பளிச்சிடும் அழகான நகங்களை பெற செய்ய வேண்டியவைகள்!

பளிச்சிடும் அழகான நகங்களை பெற செய்ய வேண்டியவைகள்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம்(nails) அதை வெளிக் காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.  நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம்(nails) கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

உணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.


கை நகத்தை பராமரிப்பதாற்காக டிப்ஸ்
1. நகங்களை(nails) வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். 

2. தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை(nails) வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். 


3. அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம். நகங்கள்(nails) அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும். 


4. கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில்(nails) தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். 

5. மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை(nails) தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும். 

6. நகங்கள்(nails) உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.


கால் நகங்களை பாதுகாக்கும் முறை
1. கால் நகங்களை(nails) சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள்(nails) சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.


2. நகங்களை(nails) சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில்(nails) உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன.


3. குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை(nails) சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள்(nails) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.


4. காலணிகளை அதிகம் உபயோகிப்பவராக இருந்தால், அவற்றை நன்றாக உலர வைத்த பின் அணிய வேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக ஈரப்பதம் படும் வகையிலும் மற்றும் பாதங்களை மூடி வைப்பதன் மூலமும், கால் நகங்கள் எளிதில் உடையக் கூடியதாகவும் மற்றும் வறண்டும் போய்விடும். எனவே ஷூக்களிலிருந்து விடுதலை கிடைக்கும் அந்த சில நாட்கள், கால் நகங்களை புத்துணர்வு பெறச் செய்யவும் மற்றும் காலணிகளுக்குள் சுத்தமான காற்று சென்று வரவும் செய்ய வேண்டும். மேலும் பாதங்கள் அதிகமாக வியர்த்தால், அவற்றின் மீது கொஞ்சம் டால்கம் பவுடரை காலையிலேயே தூவி விடுங்கள். இதன் மூலம் பாதங்கள் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பது மட்டுமல்லாமல் நறுமணத்தையும் கொடுக்கும்.


5. நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்.


6. இறுதியாக, கால் நகங்களை சுத்தமாகவும், அழகானதாகவும் காட்சியளிக்கச் செய்ய, தோலின் நிறத்தில் நெயில் பாலிசை போட வேண்டும். அப்பொழுது நகங்கள் புதியனவாக தோற்றமளிக்கும். ஒவ்வொரு வாரமும் பழைய நெயில் பாலிஷை நீக்கிவிட்டு, புதியதாக போட மறந்துவிடக் கூடாது. அவ்வாறு செய்யும் போது நகங்கள் தொடர்ச்சியாக புதியனவாக தோன்றும். அதேப்போல வாரத்திற்கொருமுறை மேற்கூறிய வழிமுறைகளில் நகங்களை சுத்தம் செய்திட வேண்டும்

வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி


சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!


கோடை காலத்தில் பெண்கள் விரும்பும் துப்பட்டா ஸ்டைல்ஸ்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube, shutter stock


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo