஸ்தூரி மற்றும் சேரனை தவிர வேறு யாரும் அவருக்கு உதவவில்லை என்று அவர் கூறியிருந்தார். இது குறித்து கஸ்தூரி அளித்த பேட்டி ஒன்றில்,  மதுமிதா தற்கொலை விஷயத்தில் ஷெரின், வனிதா, லாஸ்லியா தான் சம்பந்தபட்டவர்கள் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் முதல்முறையாக மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து வனிதா (vanitha) ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

அதில் மதுமிதா இன்று இந்த விளையாட்டில் இருந்திருந்தால் என்னுடைய முழு ஆதரவு அவருக்கு தான் இருக்கும். மதுமிதா ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர். அவர் பிரச்னைகளை பார்த்த விதம், நான் பார்த்த விதத்தில் இருந்து மாறுபட்டிருக்கும். ஆனால் அவரது முடிவுகளை யாருக்காகவும் அவர் மாற்றிக்கொள்ளவில்லை. 

twitter

மதுமிதா தற்கொலை செய்து கொண்ட விஷயத்தில் அவர் மீது தான் தவறு உள்ளது. இதில் மற்றவர்களை குறை கூறுவது முட்டாள் தனமான ஒன்று. மதுமிதா மக்களின் அனுதாபவதிற்காக தான் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அதன் பின்னர் மீண்டும் நிகழ்சிக்குள் வருவார் என எதிர்பார்த்தார். ஆனால் விதிமீறல் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார் என வனிதா தகவல் அளித்துள்ளார். 

மேலும் ஷெரின் தான் மதுமிதா தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில் அதற்கு வனிதா மறுப்பு தெரிவித்துள்ளார். நான் ஏன் மதுமிதாவை ஆதரிக்கவில்லை என பலர் கேள்வி எழுப்புகின்றனர். மதுமிதா தற்கொலை செய்ததை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன். வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது சகஜமான ஒன்று தான். எத்தனையோ பெண்கள் தைரியமாக போராடி வருகின்றனர்.

மதுமிதா செய்தது மற்றவர்களுக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டு. ஒன்றுமே இல்லாத ஒரு பிரச்சனைக்கு மதுமிதா இப்படி செய்தது தவறானது. நான் இந்த பிரச்சனையில் பங்கேற்றிருந்தால் அவரை பளார் என முதலில் அறைந்திருப்பேன். அது தான் என்னுடைய இயற்கை. இந்த விஷயத்தில் லாஸ்லியாவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக வனிதா (vanitha) கூறியுள்ளார்.

twitter

மேலும் லாஸ்லியா வாழ்க்கையில் ஏற்கனவே அவரது தங்கை தற்கொலை செய்து இறந்த சம்பவத்தை நினைவு கூறவைத்துவிட்டது. இதனால் லாஸ்லியா மிகவும் மன வேதனை அடைந்தார். லாஸ்லியா நேர்மையானவர், அவரை நான் எனது சகோதரியாக தான் பார்க்கிறேன். லாஸ்லியா பல இடங்களில் சேரனுக்காக குரல் கொடுத்துள்ளார். நான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது மதுமிதாவின் பங்கேற்பை பாராட்டினேன். 

லாஸ்லியாவை சந்திரமுகி என விமர்சித்த வனிதாவால் வாங்குவாதம் : அறிவுரை வழங்கிய பிக்பாஸ்!

சரியோ? தவறோ? அவர் கருத்தில் உறுதியாக இருப்பார் அதனை நான் விரும்பினேன். இதனால் அவரை நான் ஆதரித்தேன். மதுமிதாவிடம் வனிதா இருக்கும் போது தான் நீங்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள் என லாஸ்லியா வாக்குவாதம் செய்தார். அப்போது லாஸ்லியாவின் கேள்விகளில் நியாயம் இருந்தது. அதனால் தான் நான் அப்போது அவரை எதிர்த்து பேசவில்லை.

twitter

லாஸ்லியாவிடம் நிறைய நல்ல குணங்களை நான் பார்த்திருக்கேன். மதுமிதா விஷயத்தில் லாஸ்லியா மீது எந்த தவறும் இல்லை. மதுமிதாவை நாங்கள் யாரும் கொடுமை பண்ணவில்லை, அவரே தான் பிரச்னை ஏற்படும் போது மிகவும் கோவமாக கத்துவார், அழுவார். அதில் மற்றவர்களுக்கு மீது தவறு இல்லை. யாரும் கத்தியை எடுத்து மதுமிதாவை குத்தவில்லை, அவரே தான் கையை அறுத்துக் கொண்டார். 

மற்றவர்கள் மீது பழிபோட மதுமிதா குழந்தை அல்ல, தற்கொலை முயற்சி செய்தது அவரது தனிப்பட்ட முட்டாள் தனமான முடிவு மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதியை மீர மாட்டேன் என கையெழுத்து போட்டுவிட்டு தான் நிகழ்ச்சிக்கு வந்தார். நிகழ்ச்சியில் அவரது தனிப்பட்ட தற்கொலை முயற்சிக்கும் சக போட்டியாளர்களுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முக்கிய காரணம் இது தான் ... தர்ஷனின் முதல் பதிவு!

மற்ற போட்டியாளர்கள் மீது மனித உரிமை மீறல் என புகார் கொடுப்பதால் எவ்வித பலனும் இல்லை. அரசியல் பிரச்சனைகள் குறித்து பேச நாங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வில்லை. மதுமிதா நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து பேச ஆசைப்பட்டால் அரசியலில் சேரலாம். ஏராளமான அரசியல் காட்சிகள் இருக்கின்றன.

twitter

அவற்றில் சேர்ந்து மேடையில் அதுகுறித்து பேசலாம். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் அவர் பேச வேண்டிய அவசியம் இல்லை. மதுமிதா தற்கொலை செய்த அன்று இரவு யாரும் தூக்கவில்லை. மதுமிதா சாகும் எண்ணத்தில் தற்கொலை முயற்சி செய்யவில்லை, அது தேவையும் இல்லை. அதனை செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சி சரியான இடமும் அல்ல. 

தற்கொலை செய்ய முயற்சித்ததால் மதுமிதா மேலும் நிகழ்ச்சியில் தொடர தகுதியற்றவரவரானார் என வனிதா (vanitha) விளக்கம் அளித்துள்ளார். மேலும் தர்ஷன் உடனான பிரச்னை குறித்து பேசிய வனிதா, தர்ஷன் மீது எனக்கு எந்த கோவமும் இல்லை, அவரை நான் வெறுக்கவும் இல்லை. அவர் என் சகோதரன் போல தான் நினைக்கிறேன் என கூறினார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!