நக அலங்காரம் – உங்கள் நகங்களை அலங்காரம் செய்ய பல வகை யோசனைகள் மற்றும் டிசைன்கள்!

நக அலங்காரம் – உங்கள் நகங்களை அலங்காரம் செய்ய பல வகை யோசனைகள் மற்றும் டிசைன்கள்!

இன்று இருக்கும் இளம் பெண்கள் தங்கள் நகங்களுக்கு வெறும் வண்ணம் பூசுவது மட்டுமல்லாது, சற்று வித்தியாசமாகவும் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். பல பெண்கள் தங்கள் கை விரல் நகங்களுக்கும், கால் விரல் நகங்களுக்கும், அதிக முக்கியத்துவம் கொடுத்து, பராமரிகின்றனர். அந்த வகையில், நகங்களை, சீரான வடிவத்தில் வைத்துக் கொள்வது, அவ்வப்போது சுத்தம் செய்வது மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்று பல முயற்சிகளை செய்கின்றனர்.

இந்த வகையில், ஒரு படி அதிகமாக சென்று. நகங்களுக்கு வெறும் வண்ணம் பூசுவதை மட்டும் செய்யாமல், இன்று வந்திருக்கும் நவீன அலங்கரிக்கும் முறைகளை பெரிதும் விரும்பி, தங்கள் நகங்களை மேலும் அழகுபடுத்துகின்றனர். இந்த முயற்சி நல்ல பலனையும் தருகின்றது. ஆனால், நீங்கள் அழகு நிலையங்களுக்கு சென்று இப்படி நகத்தை அழகு படுத்திக் கொள்ள எண்ணினால், நிச்சயம் அதற்கான செலவுகள் சற்று அதிகமே. எனினும், நீங்களே, வீட்டில் உங்களுக்கு பிடித்தது போல நக அலங்காரங்கள்(nail art) செய்து கொள்ளலாம். இந்த தொகுப்பு உங்களுக்காக சில யோசனைகளையும், டிசைன்களையும்(design) வழங்கும். இது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

Table of Contents

  நக அலங்காரத்தை தேர்வு செய்வது?(Guide to choosing nail art designs)

  இந்த நக அலங்காரம் அறிமுகமான நாளில் இருந்து, இன்று பல வகைகளும், வடிவங்களும், புதுமையான முறைகளும் வந்து விட்டது. இது பெண்களுக்கு ஒரு பெரிய குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. ஏனென்றால், அவை அனைத்தும் அழகாகவும், அற்புதமாகவும் உள்ளது. எனினும், இது தவிர்த்து, தங்கள் விரல்களுக்கு எந்த வடிவம் பொருந்தும், எந்த விதமான அலங்காரத்தை தேர்வு செய்வது, எவ்வளவு செலவாகும், எத்தனை நாட்கள் இந்த அலங்காரம் நீடிக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் உங்களுக்கு எழலாம். இதனால், சில நேரங்களில் நீங்கள் தவறான தேர்வையும் செய்து விடக் கூடும்.  

  இங்க நக அலங்காரத்திற்கு எந்த கட்டுபாடுகளும் இல்லை. இது முழுக்க முழுக்க உங்கள் கற்பனையையும், விருப்பத்தையும் சார்ந்தது. உங்கள் கண் முன் வைக்கப்படும் வடிவம் மற்றும் அலங்காரத்தை தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றில்லை. அதனை ஒரு அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் உங்களது கற்பனையில் புதிதாக ஒன்றையும் உங்களுக்கு பிடித்தார் போல உருவாக்கலாம். அப்படி செய்யும் போது, உங்கள் நக அலங்காரம் தனித்துவம் பெறுகின்றது. மேலும் இது சுவாரசியமாகவும், பலரும் ரசிக்கும் வகையிலும் இருக்கும்.

  நீங்கள் உங்களுக்கான நக அலங்காரத்தை சரியாக தேர்வு செய்ய எண்ணுகின்றீர்களா? அப்படி என்றால், உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள் இங்கே:

  • தொழில் ரீதியான நக அலங்காரங்கள் அழகாக இருக்கும். அது நல்ல தோற்றத்தையும் தரும் எனினும், அதை கவனித்துக் கொள்ள நீங்கள் அதிக நேரம் செலவிட் வேண்டும்
  • பிரஞ்சு நக அலங்காரம், அக்ரிலிக் அலங்காரம், ஷெல்லாக் நாகல் அலங்காரம் என்று பல வகைகள் உள்ளன. இதில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவார சரியாக தேர்வு செய்ய வேண்டும்
  • நீங்கள் அணுகும் அழகு நிலையத்தில் எந்த விதமான நக அலங்காரம் செய்வார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்
  • அழகு நிலைய நிபுணர் உங்களுக்கு வண்ணம், மற்றும் அழகார வடிவமத்தை பரிந்துரைக்கும் போது, உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்யுங்கள்
  • எப்போது உங்களுக்கு பிடித்த அலங்காரத்தை தேர்வு செய்வதை விட, உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற மற்றும் விரலுக்கு அழகு தரும் ஒன்றை தேர்வு செய்வதே நல்லது
  • மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையிலோ அல்லது மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காகவோ தேர்வு செய்யாதீர்கள். உங்கள் விரலுக்கு எது அழகாக இருக்கும் என்று பார்த்து தேர்வு செய்தால், அது நிச்சயம் பிறரை தானாகவே ஈர்க்கும்
  • வழக்கமாக அனைவரும் தேர்வு செய்யும் அலங்காரத்தை நீங்களும் தேர்வு செய்யாமல், சற்று மாறுபட்டு, தனித்துவம் உள்ள ஒரு அலங்காரத்தை தேர்வு செய்வது முக்கியம். எப்போதும் உங்களுக்கென்றே ஒரு தனித்துவத்தோடு இருப்பது நல்லது  
  • நக அலங்காரத்திற்கு நீங்கள் தேர்வு செய்யும் நிறம் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த நிறம் உங்கள் சரும நிறத்தோடு ஒத்து போவதோடு, உங்கள் அழகை மேலும் அதிகப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். அதனால் சரியான நிறத்தை அல்லது நிறங்களை தேர்வு செய்ய வேண்டும்
  • நீங்கள் உங்கள் நக அலங்காரத்தை, அதை செய்து கொள்ளும் காரணத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் திருமண விழாவில் கலந்து கொள்ள நக அலங்காரம் செய்ய விரும்பினால், அதற்கு ஏற்ற நிறம் மற்றும் அலங்காரத்தை தேர்வு செய்ய வேண்டும். அல்லது வேறு ஏதாவது விழாவில் கலந்து கொள்ள விரும்பி, நக அலங்காரம் செய்ய எண்ணினால், அந்த விழாவின் வகை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். இப்படி செய்தால், நீங்கள் சரியான தேர்வை செய்யலாம்
  • நீங்கள் அணியும் ஆடைக்கேற்ப நக அலங்காரத்தை தேர்வு செய்ய வேண்டும். இதுவும் உங்கள் அழகை மேலும் அதிகப்படுத்தவும். நக அலங்காரத்தை மேம்படுத்தி காட்டவும் உதவும்
  • நீங்கள் அலுவலகம் செல்பவராக இருந்தால், அதற்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். இது மிகவும் எளிமையாகவும், அதிகம் கவர்ச்சி இல்லாமலும், இருக்க வேண்டும். மேலும் அலுவலகம் செல்பவர்கள் தேர்வு செய்யும் நிறத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • பல நக அலங்கார வகைகள் உள்ளன. அவற்றை நன்கு ஆராய்ந்து உங்களுக்கு எது ஏற்றதாகாக இருக்கும் என்று பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஏதோ ஒன்றை தேர்வு செய்வதால், அது தவறான தேர்வாகவும் போய் விடலாம்
  • இவை அனைத்திற்கும் மேல், நீங்கள் செய்யும் செலவும் உள்ளது. ஒவ்வொரு அழகு நிலையங்களிலும், நக அலங்காரத்திற்கு விலை நிர்ணயிப்பார்கள். அதனால், நீங்கள் ஒரு அழகு நிலையத்தை தேர்வு செய்யும் முன், அவர்களது விலை பட்டியலை தெரிந்து கொண்டு, அது உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்று பார்த்து பின் செய்து கொள்ளலாம்  
  • தரம். நக அலங்காரம் செய்யும் போது தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால், அது கால போக்கில் சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.  
  • அழகு நிபுணர் தேர்வும் முக்கியம். ஏதோ ஒரு நிபுணரை அணுகாமல், நல்ல தேர்ச்சி பெற்ற மற்றும் சான்றுள்ள நிபுணரை அணுகுவது நல்லது. இது அவருக்கு இந்த துறையில் நல்ல அனுபவும் உள்ளதையும், சிறந்த சேவையை செய்வார் என்பதையும் உறுதி செய்யும்  
  • வீட்டில் செய்து கொள்ளலாம். உங்களுக்கு அழகு நிலையத்திற்கு சென்று நக அலங்காரம் செய்ய விருப்பம் இல்லையென்றால், வீட்டிலேயே நீங்கள் செய்து கொள்ளலாம்.  

  விழாவிற்கான நக அலங்கார தேர்வு முறை(Tips for special occasion)

  Pexels

  பார்பதற்கு பல வேலைபாடுகளை கொண்டுள்ளது என்பது போல தோன்றினாலும், நக அலங்காரம் மிகவும் எழுதானந்து. மேலும், எளிதாக இதை செய்து விடலாம் என்றாலும், இதன் பலன் அற்புதமானதாக இருக்கும். அந்த வகையில், நீங்கள் தேர்வு செய்யும் நக அலங்காரம், எளிமையனதோ, அல்லது பல வேலைபாடுகளை கொண்டுள்ளதோ, அது நிச்சயம் உங்கள் விரல்களுக்கு அழகை சேர்க்கும்.

  நீங்கள் சிறப்பு விழாக்களில் கலந்து கொள்ள போகின்றீர்கள், அதனால் அதற்கான ஒரு சரியான நக அலங்காரத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றால், உங்களுக்காக இங்கே சில குறிப்புக்கள்:

  • பிறந்தநாள் விழாவிற்கு நீங்கள் நல்ல பிரகாசமான நிறத்தை தேர்வு செய்யலாம்.
  • நீங்கள் வெளிர் நிறத்தில் ஆடை அணியப்போகின்றீர்க்ள என்றால் அடர் நிற நக அலங்காரத்தை தேர்வு செய்யலாம்
  • இது போன்று முறையான ஆடை அணிந்து, அலுவலக விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், பிரகாசமான, அதே நேரம் அதிக வெளிர் நிறமாகவும் இல்லாத ஒரு நிறத்தை தேர்வு செய்யலாம். இந்த வகை நக அலங்காரம், இயல்பாகவும், அதிக அலங்காரம் இல்லாமலும் இருக்க வேண்டும்  
  • திருமணத்திற்கு நக அலங்காரம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் அதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கும் அலங்காரங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அலங்காரத்தில் நக பூசு மற்றும் அல்லது, பல வகை அலங்கார பொருட்களும் பயன்படுத்தப் படும். அதனால் கூடுதல் அழகு கிடைக்கும்
  • மேலும், நீங்கள் இன்னும் கவர்ச்சியான அலங்காரம் செய்து கொள்ள விரும்பினால், அதற்கென்று பல அலங்காரங்களும், டிசைன்களும் உள்ளன. அவை சற்று விலை அதிகமாக இருந்தாலும், நீங்கள் விரும்பும் தோற்றத்தை நிச்சயம் தரும். மேலும் அது உங்கள் விழாவையும் சிறப்பிக்கும்
  • உங்களுக்கு ஒரு அலங்காரம் பிடித்துல்லாது, ஆனால், அதனை அப்படியே பயன்படுத்தினால், உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்ற குழப்பம் இருந்தால், நீங்கள் அந்த அலங்காரத்தை தேர்வு செய்து அதில் சில மாற்றங்களை உங்களுக்கு பிடித்த வகையில் செய்து கொள்ளலாம்
  • நீங்கள் இணையதளத்திலும் பல அலங்கார வகைகள் மற்றும் டிசைன்கலை காணலாம். அவற்றில் இருந்தும் உங்களுக்கான தேர்வை செய்யலாம்
  • உங்கள் அலங்காரம், கவர்ச்சியாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும் என்றால், அதில் உங்களது கற்பனையும் சற்று கலந்திருக்க வேண்டும். மேலும் அலங்கார நிபுணரின் ஆலோசனையையும் பெற்றுக் கொள்வது நல்லது

  நக அலங்காரத்தை பாதுகாப்பது(Maintenance of nail art designs)

  Pexels

  நக அலங்காரம் செய்து கொண்டால் மட்டும் உங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. நீங்கள் நீண்ட கால பலன் பெற வேண்டும் என்றால், அந்த அலங்காரத்தை பாதுக்காக்கவும் வேண்டும். அதற்கு நீங்கள் சில முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி பாதுகாத்தால், அது மேலும் பல நாட்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் நீடிக்கும்.

  உங்கள் நக அலங்காரத்தை பாதுகாக்க, உங்களுக்காக இங்கே சில எளிய குறிப்புகள்;

  • உங்கள் பாதுகாப்பு முயற்சிகள் நீங்கள் எந்த விதமான நக அலங்காரம் செய்து கொண்டீர்கள் என்பதை பொறுத்து இருக்கும். மேலும் நீங்கள் பயன்படுத்திய நக பூசு வகை, மற்றும் அலங்காரம் செய்து கொண்ட முறையும் முக்கியத்துவம் பெரும்
  • மேலும் நீங்கள் அலங்கார பொருட்களை (அலங்கார கற்கள், மினுமினுக்கும் பொருட்கள், என்று மேலும் பல) அழகு படுத்தும் வண்ணம் பயன்படுத்தி இருந்தால், அதற்கான பாதுகாப்பு மேலும் அதிகமாகும்
  • நீங்கள் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் தினசரி செய்யும் வேலைகளில் மாற்றம் செய்ய வேண்டும்
  • உங்கள் நகங்களை பாதிக்கும் வகையிலான வேலைகளை செய்யக் கூடாது. அது நக பூசை பாதிப்பதோடு, விரைவாக நகங்களையும் உடைந்து விட செய்யும்
  • நக அலங்காரம் செய்த அன்றே அதனை பாதிக்கும் வகையிலான வேலைகளை செய்யக் கூடாது
  • உங்கள் அலங்கார நிபுணரிடம் மேலும் பல ஆலோசனைகள் பெற்று அதன் படி நடந்து கொள்ளலாம்

  நக அலங்காரம் செய்பவர்களுக்கு(Perfect Nail art design for beginners)

  நீங்கள் முதன் முதலில் நக அலங்காரம் செய்து கொள்ள போகின்றீர்கள் என்றால், உங்களுக்காக சில எளிமையான மற்றும் அழகான அலங்கார டிசைன்கள் உங்களுக்காக இங்கே. இவை நிச்சயம் நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்க எளிதாகவும், எதிர் பார்த்ததை போல அழகானதாகவும் இருக்கும்.

  1. மூன் டஸ்ட்

  Pinterest

  இந்த முறையில் நீங்கள் உங்கள் நகங்களுக்கு வண்ணம் தீட்டுவீர்கள். ஒரு பஞ்சை எடுத்து, நக பூச்சை தொட்டு, உங்கள் நகத்தின் மீது வைக்க வேண்டும். அவ்வளவு தான், நக அலங்காரும் தயார். இது ஒரு மிக எளிமையான முறையாகும்.

  2. கைகளால் வரைந்த டிசைன்

  Pinterest

  இது சற்று சுவாரசியமானது. நீங்கள் உங்கள் கைகளாலேயே உங்களுக்கு பிடித்த டிசைனை வரைந்து, அன்றாடும் பயன் படுத்தும் நக பூசை பூசலாம். இது உங்களுக்கு விலை குறைந்த ஒரு முறையாகவும், முதன் முதலில் நக அலங்காரம் செய்பவர்களுக்கு ஏற்ற ஒரு முறையாகவும் இருக்கும். இது உங்களுக்கு ஒரு நல்ல நக அலங்கார அனுபவத்தை தரும். நாளடைவில், உங்களுக்கே எப்படி மேலும் புதுமையான அலங்காரங்கள் செய்வது என்ற ஆர்வம் வந்து விடும்.

  3. டேக்ஸ்சர் நுட்பம்

  Pexels

  இந்த முறையில், நீங்கள் தினசரி பயன்படுத்தும் நக பூசை வைத்து விதவிதமாக உங்களுக்கு பிடத்த வடிவத்தில் நக பூச செய்யலாம். இதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறங்களை பயன்படுத்தலாம். இது ஒரு புதுமையான அலங்காரத்தை பெற உதவும்.

  4. ஏர் பிரஷ்

  Pinterest

  இந்த முறையில், நீங்கள் நக பூச்சை எளிதாக பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்ப்ரே செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்படும். அதனைக் கொண்டு நீங்கள் நேரடியாக உங்கள் நகத்தின் மீது பூச்சை தெளிக்கலாம். நீங்கள் வீட்டிலேயே இதனை செய்து பார்க்கும் போது, உங்கள் செலவுகளும் குறையும்.

  5. ரெயின்ஸ்டோன் மற்றும் டேகல்ஸ்

  Pinterest

  இந்த முறையில், சிறிய அலங்காரத் துண்டுகள் அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இந்த ரெயின்ஸ்டோன் பூக்களை போன்று இருக்கும். ஆனால் டேகல்ஸ் உங்கள் நகத்தின் மீது ஓட்டும் அலங்கார பொருள். இவை இரண்டையும் பயன்படுத்தி நீங்கள் அலங்காரம் செய்யும் போது நல்ல தோற்றத்தைப் பெறலாம். மேலும் இது ஒரு மாறுபட்ட தோற்றத்தையும் உங்கள் நகதிற்குத் தரும்.

  6. துளையிட்டு அலங்காரம் செய்வது

  Pinterest

  இது காதுகளில் துளையிட்டு காதணிகள் போட்டு அலங்காரம் செய்வது போல, உங்கள் நகத்தில் மெல்லிய துளைகள் போட்டு, அலங்கார பொருட்களை பயன்படுத்தி, நக பூச்சுடன் மேலும் அழகுபடுத்தும் முறை. எனினும், நீங்கள் சரியான நிறம் மற்றும் சரியான அலங்கார பொருட்களை தேர்வு செய்தால் மட்டுமே, எதிர் பார்த்த பலனைப் பெர முடியும்.

  7. ஷைன் மற்றும் ஸ்பார்க்கள் –பிரகாசமான அலங்காரம்

  Pexels

  இந்த அலங்காரத்தில் திடமான நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக மேல் போச்சு நல்ல பிரகாசமாக இருக்கும் வகையில் தேர்வு செய்யப்படுகின்றது. இது நல்ல மினுமினுக்கும் தோற்றத்தை தரும். நீங்கள் ஒரே நிறத்தை பயன்படுத்துவதை விட, ஒன்றுக்கும் மேலான நிறங்களை பயன்படுத்தி நல்ல தோற்றத்தைப் பெறலாம். இது விழாக்களில் கலந்து கொள்ள ஒரு ஏற்ற அலங்காரமாகும்.

  8. நெகடிவ் ஸ்பேஸ்

  Pinterest

  இந்த அலங்காரம் பல வடிவங்கள் மற்றும் கோடுகள் கொண்டது. எனினும், இதனை தேர்வு செய்யும் முன், உங்கள் நகத்திற்கு இது ஏற்றதாக இருக்கும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு பாதி நகத்திற்கு ஒரு நிறத்தையும், மறு பாதிக்கு மற்றுமொரு நிறத்தையும் பயன்படுத்தலாம்.  இதற்கு நீங்கள் மெட்டாலிக் பூச்சும் தரலாம். மேலும் நல்ல அழகைத் தரும்.

  9. மெட்டாலிக் பிரான்சீ

  Pinterest

  இந்த அலங்காரம் மெட்டாலிக் நக பூச்சை பயன்படுத்தி செய்யப்படும். எனினும், அடிப்படை பூச்சு கொடுத்த பிறகு, அதன் மேலே மேலும் நல்ல தோற்றம் பெற சற்று பலபலப்பான பூச்சு தர வேண்டும்.

  10. வடிவியல் வடிவங்கள்

  Pinterest

  இது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். இதில் நீங்கள் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று உங்களுக்கு பிடித்த வடிவங்களை வரையலாம். மேலும் இதற்கு நீங்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நிறங்களையும் பயன்படுத்தலாம். இது நல்ல அழகிய தோற்றத்தைத் தரும். மேலும் மற்ற அலங்காரங்களில் இருந்தும் இது மாறுபடும்.

  11. க்யுடிகால்

  Pexels

  இந்த அலங்காரத்தில் மெல்லிய தூரிகையை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த நக பூச்சை தொட்டு மெதுவாக கோடுகளை போடவேண்டும். இது மிகவும் எளிதான ஒரு அலங்காரமாகும். மேலும் இது நல்ல சுவாரசியமாகவும் இருக்கும்.

  12. குறுக்கு கோடுகள்

  Pinterest

  இந்த அலங்கார முறையில், அதிக குறுக்கு கோடுகள் போடப்படும். அடிப்படை பூச்சு ஒன்றை கொடுத்து, அதன் மேலே வேறு ஒரு நிறத்தில் பல கோடுகள் குறுக்கு வாக்கில் போடப்படும். இந்த கோடுகளாய் போட நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறங்களை பயன்படுத்தலாம். இது மேலும் புதுமையாக இருக்கும்.

  13. ஒரு நக அலங்காரம்

  Pinterest

  இது சற்று வித்யாசமானது என்று கூறலாம். இந்த முறையில், ஒரு நகத்தை மட்டும் தேர்வு செய்து அதற்கு அலங்காரம் செய்வது என்று கூறலாம், அல்லது ஒவ்வொரு நகத்திற்கும், ஒவ்வொரு அலங்காரம், மாறுபட்டு செய்வது என்றும் கூறலாம். எனினும், அடிப்படையில், அனைத்து நகங்களுக்கும் ஒரே டிசைன் போடப்படாது.

  14. லைன் அப்

  Pinterest

  இந்த முறையில், நேராகவும், குறுக்காகவும் கோடுகள் போடப்படும். மேலும் ஒவ்வொரு கோடுகளுக்கும், வெவ்வேறு நிறங்களை பயன்படுத்தலாம்.

  வீட்டில் செய்து கொள்ள குறிப்புகள்(Guide your own nail art design at home)

  Pexels

  அழகு நிலையங்களுக்கு சென்று அலங்காரம் செய்து கொள்வது என்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லாத ஒன்று. ஒரு சிலருக்கு நேரமின்மை காரணமாக இருக்கலாம், சிலருக்கு அதிக விலை காரணமாக இருக்கலாம். எனினும், இந்த நக அலங்காரத்தை நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ள கற்றுக் கொண்டு விட்டால், பின் நீங்கள் விரும்பிய அலங்காரத்தை எப்போது வேண்டுமானாலும் நீங்களே செய்து கொள்ளலாம். இதனால் உங்கள் நேரமும், பணமும் அதிகம் சேமிக்கப்படும்.

  உங்களுக்கு உதவ, இங்கே உங்களுக்காக நக அலங்காரம் செய்ய படிப்படியான குறிப்புகள்:

  1. முதலில் உங்கள் நகங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்
  2. நக அலங்காரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொள்ளுக்னால்
  3. நீங்கள் நக பூச்சு போட்டிருந்தால், அதனை முதலில் அகற்ற வேண்டும்
  4. பின் உங்கள் நகங்களை சுத்தம் செய்ய வேண்டும்
  5. பின் உங்கள் நகத்திற்கு ஒரு நல்ல வடிவம் தர, ட்ரிம் செய்ய வேண்டும்
  6. நக அலங்காரம் செய்வதற்கு முன், அடிப்படை பூச்சு தர வேண்டும். இது நீங்கள் பூசும் நிறத்திற்கு அதன் உண்மை தோற்றத்தை எதிர் பார்த்த படி பெற உதவும்
  7. மேலும் இந்த அடிப்படை பூச்சு தரும் போது, நகத்தில் ஏதாவது சேதம் இருந்தால், அதனை சமப்படுத்தவும் இது உதவும். அதனால், நல்ல சீரான தோற்றத்தை நீங்கள் நக அலங்காரத்தில் பெறலாம்
  8. நீங்கள் முதன் முதலில் அலங்காரம் செய்கின்றீர்கள் என்றால், எளிமையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது
  9. ஸ்டிக்கர்கள் பயன்படுத்தி நக அலங்காரம் செய்ய முயற்சி செய்யலாம். அதனால், பூச்சு மற்ற இடங்களில் படாமல், நீங்கள் எண்ணியபடியே நல்ல வடிவம் பெற உதவும்
  10. தேவைப்பட்டால், உங்கள் நகத்திற்கு நீங்கள் சில அலங்கார பொருட்களை பயன்படுத்தி மேலும் அழகுபடுத்தலாம். எனினும், தொடக்க நிலையில் இருப்பவர்கள் இதனை பின்னர் முயற்சி செய்யலாம்
  11. நல்ல பிரகாசிக்கும் அலங்கார பொருளையும் நீங்கள் பயன்படுத்தலாம். அதனை எளிமையாக நகத்தின் மீது ஒட்டி விடலாம்
  12. இன்னும் எளிமையாக, அலங்கார பொருட்கள் இல்லாமல், நல்ல மினுமினுக்கும் நக பூச்சை பயன்படுத்தி நீங்கள் பொட்டு அல்லது சிறிய வட்டங்களை வைக்கலாம். இது சற்று வித்யாசமான அலங்காரமாகவும், எளிமையானதாகவும் இருக்கும்
  13. இந்த புள்ளிகளாய் நீங்கள் பூக்கள் போன்றும் வடிவமைத்து, மேலும் அழகுபடுத்தலாம்
  14. இந்த வடிவம் மட்டுமல்லாது, நீங்கள் பல வண்ணங்கள் பயன்படுத்தி ஒரு கலவையான வடிவத்தை உண்டாக்கலாம். இது சற்று சுவாரசியமாக இருக்கும்  
  15. தண்ணீர் நிறத்தின் தோற்றத்தை தரலாம். இதற்கு நீங்கள் அடிப்படை நிறமாக வெள்ளையை பயன்படுத்த வேண்டும். அதன் மீது நீங்கள் விரும்பும் பிற நிறத்தை பயன்படுத்தலாம்.
  16. இது மட்டுமல்லாது நீங்கள் உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு மேலும் பல வடிவங்கள் மற்றும் அலங்காரங்களை செய்யலாம்.

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. ஜெல் பாலிஷ் பலன் என்ன?
   நக அலங்காரத்திற்கு ஜெல் பாலிஷ் பயன்படுத்தப்படுகின்றது. இது நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதால், இது அதிக அளவு நக அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இது நான்கு வாரங்களையும் கடந்து நீடித்து இருக்கும். இது எளிதாக உடைந்து விடாது. மேலும் இது மற்ற நக பூச்சு போன்று உரிந்து வராது. இது நல்ல திடத் தன்மையோடு இருக்கும்.
  2. எப்படி உங்கள் சரும நிறத்திற்கு ஏற்றவாறு நக பூச்சை தேர்வு செய்வது?
   நீங்கள் மாநிறம் கொண்டவராக இருந்தால், அதிக அடர்த்தியும், இல்லாமல், பிரகாசமும் இல்லாமல் ஒரு நிறத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் பிங்க், நீளம், பரப்பில், ஊதா போன்ற நிறங்களை தேர்வு செய்யலாம். சிவப்பு நிறமும் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
  3. நக அலங்காரம் செய்ய என்ன தேவைப்படுகின்றது?
   நீங்கள் வீட்டிலேயே நக அலங்காரம் செய்து கொள்ள எண்ணினால், அதற்கு சில பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அவை: நக பூச்சு சரி செய்யும் கோல், நக பூச்சு அகற்றும் திரவம், ஸ்ட்ரிப்பிங் டேப், தூரிகை, புள்ளிகள் வைக்கும் கருவி, பரிமாற்ற தகடுகள், தூரிகை, நக பூச்சு என்று மேலும் பல.
  4. எந்த நக வடிவம் சிறந்தது?
   வட்ட வடிவம் சிறந்த வடிவமாக கருதப்படுகின்றது. அல்லது நீள வட்டம் அல்லது முட்டை வடிவம் பெரும்பாலும் பெண்களால் தேர்வு செய்யப்படும் வடிவமாக உள்ளது. உங்கள் விரல்கள் நீளமாகவும், சற்று பெரிதாகவும் இருந்தால், நீங்கள் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களையும் தேர்வு செய்து உங்கள் நகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.

   

  மேலும் படிக்க - அக்ரிலிக் நகங்களை எப்படி அகற்றுவது? வீட்டு குறிப்புகள்!

  பட ஆதாரம்  - Pixabay

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

  மேலும் படிக்க - பளிச்சிடும் அழகான நகங்களை பெற செய்ய வேண்டியவைகள்!