டிஷர்ட்டை வைத்து 'குருநாதர்' செய்த இன்டர்னல் பாலிடிக்ஸ்..சாண்டி மனைவி மூலம் அம்பலமான உண்மை

டிஷர்ட்டை வைத்து 'குருநாதர்' செய்த இன்டர்னல் பாலிடிக்ஸ்..சாண்டி மனைவி மூலம் அம்பலமான உண்மை

பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சி பற்றி இப்போதெல்லாம் எபிசோடுக்கு எபிசோட் பேசியாக வேண்டிய கட்டாயத்திற்கு நம்மைத் தள்ளி விடும் அளவிற்கு நிகழ்ச்சி சூடாக போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை இருந்த இடம் தெரியாமல் தர்ஷனை காதல் பார்வை பார்த்து வருவதே போதும் என கன்டென்ட் தந்த ஷெரின் நேற்று முதல் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறார்.

வனிதாவின் வார்த்தை தேர்வுகளில் நடந்த குளறுபடிதான் என ப்ரோமோக்களில் பார்த்த நிலையில் நேற்று அழுத்தம் திருத்தமாகவே இன்னொரு காதலி இருப்பவனோடு நீ வைத்துக் கொண்டிருக்கும் உறவிற்கு பெயர் affair என ஷெரின் முகத்துக்கு நேரேயே வனிதா கூறி விட பிரச்னை முற்றிக் கொண்டு போகிறது.

இதற்கு முன்பிருந்தே ஷெரின் அடிக்கடி வனிதாவிடம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதும் அழுவதும் துடிப்பதுமாகவே இருந்தார். அப்படி அவர் இருந்ததற்கு ஆதி காரணம் என்ன என்றால் சாண்டி க்ரூப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட டிஷர்ட்கள்.

எனக்கு அவளை பார்க்க இஷ்டம் இல்லை.. லாஸ்லியா அம்மா கருத்து - இலங்கைக்கு விரைந்த பிக்பாஸ் குழு

Youtube

வி ஆர் தி பாய்ஸ் என்றும் குருநாதா என்றும் அச்சிடப்பட்ட டீஷர்ட்களை அணிந்து சாண்டி, கவின், தர்ஷன், முகேன் மற்றும் லாஸ்லியா அனைவருமே ஒன்றாக காணப்பட்டார்கள். இதனைக் கண்ட ஷெரினிற்கு மனம் உடைந்தது. ஆரம்பத்தில் இருந்தே கவின் ஷெரீனை காரணமே இல்லாமல் நாமினேட் செய்து வந்தார்.

அப்போதும் கவினுக்கும் சாண்டிக்கும் மன வருத்தம் வந்தால் எதனையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் போய் ஆறுதல் சொல்லி வந்தவர் ஷெரின். ஆனால் அவரை அவர்கள் க்ரூப்பில் சேர்க்கவில்லை என்றும் தனக்கு ஏன் டிஷர்ட் வரவில்லை என்றும் ஷெரின் அடிக்கடி வனிதாவிடம் புலம்பி வந்தார்.

இதனால் வனிதாவுக்கு கோபம் வந்தது. இது இப்போது முக்கியமா உன் விளையாட்டை நீ விளையாடு என்றார். அதுவே சண்டையிலும் தொடர்ந்து எதிரொலித்தது. இந்த விஷயத்தில் வனிதாவின் கோபம் ஷெரின் பக்கம் ஆதரவாகவே நின்றது. ஆனால் அதனை ஷெரின் புரிந்து கொள்ள முயலும்முன்னர் affair என்கிற தவறான வார்த்தை பிரயோகத்தால் வனிதா ஷெரின் நட்பு விரிசல் அடைந்தது.

லாஸ்லியாவின் இன்னொரு இலங்கைக் காதலர் பெயர் தர்ஷன்..இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி தகவல் !

Youtube

இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களில் ஒருவர் சாண்டி மனைவியான சில்வியாவிடம் நீங்க ஷெரீனுக்கும் ஒரு டிஷர்ட் அனுப்பிருக்கலாமே வனிதா தொல்லை தாங்கமுடியல என்று கூறினார். இந்த டிஷர்ட் விஷயம் இவ்வளவு பெரிதாக ஆகும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.

12 பேர் உள்ள இடத்தில் இந்த ஐந்து பேருக்கு மட்டும் அதிலும் லாஸ்லியாவையும் இணைத்து டிஷர்ட் கொடுத்தனுப்பிய சாண்டி மனைவி இதற்கு பதில் அளித்திருக்கிறார். நான் 6 டிஷர்ட் தான் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர்கள் ஐந்து தான் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் அந்த பதில்.

அதற்கான ஸ்க்ரீன் ஷாட்டை இணைத்து அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டிருக்கிறார். அந்த ஐடி சில்வியாவின் ஐடிதான் என்று தெரிகிறது. இதை வைத்து பார்க்கும்போது சில்வியா அனுப்பிய டிஷர்ட்டை வைத்து பிக் பாஸ் தனியாக ஒரு கன்டென்ட் தயார் செய்திருக்கிறார். அதன் மூலம் ஷெரீனை அவர்களிடம் இருந்து பிரித்திருக்கிறார். இதனால் ஷெரின் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார் என்பது புரிகிறது.

ஷெரின் எனும் சிறு குழந்தைக்கு இந்த மனவேதனையை ஏன் அவருடைய "பிக்கி" பாஸ் அளித்தார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                   

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன