லாஸ்லியாவை சந்திரமுகி என விமர்சித்த வனிதாவால் வாங்குவாதம் : அறிவுரை வழங்கிய பிக்பாஸ்!

லாஸ்லியாவை சந்திரமுகி என விமர்சித்த வனிதாவால் வாங்குவாதம் : அறிவுரை வழங்கிய பிக்பாஸ்!

பிக் பாஸ் வீட்டில் வனிதாவின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாரம் ஓபன் நாமினேஷனின் போது கவினையும், சாண்டியையும் வம்புக்கு இழுத்தார். இதனால் கவின் - வனிதா இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது எலிமினேஷனில் மக்களால் வெளியேற்றப்பட்டு மீண்டும் போட்டியாளராக வனிதா உள்ளே வந்திருப்பதாக கவின் கூறினார். இது கவினின் கருத்து மட்டுமல்லாது ஒட்டுமொத்த பிக் பாஸ் போர்வையாளர்களின் கேள்வியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவின் கேள்வியால் கோபமடைந்த வனிதா, தன்னுடைய மைக்கை கழற்றி வைத்துவிட்டு பிக்பாஸ் பதில் அளித்தால் தான் போட்டியில் தொடர்வேன் என கூறினார். வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்ததற்கு பிக் பாஸ் தானே காரணம், ஆதலால் அவர் சொல்லட்டும் என்று சேரன், வனிதாவிற்கு ஆதரவாக பேசினார். பிக் பாஸ் வீடு கவின் பிரச்னையால் தர்ஷன், சாண்டி, லாஸ்லியா, முகென் என்று ஒரு அணியாகவும், ஷெரின், சேரன் மற்றும் வனிதா ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்துள்ளனர். 

twitter

இந்நிலையில் வனிதாவை தனியாக அழைத்து பேசினார் பிக் பாஸ். எனக்கு பணம் முக்கியமில்லை. அதை விட பெரிய சொத்து வெளியே இருக்கு. மக்களின் ஆதரவு இருப்பதால் தான் திரும்பவும் நான் வந்திருக்கேன். மக்கள் தான் கேட்டாங்க என்னை உள்ளே அனுப்பச் சொல்லி என கூறினார் வனிதா. அதற்கு பதில் அளித்த பிக்பாஸ் இது போட்டி, அனைத்தையும் மக்கள் பார்க்கிறார்கள். மக்கள் முடிவு செய்வார்கள் என வனிதாவிற்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். 

இதனை தொடர்ந்து ஷெரின் தன்னை நாமினேட் செய்ததற்கான காரணத்தை கவினிடம் கேட்டறிந்தார். மேலும் என்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது, நான் எப்படி கஷ்டப்பட்டேன் என்று இங்கே இருக்கும் போட்டியாளர்களிடம் நான் கூறினேன் என்றால், எல்லோருமே அழ ஆரம்பித்துவிடுவீர்கள். இங்கே வந்த இந்த 4 பேர் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும் என்று ஷெரின் கேள்வி எழுப்பினார். அப்போது அவர்களுடன் சாண்டி இருந்தார். 

twitter

இந்த வாரத்திற்கான லக்‌ஷூரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்கில் தலையணை தொழிற்சாலையில், லாஸ்லியா, கவின், சாண்டி மற்றும் முகென் ஆகியோர் ஒரு அணியாகவும், சேரன், வனிதா, தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்து தலையணை செய்ய வேண்டும். இதில் வனிதா மற்றும் லோஸ்லியா இருவரும் குவாலிட்டி செக்கிங் ஆபிஷராக பணியாற்றிமாறு பிக் பாஸ் கூறினார்.

வனிதா அணியில் 7 தலையணைகள் தேர்வு செய்யப்பட்டதாகவும், 14 தேர்வு செய்யப்படாததாகவும் தெரிவிக்கப்பட்டது. கவின் அணியில் 3 தலையணைகள் தேர்வு செய்யப்பட்டதாகவும், 4 தேர்வு செய்யப்படாததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வனிதா அணியில் தேர்வு செய்யப்படாத தலையணை குறித்து கவின், தர்ஷன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதில் குறுக்கிட்ட வனிதா அசிஸ்டண்ட் குவாலிட்டி செக்கிங் என்று குறிப்பிட்டு பேசினார். 

twitter

இதனால் கோபமடைந்த கவின், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கவினைப் பற்றியும், தனது செக்கிங் குறித்தும் பேசிய வனிதாவிடம்,லாஸ்லியா (losliya) வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் லாஸ்லியாவை பார்த்து சந்திரமுகி புகுந்திடுச்சு என கலாய்த்தார் வனிதா. இதனால் ஆத்திரமடைந்த லாஸ்லியா, பதிலுக்கு வனிதாவிடம் எகிறினார். அப்போது எல்லாத்தையும் வெளில இருந்து பார்த்துட்டு தான் வந்திருக்கேன்.

நீ என்னைப் பத்தி என்னவெல்லாம் பேசினனு எனக்குத் தெரியும் என வனிதா கூறினார்.  அதற்கு நான் என்ன அப்டி உங்கள பத்தி கதைச்சேன் சொல்லுங்க? என எதிர்கேள்வி கேட்டார் லாஸ்லியா. இதனால் அதிர்ச்சியடைந்த வனிதா,  நீயும் வெளில போய் பார்த்துக்க என மழுப்பலாக பதிலளித்தார். அதற்கு, எதுக்கு வெளில போய் பார்க்கணும், நான் உங்க முன்னாடி இங்க தானே இருக்கேன். இப்போ என்கிட்ட நேராவே கேளுங்களேன். 

twitter

உங்களவிட இங்க வேற யாரும் எதுவும் பேசிடலை என பதிலடி கொடுத்தார் லாஸ்லியா. லாஸ்லியா இப்படி வனிதாவை எதிர்த்துப் பேசுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே நடைபெற்ற பிரச்சனை ஒன்றில் வனிதாவை எதிர்த்து லாஸ்லியா (losliya) கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் லாஸ்லியாவிடம், அபிராமி பேசிக்கொண்டிருந்தார். உனக்கு நான் தான் உதாரணம். இந்த ஒரு வாய்ப்பை இழந்துவிட்டு தற்போது இங்கு வந்திருக்கிறோம். 

உன்னைவிட எனக்கு சென்டிமெண்ட் அதிகம். ஆகையால் நீ போட்டியில் மட்டும் ஆர்வம் காட்டி, பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என்று லாஸ்லியாவிற்கு (losliya) அறிவுரை வழங்கினார். இறுதியில் ஷெரின், சாக்‌ஷி, அபிராமி 3 பேரும் பாடல் பாடி அசத்தினர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் இவர்கள் மூவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், சாண்டி, அபிராமியிடம் நீ மட்டும் தான் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எப்படி போனாயோ அப்படி திரும்ப வந்திருக்கிறாய். மோகன் மற்றும் சாக்ஷி இருவரும் எங்களை பழிவாங்க வந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு இதை நான் நேற்றே கூறி விட்டேனே என கவின் கூறுகிறார். அப்போது பேசிய அபிராமி, நான் உங்களுடன் ஜாலியாக இருக்க வந்திருக்கிறேன். அவர்கள் ப்ரீ பிளானுடன் வந்துள்ளார்கள் என கூறுகிறார்.

இரண்டாவது புரொமோவில், வனிதா - லாஸ்லியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது காட்டப்படுகிறது. இதில் வனிதாவுடன் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவுடன் மோதுகிறார் ஷெரின். லாஸ்லியாவின் அரோகன்ஸ், ஆட்டிட்யூட் தன்னை மிகவும் காயப்படுத்துவதாக, புதிய விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் முன்னாள் போட்டியாளர்களான சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் ஆகியோரிடன் புகார் அளிக்கிறார் ஷெரின். இன்றைய டாஸ்க்கில் அவர்கள் தான் நடுவர்கள் என்பது தெரிகிறது. பின்னர் லாஸ்லியாவை, கவின் சமாதானப்படுத்துகிறார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.